பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘லவ் டுடே’ திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது. ரசிகர்கள் அந்தப்படத்தை கொண்டாடி தீர்த்தனர்.இளைஞர்கள் மத்தியில் பிரதீப் ரங்கநாதனுக்கு ,தனி ‘கிரேஸ் ‘ உருவானது.
இந்த நிலையில் ‘ஓ மை கடவுளே’ படத்தை இயக்கிய அஸ்வந்த் மாரிமுத்து, ‘இளம் ஹீரோ’பிரதீப் ரங்கநாதனை வைத்து ‘டிராகன்’ என்ற படத்தை டைரக்டு செய்தார்.
இதில் , காயது லோகர், அனுபமா பரமேசுவரன், ஜார்ஜ் மரியன், கே. எஸ். ரவிக்குமார், கவுதம் மேனன், மிஷ்கின் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்தனர்.
கடந்த மாதம் 21- ஆம் தேதி இப்படம் வெளியானது. படத்துக்கு முதல் நாள் ரெஸ்பான்ஸ் இல்லை. இரண்டாம் நாள், ‘மவுத் டாக்’ மற்றும் விமர்சனங்கள் காரணமாக ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுத்தனர். 100 கோடி ரூபாயை தாண்டி வசூல் செய்துள்ளது..
‘டிராகன்’ திரைப்படம் இந்தியில் வரும் 14 ஆம் தேதி வெளியாகிறது. இதற்காக இந்தியில் புதிய ‘டிரெய்லர்’ தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப்படம் வரும் 28 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் என்று தகவல்கள் பரவி வருகிறது. டிராகன் படத்திற்கான டிஜிட்டல் உரிமையை ‘நெட்பிளிக்ஸ்’ நிறுவனம் வாங்கியுள்ளது.
—