டைட்டானிக் பார்க்க ரூ 6 கோடி கொடுத்தவர்களை அமெரிக்கா தேடுகிறது.

அட்லாண்டிக் பெருங் கடலில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலை பார்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் மூன்று பேரை அழைத்துக் கொண்டு, ஓசான் கேட் நிறுவனத்தின் நீர்மூழ்கிக் கப்பல் புறப்பட்டு நான்கு நாட்கள் ஆகிவிட்டனள. அந்தக் கப்பல் கடலில் மாயமாகி விட்டதாக வெளியான தகவல் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது

நீர் மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடித்து அதில் இருந்த மூன்று பயணிகள், இரண்டு பணியாளர்கள் ஆகிய 5 பேரையும் கரைக்கு அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீர்மூழ்கிக் கப்பலை இயக்கும் ஓசோன் கேட் என்ற நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

டைட்டானிக் வரலாறு.

இங்கிலாந்து நாட்டிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு புறப்பட்ட டைட்டானிக் என்ற சொகுக் கப்பல் தனது முதல் பயணத்தின் போதே1912 -ஆம் ஆண்டு ஏப்ரல் 15- ஆம் தேதி பனிப்பாறையில் மோதி விபத்துக்கு உள்ளானது. ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உள்ள அட்லாண்டிக் பெருங்கடலில் இந்த விபத்து நேரிட்டது. கப்பலில் இருந்த 2,224 பேரில் 1,600 பேர் இறந்துவிட்டனர். பல ஆண்டுகள் நடைபெறற தேடுதல் பணிக்குப் பிறகு 1985 ஆம் ஆண்டு அட்லாண்டிக் கடலில் கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

சரியாக 111 ஆண்டுகளுக்கு முன்பு விபத்து நடைபெற்றாலும் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான டைட்டானிக் என்ற ஆங்கில திரைப்படம் அந்த விபத்தை இந்த நூற்றாண்டில் வசிக்கும் மக்கள் முன் கொண்டு வந்தது. பிரபல இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அந்த திரைப்பபடம் மிகப்பெரிய வெற்றிப்படமாகும்.அதன் பிறகு டைட்டானிக் பற்றிய பேச்சு எங்கும் பரவியது..

ஓசோன் கேட்.

கடல் மட்டத்திற்கு கீழே சுமார் 3,800 மீட்டர் ஆழத்தில் டைட்டானிக் கப்பல் உடைந்து கிடக்கிறது. அந்த இடத்திற்கு சுற்றுலாப் பயணிகளை ஓசோன் கேட் என்ற நிறுவனம் சிறிய வகை நீ்ர்மூழ்கி  கப்பல் மூலம்  அழைத்துச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டு உள்ளது.

ஒரு கப்பலில் அதிகபட்சம் ஐந்து பேர் பயணம் செய்யமுடியும். மூன்று சுற்றுலா பயணிகள். இரண்டு பேர் கப்பல் ஊழியர்கள். ஒரு பயணிக்கு கட்டணம் இந்திய ரூபாயில இரண்டு கோடி ஆகும். மூன்று பயணிகளுக்கும் சேர்த்து ஆறு கோடி ரூபாய்.

தற்போது தேடப்படும் ஓசோன் கேட் நிறுவனத்தின் நீர்மூழ்கிக் கப்பல் கனடா நாடடு துறைமுகத்தில் இருந்து கடந்த ஞாயிற்றுக் கிழமை புறப்பட்டது. மூன்று பயணிகள் உட்பட ஐந்து பேர் அந்தக் கப்பலில் இருந்தனர். கனடாவில் இருந்து கிளம்பிய நீர்மூழ்கிக் கப்பல் நடுக்கடலில் கிடக்கும் டைட்டானிக் கப்பலை பார்க்கச் சென்ற போது மாயமாகி விட்டது.

கப்பலில் உள்ளவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான அனைத்து வழிகளையும் ஆராய்ந்து வருவதாக அந்த நிறுவனம் கூறி உள்ளது.அமெரிக்கா மற்றும் கனடா நாட்டுக் கடற்படைகளும் தீவிர  தேடுதல் வேட்டை மேற்கொண்டு உள்ளது.

000

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *