*மசோதா உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண தமிழக ஆளுநரும் முதலமைச்சரும் பேச்சு நடத்துமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல் … பிரச்சினைகளுக்கு தீர்வு காணாவிட்டால் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று ஆளுநருக்கு கண்டிப்பு.
*தமிழக சட்டசபையில் மறு நிறைவேற்றம் செய்து அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது ஏன்?… சட்டத்தை நிறுத்தி வைக்கவும் செயலிழக்கச் செய்யவும் ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும் தலைமை நீதிபதி சந்திர சூட் கேள்வி.
*சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் தர மறுத்த ஆளுநரால் மசோதாக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பு … மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல இழுத்தடிக்கவே ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்து இருப்பதாக புகார்.
*ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்பப் பெறுவதுதான் பிரச்சினைக்கு ஒரே தீர்வு .. தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி கருத்து
*தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது… இது நாளை மறுநாள் தென்மேற்கு வங்கக்கடலில் புயலாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை மையம் கணிப்பு.
*வங்கக் கடலில் உருவான புயல் ஐந்தாம் தேதி காலை நெல்லூர், மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் .. புயல் கரையைக் கடக்கும் போது பலத்தக் காற்று வீசக்கூடும் என்று தகவல்.
*புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, நாகை, காரைக்கால், கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்… பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை.
*புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து 12 கடலோர மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி மூலம் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை…. போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தல்.
*திண்டுக்கல் அருகே அமலாக்கத் துறை அதிகாரி அன்கிட் திவாரி பயணம் செய்த காரில் இருந்த ரூ 20 லட்சத்தைக் கைப்பற்றியது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் .. அதிகாரி லஞ்சமாக பெற்ற பணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மதுரை அழைத்துச் சென்று விசாரணை.
*மதுரையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக அரசின் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை .. அதிகாரி அங்கட் திவாரி வீட்டிலும் ஆய்வு,
*தருமபுரியில் இருந்து கோவை சென்ற லாரியில் மூவாயிரம் கிலோ வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்ட வழக்கில் இளைஞர் ஒருவருக்கு போலீஸ் வலை வீச்சு .. வெடிப் பொருட்களை அனுமதி இன்றி கொண்டு சென்றதற்கான காரணத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை.
*அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க தடை இல்லை எனறு உச்சநீதிமன்றம் உத்தரவு .. வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிப்பதற்கு தடை கேட்டு இருந்தார் வளர்மதி.
*அடுத்த ஆண்டு மே மாதத்துடன் ஓய்வு பெற இருந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் விருப்ப ஓய்வு… விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஷசாங்சாய்க்கு கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.-ஆக கூடுதல் பொறுப்பு .
*சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் செய்வதைத் தடுக்க கண்காணிப்புக் குழு அமைக்கக் கோரி மனு … தமிழ்நாடு அரசு, கடலூர் மாவட்ட எஸ்.பி. பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
*வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.26.50 உயர்வு… ரூ.1,942க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.1,968.50 ஆக அதிகரிப்பு.
*மணிப்பூர் மாநிலத்தில உக்ருல் மாவட்டத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கிக்குள் 10 பேர் கும்பல் நுழைந்து18 கோடி ரூபாய் கொள்ளை … பாதுகாவலர்களை தாக்கி லாக்கரை திறக்கச் சொல்லி பணத்தை எடுத்துக் கொண்டு ஓட்டம்.
*பெங்களூரில் பிரபலமாக விளங்கும் 13 தனியார் பள்ளிகளில் வெடி குண்டு வெடிக்கும் என்று ஈ மெயில் மூலம் மிரட்டல் .. பள்ளிகளுக்கு விடுமுறை விடச் சொல்லிவிட்டு போலீஸ் தீவிர சோதனை.
*உலக அளவில் பருவ நிலை மாறுபாடுகளால் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகான துபாயில் ஐ.நா.வின் உச்சி மாநாடு .. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு.
*ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை வகித்த இந்தியாவின் பதவிக்காலம் நிறைவு…புதிய தலைவராக பிரேசில் நாடு இன்று பொறுப்பு ஏற்றது.
*மத்திய பிரதேசம், ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் பற்றிய கணிப்பில் பாஜக மற்றும் காங்கிரசில் எந்தக் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்பதில் குழப்பம் .. வெற்றி வாய்ப்பு உள்ள சுயேட்சைகளிடம் இரண்டு கட்சிகளும் பேச்சு நடத்துவதாக தகவல்.
*இஸ்ரேல்,ஹமாஸ் இடையேயான 7 நாள் போர் நிறத்தம் முடிவுக்கு வந்தது .. காசா முனை மீது இஸ்ரேல் படைகள் மீண்டு்ம் தாக்குதல்.
*மன்சூர் அலிகான் அவதூறாக பேசியதாக எழுந்த புகார் .. நடிகை திரிஷா எழுத்துப் பூர்வமாக பதிலளிக்க சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலைய போலீஸ் உத்தரவு.
*நித்தியானந்தாவின் கைலாசா நாட்டுடன் ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கி கையெழுத்திட்டதாக பராகுவே நாட்டின் விவசாய அதிகாரி வேலையில் இருந்து நீக்கம் … ஐ.நா.வால் அங்கீகரிக்கப்படாத நாட்டு உடன் ஒப்பந்தம் செயதால் பராகுவே நாட்டில் கடுமையான எதிர்ப்பு.