*பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை, ஐந்து ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடவும் தடை விதிப்பு.. பிரதமராக இருந்த போது கிடைத்த பரிசுப் பொருட்களை விற்ற வழக்கில் தீர்ப்பு.
*சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் உடனடியாக எம்.பி. பதவியை இழந்தார் இம்ரான் கான்.. கைது செய்து சிறையில் அடைப்பதற்காக நடவடிக்கை ஆரம்பம்.
*மணிப்பூர் மாநிலத்தில் பிஷ்னுபூர் மாவட்டத்தில் மீண்டும் வெடித்த கலவரத்தில் மூன்று பேர் இறப்பு.. எட்டு மாவட்டங்களி்ல் போலீ்ஸ் தடை உத்தரவு அமல்.
*எதிர்ப்பின்றி அனைவரும் இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அமித்ஷா பேச்சு எதோச்சதிகாரம்.. மொழிப் போராட்டத்தை மீண்டும் தூண்ட வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை.
*மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவதால் திறந்து விடப்படும் தண்ணீ்ர் அளவு விநாடிக்கு 9 ஆயிரம் கன அடியாக குறைப்பு… காவிரி டெல்டா பாசன மாவட்டங்களில் சாகுபடி செய்த நெற்பயிர் தண்ணீர் இல்லாமல் கருகும் அபாயம்.
*முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பெங்களூர் சென்று கர்நாடக முதலமைச்சரை சந்தித்து காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு வலியுறுத்த வேண்டும்..எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.
*அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீடு உட்பட 9 இடங்களில் இந்த வாரம் நடத்தப்பட்ட சோதனை குறித்து அமலாக்கத் துறை தரப்பில் விளக்கம்.. ரூ 22 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்.
*தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவை காலை எட்டு முதல் எட்டு ஐம்பது மணிக்குள் கொடுத்து விட வேண்டும். சத்துணவு திட்ட அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு.
*மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற கூட்டத்தில் 72 திமுக மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்பு.. கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவது பற்றி ஆலோசனை.
*புதுச்சேரி ஆரோவில் ஆசிரமத்தின் பணப் பறிமாற்றங்கள் குறித்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை விசாரணை நடத்தக் கோரி வழக்கு.. மத்திய அரசு பதலளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ்.
*மைசூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமிற்கு வந்தார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.. ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப்படத்தில் நடித்த பொம்மு தம்பதியை சந்தித்து பாராட்டு.
*அதிமுகவில் உறுப்பினர்களாக சேருவதற்கு 2 கோடியே 44 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக எடப்பாடி பழனிசாமி பெருமிதம்.. உறுப்பினர் சேர்க்கைக்கான அவகாசத்தை ஆகஸ்டு 17- ஆம் தேதி வரை நீட்டித்து நடவடிக்கை.
*அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களிடம் எந்த கட்டணமும் வசூலிக்கக்கூடாது.. மருத்துவக் கல்லூரிகள் அனைத்துக்கும் மருத்துவ இயக்ககம் உத்தரவு.
*வரதட்சனை புகார்கள் தொடர்பான வழக்கில் முதல் தகவல் அறிக்கையில் கணவர் குடும்பத்தார் பெயர்களை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.. தமிழ்நாடு அரசின் டி.ஜி.பி.க்கு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கடிதம்.
*சென்னையில் இருந்து மாமல்லபுரம்,புதுச்சேரி வழியாக கடலூருக்கு புதிய ரயில் பாதை அமைக்க திட்டம்,, ரூ 2670 கோடி ஆகும் என்று மதிபிடப்பட்டு உள்ளதாக ரயில்வே அமைச்சகத் தகவல்
*நாற்பது ஆண்டுகளாக பொது வாழ்வில் இருக்கும் தம்மை பாஜக தலைவராக பொறுப்பேற்று ஓராண்டே ஆகும் அண்ணாமலைக்கு விமர்சிக்கும் தகுதி இல்லை.. அவரவர் இருக்கும் இடத்தை உணர்ந்து விமர்சிக்க வேண்டும் என்று செல்லூர் ராஜு பதில்.
*ஆதிச்சநல்லூரில் தொல்பொருள் அருங்காட்சியகத்துக்கு அடிக்கல் நாட்டினார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.. தூத்துக்குடி எம்.பி.என்ற முறையில் கனிமொழியும் பங்கேற்பு.
*அரியானா மாநிலத்தில் கலவரம் நடைபெற்ற நூக் மாவட்டத்தில் மூன்றாவது நாளாக ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிப்பு.. சட்ட விரோத குடியிருப்புகளில் வசித்தவர்கள் தான் கலவரத்துக்கு காரணம் என்று புகார்.
*வாரணாசி ஞனா வாபி மசூதியில் தொல்லியல் துறை அலுவலர்கள் இரண்டாவது நாளாக ஆய்வு.. இந்து கோயில் இருந்ததா என்பதை கண்டறிய நடவடிக்கை.
*திருவரங்கம் ரெங்கநாதர் கோயிலின் கிழக்கு கோபுரம் முதல் நிலையில் உள்ள சுவர் இடிந்து விபத்து.. அதிகாலையில் விபத்து நேரிட்டதால் அசாம்பாவிதங்கள் தவிர்ப்பு.
*தூத்துக்குடியில் பனிய மாத கோயில் தங்கத் தேர் விழா.. பல ஆயிரம் பேர் பங்கேற்பு.