*குடியரசுத் தலைவருடன் எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திப்பு. மணிப்பூர் சென்று திரும்பிய எம்.பி.க்கள் கொடுத்த அறிக்கையை மனுவாக கொடுத்து நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை.

*நாடாளுமன்றத்தில் மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் பதில் அளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் போராட்டம்.. இரு அவைகளிலும் அமளி, அலுவல்கள் முடக்கம்.

*அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அனுமதி கொடுக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை மீண்டும் வலியுறுத்தல்..இரு தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றதால் தீா்ப்பை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்.

*வேடசந்தூரில் திமுக நிர்வாகி சாமிநாதன் என்பவர் வீட்டில் அமலாக்கத்துறை திடீர் சோதனை.. செந்தில் பாலாஜி வழக்கில் ஆதாரங்களை திரட்டுவதற்கு சோதனை நடத்தப்படுவதாக தகவல்.

*நிலத்தை கையகப்படுத்திய போது சேதம் அடைந்த நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ 40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.. ஆகஸ்டு 6-ஆம் தேதிக்குள் இழப்பீட்டை வழங்குமாறு என்.எல்.சி.க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

*விவசாயிகள் அறுவடை முடிந்த உடன் நிலத்தை என்.எல்.சி.யிடம் ஒப்படைத்து விடவேண்டும்.. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் பராமரிப்பது காவல் துறை கடமை என்று உயர்நீதிமன்றம் அறிவுரை.

*அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தலையிடுவதில் அமலாக்கத் துறை தீவிரம்.. தங்களையும் விசாரணையில் சேர்த்துக் கொள்ளுமாறு தாக்கல் செய்த மனு மீதான மனு விசாரணை தூத்துக்குடி நீதிமன்றத்தில் மீண்டும் ஒத்திவைப்பு.

*எலிபெண்ட் விஸ்பரஸ் ஆவணப்படத்தில் நடித்த பெள்ளிக்கு முதுமலை யானைகள் முகாமில் பராமரிப்பாளர் வேலை.. அரசு பணிக்கான உத்தரவை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.

*சென்னை வண்ணாரப் பேட்டையில் எம்.ஜி.ஆர்.சிலை மீது சிகப்பு மையை பூசி அவமதிப்பு.. நடவடிக்கை எடுக்குமாறு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.

*எம்.ஜி.ஆர்.சிலை மீது மை பூசியவரை ஒரு மணி நேரத்தில் கைது செய்து விட்டதாக போலிஸ் தகவல்..பிடிபட்டவர் மன அழுத்தம் கொண்டவர் என்று விளக்கம்.

*பா.ஜ.க.அண்ணாமலை புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபயணம்..நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று பேட்டி.

*தக்காளி விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சீமான் கோரிக்கை.. தனியார் கடைகளில் விற்கப்படும் தக்காளிக்கு அரசு விலை நிர்ணயம் செய்யுமாறு வலியுறுத்தல்.

*தமிழ்நாட்டில் 2021-22 நிதி ஆண்டில் 3 பில்லியன் டாலராக இருந்த அன்னிய முதலீடு கடந்த நிதி ஆண்டில் 2.17 பில்லியனாக குறைந்தது..குஜராத்தை தவிர அனைத்து மாநிலங்களிலும் அன்னிய முதலீடு சரிந்து உள்ளதாக நாடாளுமன்றத்தில் தகவல்

*புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் போலி பில் தயாரித்து இரண்டே கால் கோடி மோசடி.. சி.பி.ஐ.விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு.

*நெய்வேலியில் ஒப்பந்தத் தொழிலாளாகள் ஆறாவது நாளாக போராட்டம்.. அலுவலகப் பணிகள் பாதிக்கப்படுவதால் போராட்டக்காரர்களை வேறு இடத்திற்கு அப்புறப்படுத்துமாறு காவல்துறைக்கு என்.எல்.சி.வேண்டுகோள்.

*உத்திரமோரூர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்ட மாணவருக்கு ஆக்சிஜன் மாஸ்க் இல்லாததால் பேப்பர் கப்பில் துளையிட்டு ஆக்சிஜன் செலுத்திய விவகாரம்.. வீடியே வைரலானதால் விசாரணை நடத்த சுகாரதார அமைச்சர் உத்தரவு.

*மேட்டூர் அணைக்கான நீர் வரத்து விநாடிக்கு 300 கன அடியாக குறைந்தது.. காவிரி டெல்டா பாசன விவசாயிகள் கவலை.

*மதுரை தெப்பக்குளத்தில் தனியார் ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகார்கள் சீல் வைப்பு.. தரமற்ற உணவை விநியோகம் செய்ததாக புகார் எழுந்ததால் நடவடிக்கை.

*முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்பான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு.. ஆறு வாரங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கை நடத்த உத்தரவு.

*கோயம்புத்தூர் கார் குண்டு வெடிப்பில் பலியான ஜமேஷா முபினின் சினேகதர் முகமது இத்ரிஸ் என்பவர் கைது. கார் வெடிப்புக்கு திட்டம் தீட்டியவர் என்று கூறி என்.ஐ.ஏ.நடவடிக்கை.

*அரியனாவில் ஐந்து பேரை பலி கொண்ட கலவரம் கட்டுக்குள் வந்தாலும் இயல்பு நிலை திரும்பவில்லை.. அசம்பாவிதங்கள் மூலாமல் தடுக்க 24 மணி நேரமும் போலீஸ் ரோந்து.

*அமெரிக்காவில் முன்னாள் அதிபர் டிரம்ப் மீது நாட்டை ஏமாற்ற முயன்றது, அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு.. 2020 தேர்தல் முடிவை மாற்றி அமைக்க முயன்ற வழக்கில் நடவடிக்கை.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *