*ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திர நாத் தேனி எம்.பி.தொகுதியில் வெற்றி பெற்றது செல்லாது – வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது, சொத்துகளை மறைத்துக் காட்டியது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

*உண்மை தோற்பதில்லை என்பதை நிரூபித்து உள்ளது உயர்நீதிமன்ற தீர்ப்பு- ஓ.பி.ரவீந்திர நாத்தை எதிர்த்துப் போட்டியிட்டு தோற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கருத்து.

*தேசியவாத காங்கிரசின் தேசிய நிர்வாகக் குழு சரத்பவார் தலைமையில் டெல்லியில் கூடி ஆலோசனை- முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் படேல் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கம்.

*சென்னையில் அரசு நிலத்தை மோசடி செய்து வாங்கியதாக வழக்கு.. அமைச்சர் பொன்முடியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.

*அதிமுகவில் சாதரண தொண்டன் கூட உச்சத்திற்கு வரமுடியும்- திருவெறும்பூரில் எம்.ஜி. ஆர். சிலையை திறந்து வைத்து எடப்பாடி பேச்சு.

*அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளில் விசாரணை நடத்த அனுமதி தருவது தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம். நேற்று சட்ட அமைச்சர் அனுப்பிய கடித்திற்கு விரிவான பதில்.

*ஏற்கனவே இரண்டு சிவில் சட்டங்கள் உள்ள போது மூன்றாவதாக பொது சிவில் சட்டம் ஏன் ? மோடிக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி.

*காட்பாடியில் 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பண மோசடியில் ஈடுபட்ட ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவன இயக்குநர் மற்றும் உறவினர் வீடுகளில் சோதனை.. மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரிய அதிகாரிகள் நடவடிக்கை.

*துணை வேந்தர்கள் கூட்டம் ஆளுநர் மாளிகையில் எந்த அடிப்படையில் நடந்தது ?.. நாகை மீன்வள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை ஆளுநர் மாளிகையில் நடத்துவது சரியா என்றும் அமைச்சர் பொன்முடி கேள்வி.

*ராஜிவ்காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டு திருச்சி முகாமில் உள்ள முருகனுடன் சேர்ந்து வாழ அனுமதிக்கக் கோரி மனைவி நளினி மனு- மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்.

*இரண்டு கல்லூரி மாணவர்கள் ஆயுதங்களுடன் சென்னை விம்கோ நகர் ரயில் நிலையத்தில் மோதல் – புறநகர் ரயிலின் கண்ணாடிகளை உடைத்த 3 மாணவர்கள் கைது.

*சென்னையைப் போன்று மேலும் சில மாநகராட்சிகளில் நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை – கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியக்கருப்பன் தகவல்.

*மறு சுழற்சி ஜவுளித்துறை கூட்டமைப்பு போராட்டத்தால் பல லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு – நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.

*கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் பொறுப்பில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம்- அமைச்சர் முத்துசாமியை நியமித்து முதலமைச்சர் உத்தரவு,

* மயிலாடுதுறையில் மாவட்ட மதிமுக செயலார் மார்கோணி தலைமையில் நிர்வாகிகள் 28 பேர் கூண்டோடு விலகல்- அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல்.

*ஜுலை 20 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தை சுமூகமாக நடத்த நடவடிக்கை- 19- ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு.

*மராட்டிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற காங்கிரஸ் திட்டம்- தேசியவாத காங்கிரஸ் உடைந்ததால் புதிய முயற்சி.

*நிலவை பற்றி ஆய்வுகளை மேற்கொள்ளும் சந்திராயன் 3 –ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து ஜுலை 14 ஆம் தேதி விண்ணில் ஏவ இ்ஸ்ரோ முடிவு.

*மத்திய பிரதேசத்தில் பாஜக நிர்வாகியால் சிறு நீர் கழிக்கப்பட்ட இளைஞரின் கால்களை கழுவினார் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் – மாலை அணிவித்து மன்னிப்பும் கோரினா் முதலமைச்சர்.

*ராஜஸ்தான் காங்கிரசில் நிலவும் மோதலை முடிவுக்குக் கொண்டு வர மேலிடம் நடவடிக்கை- முதலமைச்சர் அசோக் கேலாட் மற்றும் சச்சின் பைலட்டை டெல்லிக்கு அழைத்து கார்கே, ராகுல் சமரசம்.

*கனடாவில் இந்திய தூதரக அலுவலர்களுக்கு எதிராக காலிஸ்தான் ஆதரவாளர்கள் சுவரொட்டி- டெல்லியில் பேட்டி அளித்த இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி கண்டனம்.

*வீடுகளில் வளர்க்கும் கிளிகளை ஒப்படைத்து விடுங்கள்- மதுரை மாவட்ட வனத்துறை அலுவலர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்.

*கிருஷ்ணகிரி அருகே விபத்து – இரு சக்கர வாகனத்தில் சென்ற பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலக அலுவலர்கள் இருவர் மரணம்.

*கேரளா மற்றும் கர்நாடத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரம் – பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.

*தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை.. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கொடைக்கானல், செங்கோட்டை போன்ற இடங்களிலும் மழை நீடிக்கிறது/

*கிளர்ச்சி செய்த வாக்னர் படைத் தலைவர் பிரிகோசின் ரஷ்யாவில் தான் உள்ளார் – பெலரஸ் நாட்டில் இருப்பதாக வெளியான தகவலுக்கு அந்த நாட்டு அதிபர் மறுப்பு

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *