ஜனவரி -05,
‘மில்க் பேபி’ என செல்லமாக அழைக்கப்படும் தமன்னா,தமிழில் ரஜினி, விஜய் ஆகிய உச்ச நட்சத்திரங்களுடன் நடித்தவர்.
‘லஸ்ட் ஸ்டோரி 2’ என்கிற வெப் தொடரில் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் இணைந்து தமன்னா நடித்தார். அப்போது இவர்கள் இருவருக்கும் இடையே காதல் நெருப்பு பற்றிக்கொண்டது.
பெரும்பாலான நட்சத்திர காதல்கள் நான்கு சுவர்களுக்குள் முடிந்து போகும். தமன்னா –விஜய் வர்மா ஜோடியின் காதல் அப்படி அல்ல. கல்யாணம் வரையில் வந்து நிற்கிறது.
இந்த ஆண்டில் இவர்கள் திருமணம் செய்து கொள்ளப்போகிறார்கள்.
இந்த நிலையில் விஜய் வர்மா தனக்கு இருக்கும் அரிய வகை தோல் வியாதி பற்றி மனம் திறந்துள்ளார். என்ன வகையான தோல் வியாதி ?
அவரே சொல்கிறார்.
‘’எனக்கு விடிலிகோ என்கிற விநோத தோல் வியாதி உள்ளது- இது தொற்று நோய் அல்ல – இதனால் எனது முகத்தில் வெள்ளைப் புள்ளிகள் தோன்றும் – அவற்றை மறைக்க மேக்கப், அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்- வியாதி குறித்து தெரிய வந்ததும் முதலில் பயந்து போனேன்
டாக்டர்கள் ‘இது ,கவலைப்படக்கூடிய நோய் அல்ல’ என்று கூறியதால் நிம்மதி அடைந்தேன் – இந்த நோய்க்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகள் எடுத்து வருகிறேன்’என்கிறார், தமன்னாவின் வருங்கால கணவர்.
ஆனாலும் மேக்அப் இல்லாமல் வெளியே செல்ல முடியாத ஆதங்கம், விஜய் வர்மாவுக்கு உள்ளது.
‘இந்த நோய் குறித்து தமன்னாவிடம் சொல்லி விட்டேன் – அவரது ஆலோசனைகளின்படியே சிகிச்சை எடுத்து வருகிறேன்’ என்றும் சொல்கிறார்,விஜய் வர்மா.
காதலியிடம் உண்மையை ஒப்புக்கொண்ட வர்மாவை பாராட்டலாம்.
2025-01-05