தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் தலை சிறந்த மாநிலமாக திகழ்கிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

June 08, 23

தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் தலை சிறந்த மாநிலமாக திகழ்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொழிற்சாலைகளில் நவீன தொழில்நுட்பங்களில் தேர்ந்த தொழிலாளர் தேவையை பூர்த்தி செய்யவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் தமிழகத்தில் இயங்கி வரும் 71 தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ 2877.43 கோடி மதிப்பீட்டில் 4.0 தர நிலையிலான தொழில்நுட்ப மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.அதில் 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 762.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்கள் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், ஸ்ரீபெரும்புதூர் ஒரகடம் சிப்காட் பகுதியில் இயங்கி வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் ரூ3.73 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 4.0 தர தொழில்நுட்ப மையத்தை தொடங்கி வைத்தார்.

அப்போது விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டு இளைஞர்கள் டாடா குழும தலைவர் சந்திரசேகரன் எடுத்துக்காட்டாக எடுத்துக் கொண்டு முன்னேற்றம் காண வேண்டும். தமிழ்நாடு என்பது அனைத்து துறைகளிலும் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது. தொழிற்சாலைகளுடன் பல்வேறு பொருளாதார த்துடன் கூடிய மாநிலம், ஆட்டோ மொபைல் , மின்னனு, தகவல் தொழில்நுட்பம், நிதி சேவைகள், மின்னனு வாகனங்கள், தோல் சார்ந்த காலணிகள், அமைப்பு சாரா உற்பத்தி, வங்கி நிதி, காப்பீடு மற்றும் சேவை நிறுவனங்கள், உதிரி பாகங்கள் உற்பத்தி, ஆடைகள் உற்பத்தி ஆகிய அனைத்து துறைகளிலும் தலை சிறந்த மாநிலமாக திகழ்கிறது .

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகளவில் தொழிற்சாலைகளும் தொழிலாளர்களும் இருக்கின்றனர். வளர்ந்து வரும் புதிய துறைகளிலும் தமிழ்நாடு தான் முன்னனியில் இருக்கிறது. விண்வெளி மற்றும் பாதுகாப்பு, வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் மின்னனு வடிவமைப்பு, மருத்துவ மின்னனு சாதனங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதில் தமிழ்நாடு அபரிமித வளர்ச்சி கண்டுள்ளது.

தமிழ்நாடு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகள் மூலமாக உலகலாவிய வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜனவரி 2022 முதல் மே 2023 வரை 110 புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளபட்டு 2 லட்சத்து மூன்றாயிரத்து 279 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு 1,96,596 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டது. இந்த முதலீடுகள் சமூக பொருளாதார வளர்ச்சிக்கும் பங்காற்றும். 2021 ஆம் ஆண்டில் 4,70,613 நிறுவனங்கள் பதிவு செய்த நிலையில், 3,66,393 வேலைவாய்ப்புகள் மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது, அரசின் நடவடிக்கை மூலமாக 2022 ஆண்டு 7,33,296 நிறுவனங்களாக உயர்ந்து, 4,71,4,148 வேலைவாய்ப்புகள் உருவாகி உள்ளது. புதிய புதிய நிறுவனங்கள் தொடங்க தமிழ்நாட்டில் அனைத்தும் கிடைக்கிறது. பொருள் முதலீட்டை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு அமைந்துள்ளது.

எனது கனவு திட்டங்களின் ஒன்று நான் முதல்வன் திட்டம். திறன்மிக்க மனித வள தொழிற்சாலைகளுக்கு தொடர்ந்து கிடைத்திடவும், தமிழ்நாட்டு இளைஞர்கள் உலகளவில் சிறந்த வேலை வாய்ப்பு பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் தொழிற்பயிற்சி நிலையங்கள் வாயிலாக பல்வேறு தொழிற்பிரிவுகளில் திறன் பயிற்சிகளை வழங்கி வருகிறது. மாறி வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப எதிர்கால வேலை வாய்ப்புகளை தமிழக இளைஞர்கள் பெற வேண்டும் என்ற நோக்கில் 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2887.43 கோடி செலவில் திறன் பயிற்சிகளை வழங்கும் வகையில் தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்த விரைந்து செயல்பட்டு வருகிறது. இது தமிழ்நாட்டு தொழில்பயிற்சி நிலையங்களில் மைல்கல்லாக அமைந்துள்ளது.

டாடா டெக்னாலஜிஸோடு இணைந்து புதிய தொழில்நுட்பம் மையத்தின் மூலம் நவீன திறன் பயிற்சிகள் மேற்கொள்ளபட உள்ளன. முதல்கட்டமாக 22 தொழில்நுட்ப மையங்கள் திறந்து வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். உறுதுணையாக இருக்க கூடிய டாடா குழுமத்திற்கு நன்றிகள். இதன் மூலம் ஆண்டுக்கு 5140 மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு பயனடைவார்கள். ஒவ்வொரு ஆண்டும் 10,040 மாணவர்கள் தொழில் 4.0 தரத்தில் தொழிற்பயிற்சி பெறுவார்கள். இதில் பயிற்சி பெறுபவர்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்க பெறும்.

இந்த அரசின் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார நோக்கிய பயணத்தில் மைல்கல். அரசு தொழிற்பயிற்சி மாணவர்கள் மட்டுமல்லாமல் பட்டயம் மற்றும் பட்டபடிப்பு படித்தோரும் குறு, சிறு தொழில் புரிவோரும் இங்கு வழங்கப்படும். குறுகிய கால பயிற்சிகளில் சேர்ந்து தொழில்துறைக்கு தேவையான அதிநவீன தொழில்நுட்பங்களை கற்று பயனடைய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *