டாக்டரை பின்னி எடுத்த கவர்ச்சி நடிகை ஷகீலா!

தன் குடும்பத்தின் கஷ்டங்களை போக்குவதற்காக பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு சினிமாவுக்கு வந்தவர் ஷகீலா.

கதாநாயகியாக நடிக்க விரும்பிய அவருக்கு தமிழில் துண்டு துக்கடா வேடங்களே கிடைத்தன. அதுவும் கவர்ச்சி வேடங்கள்.

90 களில் கவுண்டமணி போன்ற காமெடி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த ஷகிலா,சில்க் ஸ்மிதாவுக்கு ‘டூப்’பாக சில படங்களில் நடித்துள்ளார்.

மலையாளத்தில் காலூன்ற ஆரம்பித்த பின் ஷகீலாவின் சந்தை நிலவரமே வேற லெவலுக்கு சென்றது.

ஷகீலா நடித்த படங்கள் வெளியானால் மம்முட்டி, மோகன்லால் போன்ற சூப்பர் ஸ்டார்கள் கூட தங்கள் படங்களை வெளியிடத் தயங்கும் நிலை இருந்தது.

ஷகீலாவின் ஒரு காட்சியையாவது தங்கள் படங்களில் வைக்க வேண்டும் என்று எண்ணிய இயக்குனர்கள் அதிகம். அதன் பிறகு அவருக்கு வாய்ப்புகள் குறைந்தது .தமிழ் படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வந்த ஷகீலா, சின்னத்திரைகளிலும் தலை காட்டி வருகிறார்.

அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் ஷகீலா தனக்கு நடந்த ’அட்ஜஸ்ட்மென்ட் ’பிரச்சினை குறித்து பேசியுள்ளார்.

டாக்டர் ஒருவர் தன்னிடம் அத்துமீறிய விவகாரத்தையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

’ என்னுடைய அம்மா உடல்நலக்குறைவால் இருந்தார். நான் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். அப்போது டாக்டர் எழுதிய எழுத்துக்கள் சரியாக புரியவில்லை. அதுபற்றி அவரிடம் கேட்டேன். என்பக்கத்தில் திடீரென வந்த டாக்டர், தொடக்கூடாத இடத்தைத் தொட்டார். எதையும் யோசிக்காமல், டாக்டரை அடித்து உதைத்தேன். கடுமையாக திட்டினேன்.எனது சத்தம் கேட்டு வெளியில் இருந்த நர்ஸ் ஓடி வந்து என்னை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.’ என மனம் திறந்தார் , ஷகீலா.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *