*ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு..எம்.பி. பதவி தொடருவதால் திங்கள் கிழமை நாடாளுமன்றக் கூட்டத்தில் ராகுல் பங்கேற்க வாய்ப்பு.

*அவதூறு வழக்கில் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டதற்கு உரிய காரணத்தை சூரத் நீதிமன்றம் கூறாததால் தண்டனையை நிறுத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் விளக்கம்.. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு நாள் குறைவாக தண்டனை கொடுத்திருந்தாலும் தகுதி நீக்கத்திற்கு ஆளாகி இருக்காமாட்டார் என்றும் கருத்து.

*பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் கவனத்துடன் பேச வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தல்.. ராகுல் காந்தியை எம்.பி.யாக தேர்வு செய்தவர்களையும் கவனத்தில் கொள்ள வேண்டி இருப்பதாகவும் நீதிபதிகள் விளக்கம்.

*கடமையை தொடர்ந்து செய்வேன் என்று ராகுல் காந்தி டுவிட்.. நீதி வழங்கப்பட்டு உள்ளது, ஜனநாயகம் வென்று உள்ளது என்று கார்கே கருத்து.

*ராகுலின் தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டதால் நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம்.. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட தலைவர்கள் பலரும் வாழ்த்து.

*தேனி நாடாளுமன்றத் தொகுதி எம்.பி.ரவீந்திர நாத் பதவி பறிப்புக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு.. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் செல்லாது என்று தீர்ப்பளித்து இருந்தது உயர் நீதிமன்றம்.

*சுருக்கு மடிக்கு தடை விதிக்குமாறு தரங்கம்பாடியில் நடைபெற்ற 9 மாவட்ட மீனவர் சங்கக் கூட்டத்தில் தீர்மானம்.. முதலமைச்சரை சந்தித்து மனுகொடுக்கவும் முடிவு.

*அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கக் கோரும் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு..தீர்ப்பை ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு.

*ராமாநாதபுரம் முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா சென்னையில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் மீண்டும் இனைந்தார்.. கட்சித் தலைமைக்கு கட்டுப்பட்டு உழைக்க இருப்பதாக உறுதி.

*பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.. காவிரி டெல்டா விவசாயத்தைக் காப்பற்ற தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகத்திற்கு உத்தரவிடக் கோரிக்கை.

*என்.எல்.சி.நிறுவனம் மூன்றாவது சுரங்க விரிவாக்கத்திற்காக காவிரி டெல்டாவில் நிலம் எடுக்கத் திட்டமிட்டு இருப்பதாக அன்புமணி புகார்.. முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தல்.

*திருச்செந்தூர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறி இருந்த சுவாதி கைக் குழந்தை உடன் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்.. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்காக மீண்டும் ஆஜராகத் தேவையில்லை என்று விலக்கு

*அரசியல் விஞ்ஞானி செல்லூர் ராஜுக்கு பதில் சொல்லி தரத்தை தாழ்த்திக் கொள்ள மாட்டேன் என்று அண்ணாமலை தெரிவித்தற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில்.. அதிமுக தொண்டனை விமர்சித்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எசசரிக்கை.

*நெடுஞ்சாலைக்கு நிலம் எடுத்த வழக்கில் போலி ஆவணங்களுக்கு இழப்பீடு வழங்கியதாக புகார்.. காஞ்சிரபும் மாவட்ட முன்னாள் வருவாய்த் துறை அதிகாரிக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

*நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்து உள்ள நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின் போது தங்கள் கட்சி எம்.பி.க்கள் அனைவரும் கட்டாயம் அவையில் இருக்க வேண்டும.. பாஜக தரப்பில் கொறடா உத்தரவு.

*எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைத்தது பற்றி பிரதமர் மோடி விமர்சனம்.. ஆணவம் கொண்டவர்கள் என்று பொருள்படும் கமண்டியா என்று அழைக்கு மாறு கூட்டணி கட்சிகளுக்கு வேண்டுகோள்.

*இந்தியா என்ற எதிர்க்கட்சிகள் கூட்டணிப் பெயருக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு.. கூட்டணியில் இடம்பெற்று உள்ள 26 கட்சிகள் மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு.

*எஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரை ஜாமீனில் விடுவிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு..3,700 கோடி ரூபாய் மோசடி வழக்கில் 40 மாதங்களுக்கு மேலாக சிறையில் உள்ளார் ராணா கபூர்.

*பம்பாய் உயர்நீதிமன்ற நிதிபதி ரோகித் தியோ நீதிமன்றத்தில் அனைவர் முன்னிலையிலும் ராஜினாமா செய்வதாக அறிவிப்பு.. சுயமரியாதைக்கு எதிரான செயல்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறி விலகல் கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பு.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *