உலக அரசியல் நிலவரம் இப்போது மிகவும் பரபரப்பாகவும் சினிமா போன்றும் சுவாராசியமாகவும் உள்ளது.
மூன்று ஆண்டுகளாக ரஷ்யாவுடன் போரை நடத்தியவர் யுக்ரைன் அதிபர் ஷெலன்ஸ்கி. அவரை கண்டு கொள்ளாமல் உக்ரைன் போரை நிறுத்துவதற்கு ரஷ்ய அதிபர் புடினுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வேலைகளைத் தொடங்கி உள்ளார் டெனால்டு டிரம்ப்.
இதனால் பதறிப்போன ஷெலன்ஸ்கி, அமெரிக்காவை தவிர்த்து ஜரோப்பிய ராணுவத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கதறுகிறா்ர். இதனையும் டிரம்ப் கண்டு கொள்ளவில்லை.
டிரம்பின் அதிரடி அரசியல் குறித்து ஆலோசிப்பதற்காக ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பிப்ரவரி 17 – ஆம் தேதி பாரிசில் கூடி ஆலோசிக்க உள்ளனர்.
இதே டொனால்டு டிரம்ப், பாலத்தீனியர்களின் பாரம்பரிய நிலமான காசா முனையை கைப்பற்றி அங்குள்ள 20 லட்சம் மக்களையும் பக்கத்து நாடுகளுக்கு அனுப்பிவிட்டு அந்த இடத்தில் புதிய கட்டுமானங்களை ஏற்படுத்தி நவீனப்படுத்தலாம் என்ற வார்த்தைக் குண்டையும் கடந்த வாரம் வீசினார். இதனால் பதறிப் போன அரபு நாடுகள் – காசா முனை பாலத்தீனர்களுக்குச் சொந்தமானது, அங்கு உள்ளவர்களை வெளியேற்றலாம் என்ற டிரம்பின் கொள்கைக்கு தங்களின் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள்.
ஊடுறுவலை ஊக்குவிப்பதை தடுக்காவிட்டால் கனடாவை அமெரிக்காவின் 51- வது மாகாணமாக இணைத்துக் கொள்ளவதுப் பற்றி பரசீலிக்கப்படும் என்று ட்ரம்ப் கொளுத்திப் போட்ட மத்தாப்பூவால் கனடா கதறுகிறது.
கொஞ்சம் பார்வையை விரிவுப்படுத்திய ட்ரம்ப் கிரீன்லாந்து தீவை வேண்டுமானால் அமெரிக்கா கைப்பற்றலாம் என்ற ஆசையை சொன்னார். கிரீன்லாந்திற்கு சொந்தம் கொண்டாடும் டென்மார்க் அதெல்லாம் முடியாது என்று அலறுகிறது.
இன்னொருபுரம் ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை கைகளில் விலங்கை பூட்டி ராணுவ விமானத்தில் அவர்களின் நாடுகளுக்கு அனுப்பி வைக்கிறார் டிரம்ப். இதனால் ஒவ்வொரு நாடும் கதறுகிறது.
புதிய வரிவிதிப்புகளை
வெளியிட்டு அவர் ஏற்படுத்தும் பீதி எல்லாரையும் நடுங்கச் செய்து கொண்டிருப்பது வேறு.
டிரம்ப் , அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி 20- ஆம் தேதி பதவியேற்றார். இன்னும் ஒரு மாதம் முழுமையடைவில்லை. அதற்குள் இவ்வளவா ?