தலைப்புச் செயதிகள் … ( 16-11-2023)

*சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பட்ட 10- க்கும் மேலான மசோதாக்களை கூடுதல் விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார் ஆளுநர் ரவி .. உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து உள்ள இரண்டு வழக்குகளும் விரைவில் விசாரணைக்கு வர உள்ளதால் ஆளுநர் நடவடிக்கை.

*ஆளுநர் திருப்பி அனுப்பும் மசோதாக்களுக்கு மீண்டும ஒப்புதல் வழங்குவதற்கு தமிழ்நாடு சட்டசபையின் சிறப்புக் கூட்டம் நாளை மறுதினம் நடைபெறுகிறது …. திருத்தங்கள் எதுவும் செய்யாமல் மசோதாக்களை அப்படியே நிறைவேற்றி ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைக்க முடிவு.

*பல்கலைக் கழகங்களின் வேந்தராக முதல்வரே செயல்பட வகை செய்யும் மசோதா மற்றும் தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக் கழகத்தை உருவாக்கும் மாசோதா ஆகியவை ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாவில் அடக்கம் … தமிழ்நாடு கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக் காலத்தை மூன்று ஆண்டுகளாக குறைக்கும் மசோதாவும் அரசுக்கு திரும்பி வந்தது.

*ஆளுநரின் நிலைப்பாட்டில் ஏற்பட்டு உள்ள மாற்றம் குறித்து வலை தளங்களில் விமர்சனம் … உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவிக்கும் என்பதால் மசோதாக்களை அரசுக்கு திருப்பிஅனுப்பி வைத்திருப்பதாக கருத்து.

*அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இணைப் பேராசிரியர்களாக பணியாற்றிய 56 பேர் பணி நீக்கம் … போதிய கல்வித் தகுதி இல்லாமல் பணியாற்றி வந்ததாக எழுந்த புகாரின் பேரில் நடவடிக்கை.

*அதிமுக சின்னம்,கொடி உள்ளிட்டவைகளை பயன்படுத்த அனுமதி கேட்டு ஒ.பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கில் விசாரணை முடிவடைந்தது .. உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவு.

*மத்திய பிரதேச மாநில சட்டசபையில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நாளை தேர்தல் … சத்தீஸ்கர் மாநிலத்தில் எஞ்சிய 70 தொதிகளிலும் நாளை வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு.

*சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் காலை எட்டு மணி முதல் மாலை ஐந்து மணி வரை வாக்குப்பதிவு … மாவோயிஸடு ஆதிக்கம் மிக்க சத்தீஸ்கரி்ன் பிந்தரா தொகுதியில் 9 சாவடிகளில் மட்டும் காலை 7 மணி முதல் மாலை 3 மணிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க திட்டம்.

*நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் பள்ளி இறுதித் தேர்வுகள் முன் கூட்டியே நடத்தி முடிக்க நடவடிக்கை … ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் வாக்குப்பதிவு நடத்துவதற்கு ஏதுவாக ஏப்ரல் முதல் வாரத்திற்குள் தேர்வுகளை முடித்துக்கொள்கிறது பள்ளிக் கல்வித் துறை.

*தமிழ்நாட்டில் 10,11,12- ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வு தேதி அறிவிப்பு … 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3- ஆம் தேதி தொடங்கி ஏப்பல் 8- ஆம் தேதி முடிவடையும் என்று அறிவிப்பு.

*மார்ச் 4- ஆம் தேதி தொடங்கி மார்ச் 24- ஆம் தேதி முடிவடைகிறது 11- ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு … 12- ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு மார்ச் 1- ஆம் தேதி தொடங்கி மார்ச் 12 ஆம் முடிவடைகிறது.

*10- ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 10- ஆம் தேதியும் 11- ஆம் வகுப்பு முடிவுகள் மே 14- தேதியும் வெளியாகிறது … மே 6- ஆம் தேதி 12- ஆம் வகுப்பு முடிவுகளை வெளியிட திட்டம்.

*சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதயவியல் நிபுணர்கள் சிகிச்சை … புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அமைச்சர் உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் நேற்று மருத்துவமனையில் அனுமதி.

*கன மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைச்சர்கள் நேரில் ஆய்வு .. சேத விவரம் குறித்து சென்னையில் நாளை முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்

*திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே டேங்கர் லாரி மீது கார் மோதி விபத்து … ஐந்து பேர் உயிழிப்பு.

*திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட்டுக்கு எதிராக போராடிய விவசாயிகள் 20 பேர் கைது .. கைது செய்யப்பட்ட 20 பேரில் 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

*அமைதியாக போராடிய விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்டது கோழைத் தனமான செயல் என்று அண்ணாமலை கண்டனம் .. விவசாயிகளுக்கு முழு ஆதரவையும் பாஜக வழங்கும் என்று அறிவிப்பு.

