*சிறு, குறு நிறுவனங்களுக்கான பீக் அவர்ஸ் மின் கட்டணத்தில் 15 முதல் 25 சதவிகிதம் குறைப்பு … தமிழக அரசு உத்தரவு.
*பீக் அவர்ஸ் மின் கட்டணக் குறைப்பை ஈடுகட்ட மின் வாரியத்திற்கு ரூ 196 கோடி .. நிதியை ஒதுக்கி தமிழக அரசு நடவடிக்கை.
*தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பேருந்து மூலம் சொந்த ஊர்களுக்கு கடந்த இரு நாட்களில் அரசு பேருந்தில் 3 லட்சத்து 67 ஆயிரம் பேர் பயணம் … திரும்புவதற்காக 2 லட்சத்து 38 ஆயிரம் பேர் முன் பதிவு செய்திருப்பதாகவும் அரசு போக்குவரத்துத் துறை தகவல்.
*சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து கடந்த மூன்று நாட்களில் ரயில் மூலம் 12 லட்சம் பேர் பயணம் .. தெற்கு ரயில்வே தகவல்.
*தீபாவளி நாளில் அறிவிக்கப்பட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடிப்பவர்களை பிடிக்க காவல் துறை நடவடிக்கை .. சென்னையில் உள்ள 102 காவல் நிலையங்களிலும் காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் தனிப்டைகள் அமைப்பு.
*துன்பங்கள் நீங்கி இன்பங்கள் மலரும் நாளாக தீபாவளி மலரட்டும் … எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவிப்பதாக எடப்பாடி பழனிசாமி செய்தி.
*சென்னையில் திரை அரங்கு ஒன்றில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மகன் ரமேஷ் மற்றும் பேரன் மீது மர்ம நபர்கள் தாக்குதல் .. தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார்.
*ஆளுநர் மாளிகை சாலையில் பெட்ரோல் பாட்டில் வீசிய கருக்கா வினோத் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது … ஏற்கனவே பாஜக அலுவலகத்தி்ன் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கும் வினோத் மீது நிலுவையில் உள்ளது.
*ஈரோடு மாவட்டம் தாளவாடியில் மான்கறி கொண்டு வந்த நபர் மீது வழக்குப் பதியாமல் இருக்க ரூ 2 லட்சம் பேரம் பேசியதாக புகார் … தாளவாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரத்தினம், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் கோபால், பாலசுப்பிரமணியம் ஆகிய மூ வரையும் சஸ்பெண்ட் செய்து கோவை டி.ஐ. ஜி. உத்தரவு.
*வாணியம்பாடி அருகே தேசிய நெடு்ஞ்சாலையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் உயிரிழப்பு .. அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆம்னி பேருந்து மீது மோதிய விபத்தில் 20 பேர் காயம்.
*பேருந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுப்பட்ட வாணியம்பாடி காவல் நிலைய தலைமைக் காவலர் முரளி நெஞ்சு வலியால் மரணம் … பணியில் இருக்கம் போது உயிரிழந்த முரளிக்கு அனவைரும் இரங்கல்.
*ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்த உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக மேல் முறையீடு செய்யுமாறு அன்புமணி வலியறுத்தல் … ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் மக்களை வேட்டையாட தயாரகிவிட்டதாக புகார்.
*திகார் சிறையில் உள்ள டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவுக்கு உடல் நிலை சரியில்லாத மனைவியை சந்திக்க ஆறு மணி நேரம் மட்டும் அனுமதி .. போலீஸ் காவலுடன் வீட்டுக்கு வந்தவர் மனைவியை சந்தித்து உடல் நலம் விசாரித்துவிட்டு சிறைக்கு திரும்பினார்.
*அரியானா மாநிலம் அம்பாலா மாவட்டத்தில் விஷச் சாராயம் குடித்தவர்களில் 19 பேர் இறப்பு .. பாஜக அரசின் அலட்சியமே சாவுக்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் புகார்.
*காசா முனை மீது இஸ்ரேல் தொடர்ந்து குண்டு வீசித் தாக்கியதன் விளைவு … அஸ் ஷிபா என்ற முக்கியமான மருத்துவமனை மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியது.
*இஸ்ரேல் உடனடியாக காசா மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்கரன் வலியுறுத்தல்… குண்டு வீச்சில் பெண்களும் குழந்தைகளும் கொல்லப்படுவதாக வேதனை.
*பிரான்சின் கோரிக்கையை நிராகரித்தார் இஸ்ரேல் பிரதமர் நெதான்யாகு .. போர் நிறுத்தம் என்பது ஹமாசிடம் சரண் அடைவதற்கு ஒப்பானது என்று விளக்கம்,
*ஐஸ்லாந்து நாட்டில் 14 மணி நேரத்தில் 800 க்கும் அதிகமான முறை நிலநடுக்கம் .. பல ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம். அவரச நிலை பிரகடனம்.
*பழம் பெரும் நடிகர் சந்திரமோகன் ஐதராபாத்தில் காலமானார் … நாளை நமதே படத்தில் எம்.ஜி.ஆர்.க்கு தம்பியாக நடித்தவர் சந்திரமோகன்,
*வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு .. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தகவல்.