ரஜினி, விஜய்க்கு நிகராக ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர், அஜித்.
ஆனால் . ஏனோ முற்றும் துறந்த முனிவர் ஆகி விட்டார், ‘அல்டிமேட் ஸ்டார்’.
‘எனக்கு ரசிகர் மன்றமே வேண்டாம், ‘என சொல்லி ,பல ஆண்டுகளுக்கு முன்பே அவற்றை கலைத்து விட்டார்.
சில மாதங்களுக்கு முன்பு ‘ எனக்கு செல்லப்பெயரும் வேண்டாம்..
தல..அல்டிமேட் ஸ்டார்’ என குறிப்பிட வேணாம். ஒண்ணு ‘ ஏகே
‘ன்னு அழையுங்க.. அல்லது அஜித் என்றே கூப்பிடலாம்’ என ஆணையிட்டார்.
அதை எல்லாம் அவரது அணுக்க தொண்டர்கள் கேட்பதாக இல்லை.
அண்மையில் வெளியான அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ டீசர் , அவரது ரசிகர்களுக்கு , ஓர் உயிர்ப்பை கொடுத்துள்ளது.
மதுரை அஜித் ரசிகர்கள் கூட்டமாக சென்னைக்கு திரண்டு வந்து, ‘குட் பேட் அக்லி’ இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனக்கு, தங்க மோதிரம் மாட்டி உள்ளனர்.
அது, 2 பவுன்.
ஆங்கில இணையங்களில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.
அஜித், ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகிறார்கள்,
’குட் பேட் அக்லி’ ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வெளியாகிறது.
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நாலைந்து நாட்களுக்கு
முன்னர் .படம் வெளிவருவதால், அஜித் ரசிகர்கள், பட ரிலீசையும் சித்திரை திருவிழாவுடன் சேர்த்து கொண்டாட முடிவு செய்துள்ளனர்.
–