ஏப்ரல்.25
தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் 25சதவீத இடஒதுக்கீட்டில் எல்.கே.ஜி மற்றும் முதல் வகுப்பு சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மே.18ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டில் எல்.கே.ஜி மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர் அருந்ததியினர் பிரிவு, ஓசி ம்ற்றும் டிஎன்சி உள்ளிட்ட பிரிவினர் தங்களது குழந்தைகளை இத்திட்டத்தின்கீழ் சேர்க்க விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கையைப்பெற, விண்ணப்பதாரர் தமிழகத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும், ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கக்கூடாது, எல்.கே.ஜியில் சேர்க்கப்படும் குழந்தை ஜூலை.31.2017 முதல் ஜூலை.31.2018க்குள் பிறந்திருக்க வேண்டும், முதல் வகுப்பில் சேரும் குழந்தைகள் ஜூலை.31.2015 முதல் ஜூலை.31.2016க்குள் பிறந்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை tnschools.gov.in/rte/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், மே மாதம் 18ம் தேதி விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான சந்தேகங்கள் அல்லது கூடுதல் தகவல்கள் தேவைப்பட்டால், 9962265231 என்ற வாட்ஸ் அப்- எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.