*பிற்படுத்தப்பட்டோர், பட்டியிலனத்தவர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு எதிரான சானதன கோட்பாடு பற்றிதான் உதயநிதி பேசினார் … பிரதமர் மோடி, உதயநிதி சொன்னதை முழுமையாக அறியாமல் பேசுவதாகவும் மு.க.ஸ்டாலின் அறிக்கை.
*பாஜகவுக்கு வந்துள்ள சனாதன கோட்பாடு மீதா பற்று அல்ல,எதிர்க்கட்சிகள் கூட்டணியில் பிளவு ஏற்பட வேண்டும் என்பதுதான் என்று அமைச்சரின் தலைக்கு விலை வைத்தவர் மீது உபி அரசு வழக்குப் பதியவில்லை என்றும் விளக்கம்.
*சனாதனம் பற்றி அவதூறாக பேசியதாகக் கூறி உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக ஆளுநரிடம் பாஜக புகார் .. அமைச்சர் பேச்சு மத நம்பிக்கை கொண்டவர்கள் மனதை புண்படுத்துவதாக உள்ளது என்றும் முறையீடு.
*தமிழ்நாட்டில் இருந்து ஒழிக்கப்பட வேண்டியது திமுகதான் என்று அண்ணாமலை கருத்து .. டி.எம்.கே. என்றால் டெங்கு, மலேரியா, கொசு என்று விமர்சனம்.
*சனாதனம் பற்றி பேசினால் பதிலடி கொடுங்கள் என்று பிரதமர் மோடி பேசியது சட்டப்படி தவறு .. யாராக இருந்தாலும் சட்டப்படி தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா கருத்து.
*பல்லடத்தில் நான்கு பேர் கொல்லப்பட்ட வழக்கில் நேற்று சரணடைந்த முக்கிய குற்றவாளி வெங்கேடஷ், கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை கைப்பற்ற முயன்றபோது தப்பியோட முயன்றதாக தகவல் .. துப்பாக்கியால் மூன்று முறை சுட்டுப் போலீஸ் பிடித்ததால் காலில் பலத்த காயம் அடைந்த வெங்கடேஷ் மருத்துவ மனையில் அனுமதி.
*பல்லடம் கொலைக்கான ஆயுதங்களை வழங்கிய வெங்கடேசின் தந்தை அய்யப்பனும் கைது .. இதுவரை கைது செய்யப்பட்டு உள்ள நான்கு பேரிடமும் தொடர்ந்து விசாரணை.
*இமானுவேல் சேகரன் நினைவு தினம், முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜை ஆகியவற்றை முன்னிட்டு ராமநாத புரம் மாவட்டத்தில் இரண்டு மாதங்களுக்கு 144 போலீஸ் தடை உத்தரவு அமல் .. வெளி மாவட்ட வாடகை வாகனங்கள் உரிய அனுமதி இன்றி நுழையவும் தடை விதிப்பு.
*சென்னை தியாகராயர் நகரில் கிரிஜா என்பவர் வீட்டில் வாடகைத் தராமல் குடியிருந்த திமுக வட்டச் செயலாளர் வீட்டை காலி செய்துவிட்டதாக உயர்நீதி மன்றத்தில் போலீஸ் தரப்பில் அறிக்கை தாக்கல் … அரசியல்வாதிகள் அதிகாரம் மூலம் பொது மக்களை மிரட்டுவதை வேடிக்கை பார்க்க முடியாது என்று நீதிபதி கருத்து.
*சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடிகை விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை .. சீமான் தம்மை திருமணம் செய்து கொண்ட பிறகு ஏழு முறை கருக்கலைப்பு செய்ய வைத்ததாக புகார் கூறியிருந்ததால் நடவடிக்கை
*தந்தை இறந்ததை அடுத்து வாரிசு அடிப்படையிலான வேலையை மகளுக்கும் கருணை அடிப்டையில் வழங்கலாம் .. திருமணம் ஆகிவிட்டதால் வாரிசு அடிப்படையில் வேலை வழங்க மறுப்பதாக திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.
*சென்னை ஆவடியில் ஓ.சி.எப். ஆலை குடியிருப்பில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் இரண்டு பேர் நச்சு வாயு தாக்கி இறப்பு … ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்த இருவர் இறப்புக்கும் அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று புகார் .
*விதிகளை மீறி பேனர் வைப்பதற்கு அனுமதித்த அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கை பற்றி அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு .. சென்னை மற்றும் விழுப்புரத்தில் பேனர் விழுந்து இரண்டு பேர் இறந்த வழக்கு விசாரணை அக்டோபர் 5- ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.
*அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை உயர்நீதிமன்றத்திலேயே வேறு நீதிபதிக்கு மாற்றுமாறு லஞ்ச ஒழிப்புத் துறை கோரிக்கை … பொன்முடி மீதான வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து கடந்த மாதம் விசாரணை தொடக்கம்.
*இந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தாவில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு .. தெற்காசிய நாடுகளின் வளர்ச்சி ஆசியான் நாடுகளை சார்ந்து உள்ளதாக பேச்சு/
*ஜி- 20 நாடுகளின் முன்னிட்டு டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்… அமெரிக்க அதிபர் ஜோ பைடன் , இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உட்பட முக்கிய தலைவர்கள் வருகையால் தலைநகரில் வாகனப் போக்குவரத்துக்கும் கட்டுபாடுகள்.
*திருப்பதி மலைப்பாதையில் மேலும் ஒரு சிறுத்தை வனத்துறை கூண்டில் சிக்கியது .. இது வரை ஐந்து சிறுத்தைகள் சிக்கி உள்ளதாக தகவல்.
*சூரியனை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஆதித்யா எல் 1 தன்னைத் தானே படம் எடுத்து அனுப்பியதை வெளியிட்டது இ்ஸ்ரோ .. விண்கலத்தின் காட்சிகள் படத்தில் இடம் பெற்று உள்ளது.
*நிலவை ஆய்வு செய்வதற்காக ஸிலிம் என்ற விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது ஜப்பான் .. விண்ணில் ஏவுவதை மோசமான வானிலை காரணமாக மூன்று முறை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த விண்கலம் வானில் பாய்ந்தது.
*‘ஷாருக்கான்,நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடித்து உள்ள ஜவான் திரைப்படம் உலகம் முழுவதும் 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியானது.. ஷாருக் நடிப்பிற்கும் அட்லி இயக்கத்திற்கும் ரசிகர்கள் பாராட்டு.