ஜனவரி-22.
பெண்களுக்கு மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தல்களில் ஒன்றான டீன் ஏஜ் கர்ப்பங்கள், கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 20% அதிகரித்துள்ளன, இதே வேளையில் மொத்த கர்ப்பங்களின் எண்ணிக்கை 7% குறைந்துள்ளது என்று பொது சுகாதார இயக்குநரகம் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
19 வயதுக்கு குறைவான பெண்களையே நாம் டீன் ஏஜ் பெண்கள் என்று அழைக்கிறோம். அவர்கள் 19 வயதை எட்டும் முன்பே கர்ப்பம் அடைவது கவலைக்கு உரியது என்று சுகாதராத் துறையினரால் கருதப்படுகிறது.
இளம் பருவத்தில் கர்ப்பம் அடைவதைத் தடுக்க பாலியல் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது அவர்களின் பரிந்துரையாக உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2019-20 ஆம் ஆண்டில் 10.2 லட்சமாக இருந்த மொத்த கர்ப்பங்களின் எண்ணிக்கை 2023-24 ஆம் ஆண்டில் 9.5 லட்சமாகக் குறைந்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘
இருப்பினும், 13 முதல் 19 வயதுக்குட்பட்ட கர்ப்பங்கள் – 2019-20 -ஆம் ஆண்டில் 11,772 ஆக இருந்தது 2023-24 -ஆம் ஆண்டில் 14,360 ஆக உயர்ந்துள்ளன. இதற்கு இளம் வயது திருமணம், பாலியல் துஷ்பிரயோகம் போன்றவை காரணமாக கண்டறியப்பட்டு உள்ளது.
மாவட்டங்களில், நாகப்பட்டினம் 3.3% ஆகவும், அதைத் தொடர்ந்து தேனி 2.4% ஆகவும், பெரம்பலூர் 2.3% ஆகவும் உள்ளன.
‘
டீன் ஏஜ்-ல் கர்ப்பம் அடைவது முதிர்ந்த வயதில் பெண்களின் ஆரோக்கியத்தைக் குறைக்கக் கூடும் என்பதும் நிபுணர்களின் கவலையாக உள்ளது.
*