தலைப்புச் செய்திகள் (06-08 -2023)

*சென்னை பல்கலைக்கழகம் இந்தியாவுக்கு ஆறு குடியரசுத் தலைவர்களையும் இரண்டு நோபல் விஞ்ஞானிளை கொடுத்து உள்ளது.. பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு புகழாரம்.

*தகுதியான வேலை கிடைத்த பிறகும் படிப்பதை நிறுத்திவிடக் கூடாது.. மாணவர்கள் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை தேடித் தரவேண்டும் என்றும் பட்டமளிப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.

*சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு கடந்த மாதம் ஒரு கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு.. மருத்துவர்கள் அலட்சியமே காரணம் என்று குழந்தை தஸ்தாகிர் பெற்றோர் குற்றச்சாட்டு.

*பாக்டீரியா தொற்றினால் இரத்தத்தில் நச்சு கலந்து பாதிப்பு ஏற்பட்டதால்தான் குழந்தை தஸ்தாகிர் உயிரிழந்தது .. பெற்றோர் புகாருக்கு அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனை மருத்துவர்கள் விளக்கம்.

*கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழந்தது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படவேண்டு்ம்.. தஸ்தாகிர் பெற்றோரில் ஒருவருக்கு அரசு வேலை தருமாறும் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்.

*கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற பிரமாண்ட மராத்தான் போட்டி. 73 லட்சம் பேர் பங்கேற்றதால் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தது.. சாதனைப் புத்தகத்தை மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார் கின்னஸ் அமைப்பின் அதிகாரி.

*நிலம் கொடுத்ததாக வட இந்தியர்கள் 28 பேருக்கு பணி கொடுத்ததுப் பற்றிய சர்ச்சை.. வேலை பெற்ற 28 பேரும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் வழங்கியவர்கள் என்று என்.எல்.சி.விளக்கம்.

*கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்த 23 ஆயிரம் பேருக்கு இன்னும் வேலை கொடுக்காத போது வட இந்தியர்கள் 28 பேருக்கு வேலை கொடுத்தது ஏன் என்று அன்புமணி கேள்வி.. முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிடுமாறு வலியுறுத்தல்.

*புத்தன் அணையில் இருந்து நாகர்கோயிலுக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்.. தமிழ்நாடு அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை.

*காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசுடன் நடத்திய பேச்சில் பலன் ஏற்படவில்லை என்பதால்தான் நடுவர் மன்றத்தை நாடி தமிழ்நாடு அரசு உத்தரவைப் பெற்றது.. கர்நாடகத்துடன் பேச்சு நடத்துமாறு மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் துரை முருகன் பதில்.

*சென்னையில் கிண்டி அருகே தண்டவாளத்தில் விரிசல்.. ரயில் சேவை ஒரு மணி நேரம் பாதிப்பு, ரயில்கள் மெதுவாகச் செல்ல வேண்டிய நிலை.

*நடைபயணம் மேற்கொண்டிருந்த அண்ணாமலை மதுரையில் இருந்து விமானத்தில் சென்னை திரும்பினார்.. நடை பயணத்தில் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு உள்ள நாளுக்கு முதல் நாள் நடை இருக்காது என்று பாஜக நிர்வாகிகள் விளக்கம்.

*தமிழ்நாட்டில் அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகளுக்கு 9 சதவிகிதம் தனிப்பதிவுக் கட்டணம்.. உடனடியாக அமலுக்கு வந்ததால் அடுக்கு மாடி வீடுகள் விலை உயரும் என்று தகவல்.

*நாடு முழுவதும் 24 ஆயிரத்து 470 கோடி ரூபாய் செலவில் 508 ரயில் நிலையங்களை சீரமைக்கும் திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல்.. சேலம் ,தஞ்சாவூர்,திருப்பூர் உட்பட தமிழ்நாட்டில் 18 ரயில் நிலையங்களையும் சீரமைக்க நடவடிக்கை.

*நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொடுத்து உள்ள நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின் மீது எட்டாம் தேதி விவாதம் ஆரம்பம்.. பாஜக உறுப்பினர்கள் கட்டாயம் ஆஜராகி இருக்குமாறு கொறடா உத்தரவு.

*திருட்டுப் புகாருக்கு ஆளான இரண்டு சிறுவர்களை சிறு நீர் குடிக்க வைத்து தண்டனை.. வளைதளங்களில் வீடியோ பரவியதை அடுத்து ஆறு பேரை கைது செய்து உத்தரப் பிரதேச போலீஸ் நடவடிக்கை.

*திருப்பதி தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. கருணாகர ரெட்டி திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவராக நியமனம்.. ஆந்திர அரசு நடவடிக்கை.

*பாரதீய ஜனதா கட்சி இந்து மதத்தை பிராமணியத்துடன் அடையாளப்படுத்தி இந்தியாவின் 90 சதவிகித மக்களை புறக்கணிக்கிறது.. சுவாமி பிரசாத் மவுரியா புகார்.

*இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானின் ஹிரோசிமா நகரத்தின் மீது அணுகுண்டு வீசியதன் 78- வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு.. அமெரிக்காவின் தாக்குதலில் பலியான ஒன்றரை லட்சம் பேருக்கும் அஞ்சலி.

*பாகிஸ்தானில் ஹசரா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதில் 19 பேர் உயிரிழப்பு.. காயம் அடைந்த 40 பேர் மருத்துவமனையில் சேர்ப்பு.

*சென்னை அடுத்த இருங்காட்டுக் கோட்டையில் பைக் ரேஸில் பங்கேற்ற 13 வயது சிறுவன் உயிரிழந்த பரிதாபம்.. பெஙகளூர் சிறுவன் மரணத்தால் விளையாட்டு ஆர்வலர்கள் அதிர்ச்சி,

*ஆகஸ்டு 10 ஆம் தேதி வெளியாகும் ஜெயிலர் படத்திற்கான முன் பதிவு ஆரம்பம்.. அனைத்து அரங்குகளிலும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்ததாக தகவல்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *