*கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஆறு செல்போன்களை தடயவியல் சோதனைக்கு அனுப்பியது சி.பி.சி.ஐ.டி… சம்பவம் நடந்த நாட்களில் பேசிக்கொண்ட விவரங்களை சேகரித்து ஆதராங்களை உருவாக்க நடவடிக்கை.
*சென்னையில் மோகன்லால் மற்றும் வெங்கடேஸ்வரா நகைக் கடைகளில் அமலாக்கத்துறை இரண்டாவது நாளாக சோதனை .. மொத்தமாக தங்கக் கட்டிகள் மற்றும் தங்க நகைகள் விற்பனை செய்வது பற்றி விசாரணை.
*சென்னையை தொடர்ந்து திருச்சியில் ஜாபர் ஷா தெரு மற்றும் பெரிய கடை வீதியில் உள்ள 4 நகைக் கடைகளில் சோதனை… வெளிநாடுகளில் இருந்து தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு இருப்பதில் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற புகாரின் பேரில் அமலாக்கத்துறை நடவடிக்கை.
*உத்தராகண்டில் சார்தாம் சுரங்கத்தில் சிக்கித் தவிக்கும் 41 தொழிலாளர்களை மீட்க சர்வதேச குழுக்களின் உதவியுடன் நடவடிக்கை…10-வது நாளாக மீட்புப் பணி தொடர்கின்றது.
*சுரங்கத்தில் சிக்கி உள்ள தொழிலார்களின் வீடியோ காட்சிகளை வெளியிட்டது மீட்புக் குழு … மருத்துவ சிகிச்சைக்கு பயன்படும் எண்டோஸ் கோபிக் கருவியை குழாய் வழியாக உள்ளே அனுப்பி எடுத்த படம் வெளியானது.
*பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் சார்பில் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி கௌரவிப்பு… நகழ்ச்சியில் பாடகி சுசீலாவின் இருக்கைக்கே சென்று முனைவர் பட்டத்தை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
*கல்வியை பொதுவான பட்டியலில் இருந்து மாநில அரசின் பட்டியலுக்கு மாற்றினால்தான் எல்லோருக்கும் உயர் கல்வி என்ற இலக்க அடைய முடியும்… உச்ச நீதிமன்றம் விசாரித்து வரும் வழக்கில் நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்ப்பதாக இசைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
*அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை பொங்கலுக்குள் முடிக்க வேண்டும் … சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியதாக தகவல்.
*குட்க வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு ஆளுநர் அனுமதி கொடுத்ததன் எதிரொலி .. வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ள முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் சென்னையில் அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல்.
*தமிழக நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் முத்தையா அமலாக்கத்துறை அலுவலகத்தில் இரண்டாவது நாளாக ஆஜர் .. ஆறுகளில் மணல் எடுப்பதற்கான ஒப்பந்த ஆவணங்களை கொடுப்பதற்கு ஆஜரானதாக தகவல்.
*தீவிரவாதத்தை தடுக்க நுண்ணறிவு பிரிவு ஏடிஜிபிக்கு கீழ் தீவிரவாத தடுப்புக்கு (ATS) புதிய பிரிவு அமைப்பு ….ஒரு டி.ஐ.ஜி, 4 எஸ்பிக்கள், 5 ஏஎஸ்பிக்கள், 13 டிஎஸ்பிக்கள், 31 ஆய்வாளர்கள், 61 உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என 383 பேர் நியமனம்.
*தமிழக விவசாயிகள் சம்பா பயிரை காப்பீடு செய்ய நாளை கடைசி நாள் ஆகும்…. கடந்த 15ம் தேதியுடன் முடிவடைந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டு நாளையுடன் முடிவுக்கு வருகிறது..
*நீர் நிலை ஆக்கிரமிப்புகளை சட்ட விதிகளுக்கு உட்பட்டு வருவாய்த்துறையினர் அகற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு…. மதுரை அருகே புறம்போக்கு நிலத்தில் உள்ள வீட்டை அகற்ற அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி.
