*அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை..கரூரில் தனலட்சுமி மார்பில்ஸ் மற்றும் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கா் வீட்டில் ஆய்வு தொடருகிறது.

*கோவையில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் முத்துப்பாலன் வீடு, அருண் அசோசியட்ஸ் என்ற கட்டுமான நிறுனத்தில் விசாரணை.. சி.ஆர்.பி.எப். பாதுகாப்புடன் கேரளா பதிவு எண் கொண்ட வாகனத்தில் வந்து சோதனையை ஆரம்பித்தனர் அமலாக்கத் துறை அதிகாரிகள்.

*வேடச்சந்தூரில் திமுக நிர்வாகி வீர சாமிநாதன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை 18 மணி நேரத்திற்குப் பின் நிறைவு.. முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல்.

*நடிகர் கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்திற்கு நடிகர்,நடிகைகள் தேவை என்று கூறி மோசடி..சென்னை சைபர் கிரைம் போலிசில் புகார்.

*கருணாநிதி பே4னா நினைவுச் சின்னத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாக திமுக பரப்பும் செய்தி தவறு.. உயர் நீதிமன்றத்தை நாடுமாறுதான் உச்சநீதிமன்றம் கூறியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

*சிறுபான்மையினர் என்று சொன்னால் செருப்பால் அடிப்பேன் என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் சீமான் ஆவேசம்.. அநீதி செய்யும் ஆட்சியாளர்களுக்கு துணை போகிறவர்கள் சாத்தானின் குழந்தைகள் என்றும் விமர்சனம்.

*சென்னை நங்கநல்லூரில் மழை நீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. பணிகளை விரைந்து முடிக்குமாறு வலியுறுத்தல்.

*பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் 254 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டதில் சர்ச்சை.. விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல் தாஸ் தலைமையில் குழுவை அமைத்தது உயர்நீதிமன்றம்.

*மதுரையில் ஆகஸ்டு 20-ஆம் தேதி நடைபெறும் அதிமுக மாநாட்டுக்கு போதிய பாதுகாப்பு வழங்கக் கோரி கட்சி நிர்வாகிகள் மனு.. உரிய பாதுகாப்பு தரப்படும் என்று காவல் துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் உறுதி.

*சென்னை விமான நிலையத்தில் உள்ள திரையரங்கினால் கார் நிறுத்துவது போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதாகக் கூறி மூடுமாறு உத்தரவிட்டு இருந்தது விமான நிலையங்கள் ஆணையம் .. மறு உத்தரவு வரை திரையரங்கம் செயல்படுவதற்கு டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி..

*நெய்வேலியில் என்.எல்.சி.நிறுவனத்தின் 2-வது சுரங்கத்தில் தீ விபத்து.. நிலக்கரியை அனல் மின்நிலையத்திற்கு எடுத்துச் செல்லும் இயந்திரம் எரிந்து நாசம்.

*நெய்வேலியில் என்.எல்.சி. தலைமை அலுவலகம் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் போரட்டம் நடத்த அனுமதிக்க முடியாது.. போராட்டத்திற்கான வேறு இடத்தை கண்டறியும் படி கடலூர் மாவட்ட எஸ்.பி.க்கு உயர்நிதிமன்றம் உத்தரவு.

*ஆடிப் பெருக்கு நாளை முன்னிட்டு காவிரி கரையோரங்களில் படையல் இட்டு மக்கள் கொண்டாட்டம்.. தாலியை பிரித்துக் கோர்த்தும் நீராடியும் உற்சாகம்.

*ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே காவரியில் மூழ்கி சிறுவர்கள் மூன்று பேர் இறப்பு.. நீச்சல் தெரியாத சிறுவர்களை ஆற்று நீர் அடித்துச் சென்ற பரிதாபம்.

*சென்னை கடற்கரையில் துணிப்பையில் இருந்த குழந்தையின் சடலததை மீட்டது போலிஸ்.. மருத்துவ மனையில் இறந்து பிறந்த குழந்தையை அடக்கம் செய்ய பணமில்லாததால் விட்டுச் சென்றதாக பெற்றோர் வாக்குமூலம்.

*உத்திரமோரூர் அரசு மருத்துவமனையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி நேரில் ஆய்வு.. ஆக்சிஜன் செலுத்துவதற்கு டீ கப்பை பயன்படுத்தியது ஏன் என்று விசாரணை.

*டெல்லி அரசுக்கான அதிகாரிகள் நியமனச் சட்டத்தை இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு.. மசோதாவை மக்களவையில் அறிமுகம் செய்த உள்துறை அமைச்சர் அமித் ஷா கருத்து.

*வரானாசி ஞான வாபி மசூதியில் தொல்லியில் துறை ஆய்வு நடத்த அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி.. இஸ்லாமிய அமைப்புகளின் மனு தள்ளுபடி.

*ஹீரோ மோட்டார் சைக்கிள் நிறுவனத் தலைவர் பவன் காந்த் முன்சால் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை.. ரூ 25 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி மற்றும் தங்க வைரம் நகைகள் பறிமுதல்.

*ஈரான் நாட்டில் வரலாறு காணாத வெப்ப அலை.. 123 டிகிரி பாரன் ஹீட் வெப்பம் பதிவானதால் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *