டாஸ்மாக் ஏடிஎம்- மக்களை மேலும் மதுவிற்கு அடிமையாக்கும் செயல்: டிடிவி தினகரன்

விளையாட்டு மைதானங்கள், திருமண மண்டபங்கள், இல்ல நிகழ்ச்சிகளில் சிறப்பு அனுமதி பெற்று மது விநியோகிக்கலாம் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, தற்போது தானியங்கி மூலம் மது விற்பனை என்ற தி.மு.க அரசின் அறிவிப்பு கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டாஸ்மாக் கடைகளில் மதுவை நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிக விலைக்கு விற்பதாக வரும் புகார்களை தவிர்க்கவே இந்த தானியங்கி மது விற்பனை என்பது தி.மு.க அரசின் முதிர்ச்சியற்ற சிந்தனையையே வெளிக்காட்டுகிறது. மது பழக்கத்தினால் இளைய சமுதாயம் தினமும் சீரழிந்து வரும் நிலையில் அவர்களையும், பொதுமக்களையும் மதுவின் பிடியிலிருந்து மீட்டெடுக்க என்ன வழி என்பதைப் பற்றி சிந்திக்காமல், தினமும் டாஸ்மாக் மதுவிற்பனை பற்றிய விதவிதமான வினோத அறிவிப்புகளை வெளியிடுவது தமிழக மக்களை மேலும் மதுவிற்கு அடிமையாக்கும் செயலாகவே பார்க்கத் தோன்றுகிறது.

ஆகவே, முதலமைச்சர் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு டாஸ்மாக் மது விற்பனை பற்றி தீர்க்கமான முடிவு எடுப்பதுடன், இளைஞர் சமுதாயத்தை போதைக் கலாச்சாரத்திலிருந்து முழுமையாக விடுவிக்க உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுளார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *