ஜுலை,29-
குறைவது போல போக்குக் காட்டிய தக்காளி விலை மீண்டும் உச்சத்தை தொட்டு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து இருக்கிறது. கடந்த மூன்று தினங்கள் முன்பு சில்லறை விற்பனை கடைகளில் கிலோ 130 அல்லது 140 ரூபாய் என்ற நிலையில் இருந்த தக்காளி இப்போது கிலோ 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில் மொத்த விற்பனையில் கடந்த இரு தினங்கள் முன்பு 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி மேலும் 30 ரூபாய் அதிகரித்து 150 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
சென்னை கோயம்பேடு சந்தைக்கு ஆந்திராவில் இருந்து பெருமளவு காயகறிகள்,தக்காளி விற்பனைக்கு வருகிறது. அங்கு கடந்த ஒரு வாரமாக மழை தீவிரமாக பெய்கிறது. இதனால் தக்காளி மற்றும் காய்கறி வரத்து குறைந்து இப்போது உள்ள விலையிலியே விற்கப்படும் சூழல்தான் கண்ணுக்குத் தெரிகிறது
000