டிவிட்டருக்கு வந்தது போட்டியாக வந்தது ப்ளூ ஸ்கை ஆப் – டிவிட்டரை உருவாக்கிய ஜாக் டார்சி அதிரடி

மே.4

உலகம் முழுவதும் உள்ள சமூக வலைதளங்களில் பிரபலமான ஒன்றாக இருக்கும் டிவிட்டருக்குப் போட்டியாக, அதை ஜாக் டார்சியே, ப்ளூ ஸ்கை என்ற புதிய செயலியை உருவாக்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு டிவிட்டர் என்ற சமூக வலைதளத்தை ஜாக் டார்சி உள்ளிட்ட 4 பேர் உருவாக்கினர். குறுகிய காலத்தில் டிவிட்டர் உலகம் முழுவதும் பெரிய விஸ்வரூபம் எடுத்ததைப் பார்த்த, பெரும் கோடீஸ்வரரான எலான் மஸ்க் அதை விலைக்கு வாங்கினார். அதன்பிறகு, டிவிட்டரில் மாற்றங்கள் என்ற பெயரில் பல குழப்பங்களை எலான்மாஸ்க் செய்ததால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியடைந்தனர்.

மேலும், டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியவுடன், முதலில் அந்நிறுவனத்தில் பணியாற்றிய இந்தியர்கள் உட்பட ஏராளமானோரை பணி நீக்கம் செய்தார். டிவிட்டரின் அதிகாரப்பூர்வ அங்கீகாரமாக பார்க்கப்பட்ட புளூ டிக்கினை பெற கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவித்த எலான் மாஸ்க், அண்மையில், பல முக்கிய பிரமுகர்களின் புளூ டிக்கினை நீக்கினார்.

இதேபோல், டிவிட்டரின் லோகோவான குருவிக்கு பதிலாக நாயை அறிவித்தார். தற்போது, அதை நீக்கிவிட்டு மீண்டும் குருவியை இடம்பெறச் செய்துள்ளார்.
டிவிட்டர் தலைமைப் பதவியில் இருந்து விலகட்டுமா என கருத்துக் கணிப்பு நடத்திய எலான் மாஸ்க்கிற்கு, வாடிக்கையாளர்கள் வெளியேறுங்கள் எனக் கூறி பதிலடி கொடுத்த நிலையில், முடிவெதுவும் எடுக்காமல் மவுனம் காத்துவருகிறார்.

இந்நிலையில், தற்போது டிவிட்டரில் முக்கிய கட்டுரைகளை படிக்க கட்டணம் வசூலிக்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பணம் இருப்பவர்கள் மட்டுமே டிவிட்டரை பயன்படுத்த தகுந்தவர்கள் என்ற நிலையை எலான் மாஸ்க் உருவாக்கியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, டிவிட்டரை உருவாக்கிய ஜாக் டார்சி, ப்ளூ ஸ்கை சமூக வலைதள செயலியை வடிவமைத்துள்ளார். இது ஆரம்பக் கால டிவிட்டர் போன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, இதிலிருந்து யாருக்கும் குறுஞ்செய்தி அனுப்ப முடியாது. வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியாது, 300 வார்த்தைகளுக்குள் மட்டுமே பதிவுகளை செய்ய முடியும்.

ஜாக் டார்ச்சியின் இந்த புதிய ஆப்-க்கு சாதாரண பயனர்கள் மட்டுமின்றி பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும், டிவிட்டரை மிஞ்சும் வகையில் பல்வேறு அம்சங்களுடன் ப்ளூ ஸ்கையை மேம்படுத்தும் பணியை ஜாக் டார்சி தீவிரமாக மேற்கொண்டுவருகிறார். புளு ஸ்கை ஆப் தொடக்க விழாவில் பேசிய ஜாக் டார்சி, எலான் மஸ்கிற்கு தலைமைத்துவ திறன் இல்லை என்று விமர்சித்தார். இதனால், தனக்கான தலைமைத்துவ திறனை நிரூபிக்கும் கட்டாயத்திற்கு எலான் மஸ்க் தள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சமூக வலைதளப் போரில், டிவிட்டர், ப்ளு ஸ்கை இரண்டில் எது வெல்லும், எது வீழும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *