*செய்யாறு சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்கு எதிரான போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட 6 பேர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
*தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் 21 பேர் மீது நடவடிக்கை தொடங்கி விட்டதாக தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் .. தூத்துக்குடி ஆட்சியராக இருந்த வெங்கடேஷ், தென் மண்டல ஐ.ஜி.யாக இருந்த சைலேஷ் குமார் யாதவ் ஆகியோர் மீதும் நடவடிக்கை.
*தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கடந்த 2018 ஆண்டு நடந்த போராட்டத்தை ஒடுக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அதிகாரிகள் 21 பேர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்து இருந்தது.
*தமிழ்நாட்டில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டமன்றத்தின் சிறப்பு அவசரக் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது.. அதிமுக பங்கேற்க முடிவு, பாஜக உறுப்பினர்கள் புறக்கணிக்க உள்ளதாக தகவல்.
*மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஷ்கர் மாநிலத்தில் விறுவிறுப்பான தேர்தல் .. பெரிய அளவில் அசம்பாவிதங்கள் எதுவும் இல்லாமல் அமைதியான வாக்குப்பதிவு. மத்திய பிரதேசத்தில் 71.16 சதவீதமும், சத்தீஷ்கரில் 68.15 சதவீத வாக்குகளும் பதிவானதாக தகவல்.
*செய்யாறில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்களில் 7 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது குறித்து காவல் துறை விளக்கம்.. அரசு திட்டங்களுக்கு எதிராக மக்களை தூண்டிவிட்டதாகவும் வாகனங்களின் கணணாடியை உடைத்ததாகவும் பதில்.
*மத்திய ஆட்சியாளர்களால் இந்திய அரசியல் அமைப்பு சட்டமே ஆபத்துக்கு உள்ளாகி இருப்பதாக மு.க.ஸ்டாலின் புகார் … உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும் கூட மதிக்காத ஆட்சியாளர்களின் செயல் கூட்டாட்சி தத்துவத்தை சிதைப்பதாகவும் கருத்து.
*தேர்தல் பணிகளுக்கு அழைக்கப்படும் ஊழியர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது அவசியம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு… ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுப்பு.
*அண்ணா பல்கலைக் கழகத்தில் இள நிலை பொறியியல் படிப்பு தேர்வுக்கட்டணம் ரூ 150 ல் இருந்து ரூ 225 ஆக அதிகரிப்பு .. இளநிலை செய்முறை கட்டணம் ரூ 450 ஆக உயர்வு.
*அண்ணா பல்கலைக் கழகத்தில் அமல் செய்யப்பட்டு உள்ள செமஸ்டர் கட்டணம் இந்த செமஸ்டர் தேர்வுகளுக்கு பொருந்தாது … அனைத்து துணை வேந்தர்களிடம் கலந்தாலோசித்து ஒரே வித செமஸ்ட்டர் கட்டணத்தை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி பேட்டி.
*அண்ணா பல்கலைக் கழக தேர்வுக் கட்டண உயர்வை ரத்து செய்யுமாறு அன்புமணி வலியுறுத்தல் … தேர்வுக் கட்டண உயர்வை திரும்பப் பெறுமாறு டி.டி.வி.தினகரன் கோரிக்கை.
*அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை ஓமந்தூரார் மருத்துவனையில் மூன்றாவது நாளாக சிகிச்சை … சிறைத் துறை காவலர்கள் பாதுகாப்பு.
*சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோயிலில் ஜனவரி 21 ஆம் தேதி தேர் வெள்ளோட்டம் … தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்றக் கிளையில் உறுதி.
*சொகுசுக் கார்கள் உட்பட அனைத்து வகையான கார்களையும் பொதுப் போக்குவரத்து வாகனங்களாக பயன்படுத்தலாம் .. போக்குவரத்து துறை ஆணையர் அனுமதி.
*காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில தீவிரவாதிகள் ஐந்து பேர் பலி .. பலியானவர்கள் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்.
*செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி டீப் பேக் காணொலிகளை உருவாக்குவது மிகவும் ஆபத்தானது .. போலி வீடியோக்களால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு பிரதமர் மோடி வலியுறுத்தல்.
*கேரளா மாநிலம் களமசேரியில் மத வழிபாட்டுக் கூட்டரங்கில் நடந்த குண்டு வெடிப்பில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த பிரவீன் என்பவர் உயிரிழப்பு .. பலியானோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு.
*சான் பிரான் சிஸ்கோ நகரத்தில் டெஸ்லா கார் நிறுவனத்தின் எலன் மஸ்க், ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக் உள்ளிட்டோருடன் சீன அதிபர் ஜின் பிங் சந்திப்பு … சீனாவில் முதலீடு செய்வது தொடர்பாக ஆலோசனை.
*உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் நாளை மறுதினம் மோதுவதை முன்னிட்டு அகமதாபாத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு .. முக்கிய பிரமுகர்கள் குவிவதால் தங்கும் விடுதிகளில் கட்டணம் அதிகரிப்பு.
*வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிதிலி என்ற புயலாக மாறியது … வங்க தேசத்தின் கரையை மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில நாளை அதிகாலை கடக்கும் என்று தகவல்.
*வங்கக் கடலில் புயல் உருவாகி உள்ளதைக் குறிக்க சென்னை,கடலூர் உட்பட ஒன்பது துறை முகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் .. மீனவர்கள் கடலுக்குச் செல்வது தொடர்ந்து பாதிப்பு.
*சபரி மலை ஐய்யப்பன் கோயிலில் கார்த்திகை மாத முதல் தேதியான இன்று மண்டல கால பூஜைகள் தொடங்கின.. மழையையும் பொருட்படுத்தாமல் பல ஆயிரம் பக்தர்கள் குவிந்தனர்.
*வடகிழக்குப் பருவமழை பெய்வதன் காரணமாக கேரளாவில் இருந்து ஏராளமான யானைகள் வால்பாறைக்கு வருகை .. தேயிலை தோட்டங்கள் உட்பட எங்கும் யானைகள் நடமாடுவதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு வனத்துறை அதிகாரிகள் வேண்டுகோள்.