*பொதுவிநியோக திட்டத்தில் 6 கோடி லிட்டர் பாமாயில் கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு தடைவிதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு … 60,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு கொள்முதல் டெண்டரை எதிர்த்த வழக்கும் தள்ளுபடி.
*மாற்றுத் திறனாளிகளி மனம் புண்படும்படி பேசியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக அமைச்சர் தங்கம்.தென்னரசு அறிவிப்பு … மாற்றுத் திறனாளிகள் மீது தமக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு என்ற எக்ஸ் தளத்தில் பதிவு.
*நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு 64 ஆண்டுகளுக்கு முன்பு நிலம் கொடுத்தவர்களுக்கு தற்போது பட்டா வழங்கி இருப்பதுதான் சமூக நீதியா என்று அன்புமணி கேள்வி … மூன்றாவது சுரங்கத்திற்கு துணை செய்து மக்களுக்கு அநீதி இழைத்துவிடக்கூடாது என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை.
*சென்னை – திருச்சி இடையே மூன்றாவது நாளாக இன்டிகோ நிறுவனத்தின் 8 விமான சேவைகளும் பாதிப்பு … சென்னை விமான நிலையத்தில் டிராக்டர் மோதி விமானம் பழுதானதால் சேவைகளை நிறுத்தியது இன்டிகோ.
*நடிகை திரிஷா குறித்து பேசிய விவகாரத்தில் நடிகர் சங்கம் மீது வழக்குத் தொடரப்போவதாக நடிகர் மன்சூர் அலிகான் மிரட்டல் … நல்லப் பெயர் வாங்குவதற்காக நடிகர் சங்கம் தம்மை பலிகடா ஆக்குவதாகப் புகார்.
*சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு தனியார் நிறுவனங்கள் மூலம் நடத்துநர் மற்றும் ஓட்டுநர்களை நியமிக்க வகை செய்யும் டெண்டரை ரத்து செய்தது உயர் நீதிமன்றம் … காலிப் பணியிடங்களை நேரடித் தேர்வு மூலம் நிரப்புமாறு அரசுக்கு உத்தரவு.
*தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு நவம்பர் 25 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் … சென்னை உட்பட பல்வேறு இடங்களில் இருந்து 2700 பேருந்துகளை இயக்க உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு.
*எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை மீனவர்கள் ஐந்து பேர் இந்திய கடலோர காவல் படையால் கைது … அனைவரையும் கரைக்கு அழைத்து வந்து விசாரணை.
*இந்தியாவில் கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு இளம் வயதினரின் அதிகப்படியான திடீர் மரணத்துக்கு கோவிட்-19 தடுப்பூசி காரணமில்லை. .. குடும்பப் பின்னணி, கொரோனா தொற்றுக்கு பிறகான வாழ்க்கை முறை மாற்றம் உள்ளிட்டவையே திடீர் மரணங்களுக்குக் காரணம் என இந்திய மருத்துவ கவுன்சில் தகவல்.
*ராஜஸ்தான் மாநிலத்துக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டது காங்கிரஸ் … சாதி வாரிக் கணக்கெடுப்பு, பத்து இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உள்ளிட்ட உறுதி மொழிகள் அளிப்பு.
*இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான சண்டையில் கத்தார் நாடு மேற்கொண்ட சமரச முயற்சியில் ஓரளவு முன்னேற்றம் … பிணைக் கைதிகளில் 50 பேரை விடுவித்து போரை மூன்று நாட்களுக்கு நிறுத்தும் கருத்தை ஹமாஸ் ஏற்றுக் கொண்டதாக தகவல்.
*இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆட்டங்களை காண மைதானங்களுக்கு மொத்தம் 12 லட்சத்து 50 ஆயிரம் ரசிகர்கள் நேரில் வந்து சாதனை … கடந்த உலகக் கோப்பை போட்டியை விட அதிக ரசிகர்கள் வந்தது சாதனை என்று ஐசிசி பெருமிதம்.
*சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு , மயிலாடுதுறை, திருவாரூர், நாகையில் கனமழைக்கு வாய்ப்பு…. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடியில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் தகவல்.