*சென்னையில் வஸ்தார ஜவுளிக் கடை உரிமையாளர் வீடு உட்பட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரிச் சோதனை …கொச்சி மற்றும் பெங்களூரில் உள்ள வழக்குகள் தொடர்பாக சோதனை நடத்துவதாக தகவல்.

*பத்து லட்சம் மக்கள் தொகைக்கு 100 மருத்துவ இடங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை ஓராண்டு நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவிப்பு .. மருத்துவ இடங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் முடிவுக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

*புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு எதிரான தடை நீக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அன்புமணி கருத்து …அடுத்த 2025 – 26 ஆம் ஆண்டிலும் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தல்.

*சென்னையில கடந்த ஒரு வாரத்தில் 23 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை .. சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து வருவாதகவும் காவல் துறை அறிக்கை.

*மார்க்சிஸ்ட் மூத்தத் தலைவர் சங்கரய்யா இறுதி ஊர்வலத்தில் பல்வேறு கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என ஏரளாமானவர்கள் பங்கேற்பு .. சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் தகனம்.

*திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குள் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு 7,500 பேருக்கு மட்டும் அனுமதி .. தீபத் திருவிழா ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்த அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு.

*மதுரையில் ரயில்வே மைதானத்தை தனியாருக்கு கொடுப்பதற்கு எதிராக கை எழுத்து இடும் போது சாலமான் பாப்பயைா பேசியது அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது … “போகிற போக்கைப் பார்த்தால் நாட்டையே விற்றுவிடுவார்கள் போலிருக்கிறது” என்று பேசியிருந்தார் பாப்பையா.

*தேனியில் வனத்துறை துப்பாக்கிச் சூட்டில் ஈஸ்வரன் என்பவர் உயிரிழந்த வழக்கில் காவல் துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு .. வனத்துறை திட்டமிட்டு ஈஸ்வரனை சுட்டுக் கொன்றுவிட்டதாக மகள் வினோதி தொடர்ந்த வழக்கில் நடவடிக்கை.

*தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் சொந்த வேலை காரணமாக பதவி விலகுவதாக அறிவிப்பு …தீபாவளி அன்று தமது திரையங்கில் அனுமதி இல்லாமல் படம் திரையிட்டதற்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பி உள்ள நிலையில் பதவி விலகல்.

*திருச்சியில் இருந்து பெங்களூரு புறப்பட இருந்த இன்டிகே விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக ரத்து … பயணிகளை சென்னை வழியாக பெங்களூருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை.

*வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் சிலிண்டர் விலையை 57 ரூபாய் குறைப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு .. ரூ 1999 க்கு விற்ற சிலிண்டர் விலை ரூ 1942 க்கு குறைந்தது.

*உத்தரகண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கிக்கொண்ட 40 தொழிலாளர்களை மீட்கும் பணிக்கு நிபுணர்கள் வரவழைப்பு… மீட்பு நடவடிக்கை முடிவடைய மேலும் இரண்டு, மூன்று நாட்கள் ஆகலாம் என்று தகவல்.

*செய்தியாளர் சந்திப்பின் போது சீன அதிபர் ஜின் பிங்கை சர்வாதிகாரி என்று ஜோ பைடன் குறிப்பிட்டதால் சர்ச்சை .. அமெரிக்காவில் இரு நாட்டுத் தலைவர்களும் நடத்திய பேச்சுவார்த்தையில முக்கிய உடன்பாடு எட்டப்பட்டதாக தகவல்.

*காசாவில் அல் ஷகிபா மருத்துவமனையை ஹமாஸ் அமைப்பு தலைமை அலுவலகமாக பயன்படுத்தி வந்ததாக இஸ்ரேல் புகார் … துப்பாக்கி உள்ளிட்ட அதி நவீன ஆயுதங்கள் பதுக்கி வைத்து இருக்கும் வீடியோவும் வெளயீடு.

*ஹமாஸ் அமைப்பிடம் பிணைக் கைதிகளாக உள்ளவர்களை மீட்க ராணுவத்தை மீட்கும் திட்டம் எதுவுமில்லை.. ஜோ பைடன் அறிவிப்பு.

*வங்கக் கடலில மையம் கொண்டு உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என்று வானிலை மையம் கணிப்பு … புயலாக வலுப்பெறும் பட்சத்தில் அதற்கு மாலத்தீவு நாடு பரிந்துரைத்த மிதிலி என்ற பெயரை சூட்ட முடிவு.

*ஏற்கனவே இரண்டு புயல்கள் வங்கக் கடலில் உருவான நிலையில் மூன்றாவதாக உருவாகும் மிதிலி புயலால் தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு.. மிதிலி புயல் வடக்கு நோக்கி நகர்ந்து வங்கதேசத்தில் கரரையை கடக்கும் என்று தகவல்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *