தமிழ் சினிமாவில் பிரபலமான இரண்டு ஜாம்பவான்களான
இயக்குநர் மணிரத்னமும் ,‘உலக நாயகன் ‘கமல்ஹாசனும்
1987 ஆம் ஆண்டு வெளியான நாயகன் படத்தில் இணைந்து பணியாற்றினர்.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
இன்றும் நாயகன் சிலாகிக்கப்படுகிறது.அதன்பிறகு இருவரும் இணைந்து பணியாற்ற வில்லை.
நீண்ட இடைவெளிக்கு பிறகு தக் லைஃப் படத்தில் இணைந்துள்ளனர்.கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயிண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும்,
இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.
இந்த நிலையில், படத்தின் முதல் சிங்கிள்நேற்று வெளியானது.‘ஜிங்குச்சா’ என்ற இந்த பாடலுக்கான வரிகளை கமல்ஹாசன்
எழுதியுள்ளார். இது குறித்து வெளியானபோஸ்டரில் கமல்ஹாசன், சிம்புஇருவரும் நடனமாடுவது போன்ற காட்சி இடம்
பெற்றிருந்தது.
தக் லைஃப்’, ஜூன் 3 ஆம் தேதிதிரைக்கு வர உள்ளது.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாஅடுத்த மாதம் 16 -ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும்
என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவிலும் பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழாவை
நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற தக் லைஃப்பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில்,கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா,மணிரத்னம் பங்கேற்றனர்.
—