தமிழின் முக்கிய சினிமவான சுப்பிரமணிய புரம் மீண்டும் தியேட்டரில் ரிலீஸ், சிறப்பு என்ன ?

ஆகஸ்டு,01-

தமிழ் சினிமாக்கள் பொதுவாக வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகும்.

சசிகுமார் இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூலை நான்காம் தேதி தேதி வெளியான சுப்பிரமணியபுரம், வழக்கமான வெள்ளிக்கிழமை படமல்ல.

16 வயதினிலே, ஒரு தலைராகம் வரிசையில் தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல்லாக கருதப்படுகிறது, இந்தப்படம். கம்பெனி ப்ரொடக்சன் எனும் நிறுவனத்தில் பெயரில் சசிகுமார் தயாரித்து, முக்கிய கேரக்டரிலும் நடித்தார்.

1980- களில் அரசியல் தூண்டுதலால் கொலையில் ஈடுபடும் ஐந்து நண்பர்கள் மற்றும் அந்த சம்பவத்திற்குப் பிறகு அவர்களின் வாழ்க்கை எவ்வாறு மாறுகிறது என்பதைப் பற்றிய கதை. கதாபாத்திரங்களை யதார்த்தமாக சித்தரித்ததற்காக, அனைத்து தரப்பினர்  பாராட்டையும் பெற்றது.

வணிக ரீதியிலான ஹீரோவாக சசிகுமார் வளர்ச்சி அடைந்திருப்பதற்கும், பான் இந்தியா நடிகராக சமுத்திரக்கனி  புதிய உயரத்தை எட்டி இருப்பதற்கும் விதை போட்ட சினிமா, சுப்பிரமணியபுரம். 65 இலட்சம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட, இந்த படம்,.30 கோடி ரூபாய் வரை வரை வசூலித்தது.

ரசிகர்கள் மனதில் ஆழமாக படிந்திருக்கும்  சுப்பிரமணியபுரம் வரும் 4 ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது.

எல்லா காலத்திற்கும் ஏற்ற படம் என்றால் மிகையல்ல !

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *