*30 எம்.எல்.ஏ.க்கள் உடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அஜித் பவார் கை ஓங்குகிறது – சரத் பவாருக்கு 12 எம்.எல்.எ.க்கள் மட்டும் ஆதரவு.
*தேசியவாத காங்கிரஸ் கட்சி பெயர் மற்றும் சின்னத்தை தமக்கு ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் அஜித் பவார் முறையீடு- அஜித் பவார் உட்பட 9 பேரின் தகுதி நீக்கத்துக்கு சபாநாயகரிடம் மனு கொடுத்து உள்ளதாக ஆணையத்தில் சரத் பவார் பதிலடி.
*டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவாத்துடன் துரைமுருகன் சந்திப்பு – ஜுன் மாதத்திற்கான காவிரி நீர் மற்றும் மேக தாது அணை விவகாரம் குறித்து முறையீடு.
*செங்குன்றம் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் ரூ 2000 கோடி பத்திரப் பதிவுக்கும் திருச்சி உறையூர் துணைப்பதிவாளர் அலுவலகத்தில் ரூ ஆயிரம் கோடிக்கும் கணக்கு இல்லை.. இரண்டு இடங்களிலும் ஆய்வு நடத்திய வருமான வரித்துறை திடுக்கிடும் தகவல்.
*அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர்,பி.வி.ரமணா ஆகியேர் மீது விசாரணையை தொடங்க அனுமதி வேண்டும்- ஆளுநர் ரவிக்கு சட்ட அமைச்சர் ரகுபதி கடிதம்.
*மளிகைப் பொருட்கள் அனைத்தும் 70 சதவீதம் விலை உயர்ந்துள்ள நிலையில் உதயநிதியின் மாமன்னன் திரைப்படமா மக்களின் பசியைக் களையப் போகிறது ?- அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி.
*ஜூன் மாதத்திற்கு உரிய காவிரி நீரை பெறாமல் தமிழகத்திற்கு முதலமைச்சர் துரோகம் செய்துவிட்டார்- இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதாக கூறிக்கொள்ளும் மு.க.ஸ்டாலின் தோழமைக் கட்சியான கர்நாடக காங்கிரசிடம் ஏன் பேசவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கண்டனம்.
*அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குறித்த நேரத்திற்கு வேலைக்கு வரவேண்டும்-சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி உத்தரவு.
*தென்காசி சட்டமன்றத் தொகுதி தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் – தோல்வி அடைந்த அதிமுக வேட்பாளர் தொடாந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
* மணப்பாறையில் ஜிஎஸ்டி சான்றிதழ் வழங்க ரூ 2000 லஞ்சம் கேட்டதாக புகார் – வணிக வரி அலுவலர் கைது.
*மதுரையில் ஆகஸ்ட் 20- ஆம் தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. மாநாட்டு்ப் பணிகளை கவனிக்க ஏழு குழுக்கள்- கே.பி. முனுசாமி, செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, தனபால் உள்ளிட்டோரையும் ஒருங்கிணைப்பு குழுவில் சேர்த்து எடப்பாடி நடவடிக்கை.
*மருந்தினாலோ மற்ற சிகிச்சையினாலோ ராமநாதபுரம் குழந்தைக்கு ரத்த நாள அடைப்பு ஏற்படவில்லை -..உயிரைக் காப்பாற்றும் முயற்சியால்தான் வலது கையை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதாக விசாரணைக் குழு விளக்கம்.
*குழந்தையின் கையை அகற்றியதற்காக கூறப்படும் காரணம் முற்றிலும் தவறு- விசாரணைக் குழுவினர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தருவதாக தாயார் அஜிசா பதில்.
*போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் நிலை குறித்து மூன்று மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்- டி.ஜி.பி. க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு….
*கடந்த மாதம் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்- தாயகம் திரும்புவதற்கு மீனவர்கள் ஆயத்தம்.
*சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணா சாலையில் உயர் மட்டப் பாலம் – ரூ 621 கோடி மதிப்பில் பாலம் கட்டுவதற்கு தமிழக அரசு அனுமதி.
*உயர்நீதிமன்றத்திற்கு மதுரையில் கிளை அமைத்தது கலைஞர் போட்ட பிச்சை என்று அமைச்சர் எ.வ. வேலு பேச்சு- பிறகு உயர்நீதிமன்ற மதுரை கிளை மக்களுக்கு கிடைத்த கொடை என்று விளக்கம்.
*சென்னை வடபழனியில் 2014 ஆம் ஆண்டில் குடி போதையில் காரை ஓட்டி ஒருவரை கொன்ற வழக்கு- அஜய் குமார் என்பவருக்கு 7 வருடம் சிறைத் தண்டனை விதித்து அமர்வு நீதிமன்றம் உத்தரவு.
*செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கும் 3- வது நீதிபதி சி.வி. கார்த்திகேயன்- இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் 3-வது நீதிபதியை நியமித்து தலைமை நீதிபதி உத்தரவு. அவர் நாளை மதியம் விசாரணை நடத்த உள்ளார் .
*மத்திய பிரதேசத்தில் பழங்குடியின தொழிலாளி மீது பாஜக நிர்வாகி சிறுநீர் கழித்த விவகாரம் – ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் ஏற்பட்ட அவமானம் என்று ராகுல் காந்தி கருத்து.
*சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட்டின் இடைக்கால ஜாமீன் ஜூலை 19 – வரை நீட்டிப்பு- தீஸ்தா உடனடியாக சரணடைய வேண்டும் என்ற குஜராத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை.