தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்இந்தியப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்குத் திசை காற்றும், மேற்குத் திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்றும், நாளையும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி மின்னடலுடன் கூடிய இலேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதேபோல், ஏப்.6 முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை வரை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்,நகரின் ஒரு சில இடங்களில் இலேசான மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், வெப்பநிலை அதிகபட்சமாக 34-35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸாக இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.