ஜுலை,25-
’ஐஸ்க்ரீம் பேபி’என வர்ணிக்கப்படுபவர் நடிகை தமன்னா. விஜய் தொடங்கி அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்தவர்.
தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். இப்போது ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.அடுத்த மாதம் 10 ஆம் தேதி இந்தப்படம் ரிலீஸ் ஆகிறது.
தமன்னாவும்,இந்தி நடிகர் விஜய் வர்மாவும் காதலித்து வருவதாக தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் இணைந்து ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இரவு நேரத்தில் இருவரும் காரில் சுற்றும் வீடியோக்களும் வெளியானது.
இருவரும் சேர்ந்து ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ எனும் இணையத்தொடரில் நடித்திருந்தனர். அதில் நெருக்கமான காட்சிகள் இடம் பெற்றன.இந்நிலையில் தமன்னாவுடனான காதல் மற்றும் திருமணம் குறித்து விஜய் வர்மா முதன் முறையாக மனம் திறந்துள்ளார்.
விஜய் வர்மாவின் பேட்டி இது:
‘நான் தமன்னாவை வெறித்தனமாக காதலிக்கிறேன். எங்கள் காதல் விவகாரம் வெளியில் தெரிந்த உடன் என் அம்மா எப்போது திருமணம் என்று அடிக்கடி கேட்டுவருகிறார். நான் மார்வாடி சமூகத்தை சேர்ந்தவன் . எங்கள் சமூகத்தில் ஆணுக்கு 16 வயது ஆனதுமே, திருமண பேச்சை ஆரம்பித்து விடுவார்கள்.
எனது திருமணம் குறித்தும் பெற்றோர் பல ஆண்டுகளாக பேசிக்கொண்டுதான் இருந்தார்கள். நடிகனாகி விட்டதால் அந்த பேச்சு ஓய்ந்து இருந்தது. தமன்னாவை காதலிப்பது தெரியவந்துள்ளதால், என் அம்மா,’’ எப்போது திருமணம்?’ என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார்’ என விரிவாக சொல்லியுள்ளார்.
விரைவில் விஜய் வர்மா – தமன்னா திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.