ஈரோடு திண்டல் சக்தி நகரை சேர்ந்தவர் சச்சிதானந்தம். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உறவினரான இவர் மதுபான கிடங்குகளில் இருந்து பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மதுபான பாட்டில்களை விநியோகம் செய்து வருகிறார். மாநில அளவில் இவர் ஒருவரே டாஸ்மாக் கிடங்கில் இருந்து மதுபான கடைகளுக்கு விநியோகம் செய்யும் ஒரே ஒரு ஒப்பந்ததாரராக இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 200க்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்களை சொந்தமாக வாங்கியதாக வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.
அதன் அடிப்படையில் ஈரோட்டில் சச்சிதானந்தம் வீட்டிலும், அவரது செங்கோடம்பாளையம் அலுவலகத்திலும் சோதனை மேற்கொண்டனர்.மேலும் கணக்கில் காட்டாமல் சச்சிதானந்தம் செய்துள்ள முதலீடுகள் குறித்தும் விசாரணை மேற் கொள்ளப்பட்டது. அப்போது சோதனையில் 2.1 கோடி ரொக்கப்பணம் கைப்பற்ற நிலையில் நான்காவது நாள் சோதனையில் டாஸ்மாக் வாகன ஒப்பந்ததாரர் சச்சிதானந்தை வெளியே வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனர்.
சச்சிதானந்தனத்தின் வங்கி கணக்குகள் மற்றும் லாக்கர்களை ஆய்வு செய்ய அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். சச்சிதானந்தம் வைத்துள்ள வங்கிகளுக்கு அழைத்து சென்ற அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் இன்று காலை முதல் அமலாக்க துறை அதிகாரிகள் இரண்டு பேர் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் சச்சிதானந்தம் வீட்டில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.