*தேசியவாத காங்கிரசில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் படேல் நீக்கம்- அஜித் பவாருக்கு ஆதரவாக செயல்பட்டதால் சரத்பவார் நடவடிக்கை.
*பெங்களூருவில் ஜூலை 17, 18-ஆம் தேதிகளில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம்- நாடாளுமன்றத் தேர்தலை ஒன்றாக சந்திப்பதுக் குறித்து விரிவாக விவாதிக்க திட்டம்.
* ஜெய்லர் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ வெளியீடு – ரஜினி ரசிகர்கள் உற்சாகம்.
* டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லத்தின் மேல் அதிகாலை 5.30 மணியளவில் டிரோன் பறந்ததால் பரபரப்பு- விசாரணை நடைபெற்று வருவதாக டெல்லி போலீசார் தெரிவிப்பு
*முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதி- என்டோஸ்கோபி பரிசோதனை முடிந்து நாளை காலை வீடு திரும்ப முடிவு.
*தமிழ்நாடு அரசு, மேகதாது அணை கட்டுவதற்கு ஒருபோதும் அனுமதிக்காது- உச்சநீதிமன்றத்தில் வலுவான வாதங்களை முன் வைத்து அணை கட்டும் முயற்சிகளை முறியடிப்போம் என துரைமுருகன் உறுதி.
*சென்னை பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றப்பட்டது சர்ச்சையாகி வருகிறது- எதிர்காலத்தை இழந்த குழந்தையின் குடும்பத்திற்கு ரூ 50 லட்சம் வழங்குமாறு எடப்பாடி வலியுறுத்தல்.
*கிரஷர் ஜல்லி உற்பத்தியாளர் எட்டாவது நாளாக தொடர்ந்து வேலை நிறுத்தம்- ஜல்லிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் கட்டுமானப் பணிகள் பாதிப்பு.
* தொழிலதிபர் அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை விசாரணை – அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் கிடுக்குப் பிடி விசாரணை என தாகல்.
* மணிப்பூர் வன்முறை வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு – மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்புவதாக மாநில அரசு தகவல்.
* சென்னை பில்ரோத் மருத்துவமனையில் வயிற்றுவலி காரணமாக சேர்க்கப்பட்ட 18 வயது பெண் பலி- உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம்..நடைபெற்று வருவதாக டெல்லி போலீசார் தெரிவிப்பு
*மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் ஏழு மீனவ கிறிஸ்தவ குடும்பத்தினரை மதம் மாற வலியுறுத்துவதாக புகார்- 15 ஆண்டுகளாக ஊரைவிட்டு ஒதுக்கி வைத்திருப்பதாகவும் ஆட்சியரிடம் புகார்.
*ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டத்துக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் மறுப்பு- இந்த மாதம் 13 – ஆம் தேதி இறுதி விசாரணை நடத்துவதாக தலைமை நீதிபதி அமர்வு அறிவிப்பு
*சென்னையில் 59 நிறுவனங்களின் பெயரில் 973 கோடி ரூபாய் ஜிஎஸ்டி முன் தொகை செலுத்தியது போன்று ஆவணங்கள் தயாரித்து ரூ175 கோடி ரூபாயை திரும்பப் பெற முயற்சி-சேப்பாக்கத்தை சேர்ந்த நபரை ஜிஎஸ்டி புலனாய்வு பிரிவு கைது செய்து விசாரணை.
* மயிலாடுதுறை மாவட்ட மதிமுக செயலாளர் மார்கேணியை பதவியில் இருந்து நீக்கினார் வைகோ – எடப்பாடியை ரகசியமாக சந்தித்ததாக தகவல் வெளியானதால் நடவடிக்கை.
*நீலகிரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை-அரக்கோணத்தில் இருந்து சென்ற 40 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படை தயார் நிலை.
*கேரளாவில் தென் மேற்கு பருவமழை வலுவடைகிறது- பல மாவட்டங்களில் அதிதீவிர மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.