*உத்தர்காண்ட் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலைக்கு சுரங்கம் தேண்டும் போது இடிந்து விழுந்து விபத்து … உள்ளே சிக்கியிருக்கும் 36 தொழிலாளர்களை மீட்பதற்கு நடவடிக்கை.
*தேசிய நெடுஞ்சாலைக்கு நான்கரை கிலோ மீட்டர் நீள சுரங்கத்தில் 200 மீட்டர் தொலைவுக்கு இடிந்து விழுந்ததால் பதற்றம் .. தேசிய பேரிடர் மேலாண்மை குழுவுடன் இணைந்து உத்தரகண்ட் அரசும் மீட்புப் பணியில் தீவிரம்.
*இமாசலப் பிரதேசத்தில் லெப்சாவில் பாதுகாப்பு படையினருடன் இணைந்து பிரதமர் மோடி தீபாவளி கொண்டாட்டம் .. இந்திய வீரர்கள் இருக்கும் இடம் கிட்டதட்ட கோயிலுலுக்குச் சமம் என்று பேச்சு.
*கோவையில் பல இடங்களில் பெட்ரோல் குண்டு வெடிக்கும் என்று இ மெயில் மூலம் மிரட்டல் … போலீஸ் விசாரணையில் போலி இ மெயில் மிரட்டம் விடுத்து இருப்பது கண்டுபிடிப்பு.
*தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாட்டம் .. புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து ஒருவருக்கொருவர் வாழ்த்துப் பறிமாற்றம்.
*தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் சென்ற பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததாக புகார் .. எட்டு பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்.
*பட்டாசு வெடிப்பால் சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு .. மாசு அளவு 100 ஐ தாண்டியது.
*தி்ண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் அருகே ஓடையில் குளிக்கச் சென்ற இரண்டு பேர் சேற்றில் சிக்கி உயிரிழப்பு .. உடலைக் கைப்பற்றி போலீஸ் விசாரணை.
*காசா முனையில் மிக முக்கிய மருத்துவமனையான அல் ஷிபாவுடன் தொடர்புகள் அனைத்தும் துண்டிப்பு .. மற்றொரு மருத்து வமனையிலும் மின்சாரம் துண்டிப்பு.
*தீபாவளி பண்டிகை என்பதால் போதிய பயணிகள் வரத்து இல்லை … சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய மூன்று விமானங்கள் ரத்து.
*சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒரு ஆண்டில் மட்டும் 59 சிக்ஸர்களை பறக்க விட்டு அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் இந்திய அணி ரோகித் சர்மா … இதற்கு முன் டி வில்லியம்ஸ் 58 சிக்சர் அடித்ததும் கெயில் 56 சிக்சர் அடித்தும் இருந்த சாதனைகள் முறியடிப்பு.
*நடப்பு உலகக் கோப்பை போட்டியில் அதிக ரன்கள் விளாசியவர்கள் பட்டியலில் 594 ரன் அடித்து விராட் கோலி முதலிடம் .. குவின்டன் காக் 591 ரன்களுடன் இரண்டாவது இடம்.