* வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சென்னையில் கைது…தமிழ்நாடு, கர்நாடகா பகுதிகளில் மாறி, மாறி தலைமறைவாக இருந்து வந்த ஐஎஸ் தலைவர் சையது நபில் அகமதுவை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.
* ‘INDIA’ கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு… நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் 18 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் ஒருங்கிணைப்புக் குழு கூடுகிறது,
* ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவின் முதல் கூட்டம் தொடங்கியது…. முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான சிறப்புக் குழுவின் கூட்டத்தில் அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்பு.
* பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கடிதம்…. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் 9 முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க நேரம் வழங்க வலியுறுத்தல்.
* சேலம் சங்ககிரி அருகே லாரி மீது வேன் மோதி 6 பேர் உயிரிழப்பு… சின்னா கவுண்டனூர் நான்கு ரோடு சந்திப்பில் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்து.
* பல்லடம் அருகே 4 பேர் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த இருவர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர்…. வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரான வெங்கடேஷ், சேனை முத்தையா ஆகியோர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர்.
* டெல்லியில் ஜி20 மாநாட்டை முன்னிட்டு செப்டம்பர் 8 முதல் 10 வரை விடுமுறை… அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிப்பு.
* பெரம்பலூரில் கழுத்துப் பகுதியில் Tattoo குத்தியதால் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி கல்லூரி மாணவர் உயிரிழப்பு… Tattoo குத்திய உருவான கட்டி அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்ட நிலையில் உயிரிழப்பு.
* குறுவை சாகுபடி பாதிப்பு நிவாரணம் வழங்குவது பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை… டெல்டா மாவட்டங்களில் நேரடியாக ஆய்வு செய்து வரும் அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தவுள்ளார்.
* இன்று விசாரணை பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பான வழக்கு செப்டம்பர் 21 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவிப்பு… அடுத்த வாரம் விசாரிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கை நிராகரிப்பு.
* அமித் ஷா அமைச்சரானது, தமிழிசை சௌந்தரராஜன் ஆளுநர் ஆனாது திமுகவால் தான் என்று ஆ.ராசா பேச்சு… சனாதனத்தை எதிர்த்து பேசும் ஆ.ராசா திமுக தலைவராக முடியுமா? என்று தமிழிசை கேள்வி.
* உதயநிதியின் தலைக்கு விலை அறிவித்த சாமியாரின் தலையை சீவினால் ரூ.100 கோடி தருவதாக சீமான் பேச்சு… தலையை வெட்டு, நாக்கை வெட்டு என்று சொன்னால் அவர் சாமியார் அல்ல கசாப்பு கடைக்காரன் என்றும் கருத்து.
* பாரத மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள பிரம்மாண்ட நடராஜர் சிலை, நமது வளமான கலாசாரம் மற்றும் வரலாற்றின் கூறுகளை கண்முன்னே நிறுத்துகிறது… ஜி20 உச்சி மாநாட்டிற்காக உலக நாடுகள் ஒன்றுகூடும் போது, இந்தியாவின் பழங்கால கலைத்திறன மற்றும் பாரம்பரியங்களுக்கு ஒரு சான்றாக அமையும் என்று பிரதமர் மோடி பெருமிதம்.
* நடிகையும் அரசியல்வாதியுமான திவ்யா ஸ்பந்தனா ஜெனிவாவில் இறந்துவிட்டதாக வதந்தி… தவறான செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், விரைவில் நம்ம ஊரில் சந்திப்போம் என நடிகை திவ்யா ஸ்பந்தனா ட்விட்.
* நிலவை ஆய்வு செய்யும் ஜப்பான் விண்கலமான SLIM நாளை விண்ணில் பாய்கிறது… வானிலை காரணமாக இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நாளை விண்ணில் ஏவப்படுகிறது.
* ஆங்கிலத்தில் வைக்கப்பட்ட ‘INDIA’ என்ற பெயரை காட்டிலும், நாட்டிற்கு ‘பாரத்’ என பெயர் வைப்பதில் எந்த தவறும் இல்லை… ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா கருத்து.
* சென்னை பல்கலை., கோவை பாரதியார் பல்கலை. மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்துக்கு துணைவேந்தர்களை தேர்வு செய்ய குழு அமைப்பு…தமிழ்நாடு அரசின் எதிர்ப்பை மீறி யுஜிசி சார்பில் உறுப்பினர்களை நியமித்துள்ளார் ஆளுநர் ரவி.