*மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலில் குண்டு வீச்சு, தீ வைப்பு, வாக்குச் சாவடி சூறை.. 15 பேர் இறப்பு.

*உள்ளாட்சித் தேர்தல் கலவரத்துக்கு திரினாமுல் காங்கிரசும் பாரதீய ஜனதாவும் ஒருவர் மீது ஒருவர் புகார்.. பல இடங்களில் சாலை மறியல்.

*டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக ஆளுநர் ரவி சந்திப்பு.. செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்துவிட்டு பின்னர் நிறுத்தி வைத்தது பற்றி விளக்கியதாக தகவல்

*மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்ப படிவத்தை வெளியிட்டது தமிழக அரசு – விண்ணப்பத்தில் ஆதார் எண், பெயர், குடும்ப அட்டை எண், தொலைபேசி எண் உள்ளிட்ட தகவல்களை தர அறிவுறுத்தல்.

*பத்திரப் பதிவுத் துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணத்தை அதிகரித்து தமிழக அரசு உத்தரவு.. விடுதலை ஆவணங்களுக்கான கட்டணம் ரூ 4 ஆயிரத்தில் இருந்து பத்தாயிரமாக உயர்வு

*சென்னையில இரண்டு நாள் வேளாண் வர்த்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. விவசாயிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திமுக அரசு பாடுபடுவதாக பேச்சு.

*திருச்சியில் ஜுலை 28- ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் வேளாண் வணிகத் திருவிழா..விவசாய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தகவல்.

*கோவை சரக டி.ஐ.ஜி. தற்கொலை குறித்து சி.பி.ஐ.விசாரிக்க வேண்டும்.. தூத்துக்குடியில் அளித்த பேட்டியில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் வலியுறுத்தல்.

*போலிசாரின் மன அழுத்தத்தைப் போக்க ஆலோசனை வழங்கும் திட்டம் முன்பைவிட மேம்படுத்தப்பட்டு உள்ளது…எடப்பாடி சொன்ன புகாருக்கு காவல்துறை விளக்கம்.

*திமுக அமைச்சர்கள் பலரும் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறைக்கு பயந்து நடுங்குவதாக எடப்பாடி கருத்து.. மடியில் கனமில்லாததால் அதிமுகவுக்கு பயமில்லை என்று பேட்டி.

*கோயில்களில் தனி நபர்களுக்கு செய்யப்படும் சிறப்பு மரியாதை குறித்து அறநிலையத் துறை தெளிவுப்படுத்த வேண்டும்.. சிவங்கை மாவட்ட கோயில் ஒன்றில் வழங்கப்படும் சிறப்பு மரியாதை தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு.

*தமிழ்நாடு வக்பு வாரியத்தின் ரூ 2000 கோடி சொத்துகளை விற்க சதி.. வக்பு வாரியத் தலைவர் அப்துல் ரகுமான் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துமாறு ஹஜ் அறக்கட்டளை நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தல்.

*சென்னையில் ஓடும் ரயிலில் திருடர்களிடம் இருந்து செல்போனை காப்பாற்ற முயன்ற போது தவறி விழுந்த இளம் பெண் சிகிச்சை பலனின்றி இறப்பு.. பிடிபட்ட இரண்டு மீது பேர் பதியப்பட்டிருந்த திருட்டு வழக்கு கொலை வழக்காக மாற்றம்.

*கேரளாவில் மின்மாற்றிகளில் அலுமினிய ஒயர்கள், தமிழ்நாட்டில் காப்பர் பயன்படுத்தப்படுவதால் விலை அதிகம் – அறப்போர் இயக்கப் புகாருக்கு மின் வாரியம் விளக்கம்.

*தெலுங்கான மாநிலம் வரங்களில் பத்ரகாளி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு.. கோசலையில் உள்ள பசுக்களுக்கு தீவனம் வழங்கி மகிழ்ச்சி.

*குடும்ப அரசியல் செய்யும் அனைத்துக் கட்சிகளின் முக்கிய நோக்கமே ஊழல் செய்வதுதான்..தெலங்கானா மாநில நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு.

*அரியானாவில் ராகுல் காந்தி வயலில் இறங்கி விவசாயிகளுடன் நடவு நட்டு அசத்தல்..டிராக்டரை ஓட்டி உழவும் செய்த காட்சி வைரல்.

*லடாக்கில் சீனாவின் எல்லை ஓரத்தில் இந்திய ராணுவம் ஒத்திகை.. சிந்து நதியை தாண்டிச் சென்று தாக்கும் பயிற்சியை மேற்கொண்டதாக தகவல்.

*வந்தே பாரத் உள்ளிட்ட சில ரயில்களில் குளிர்சாதனப் பெட்டிக்களுக்கான கட்டணம் 25 சதவிகிதம் வரை குறைப்பு.. கட்டணம் அதிகம் என்று புகார் வந்ததால் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை.

*தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தொண்டர்களை சந்திக்க சுற்றுப்பயணம்..நாசிக்கில் நடந்த நிகழ்ச்சியில் “நான் ஓய்வுப் பெறவும் இல்லை, அரசியலில் இருந்த விலகவும் இல்லை” என்று பேச்சு.

*மணிப்பூரில் கலவரம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள இணைய தள சேவையை பகுதி நேரம் வழங்க வேண்டும்.. அந்த மாநில உயர்நீதி மன்றம் உத்தரவு

*இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் அணி தயக்கம்.. வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவால் பூட்டோ தலைமையிலான குழு ஆலோசனை.

*காரைக்குடி சுற்றுவட்டாரத்தில் கனமழை – விவசாய நிலத்தில் போர் போடும் வேலை செய்து கொண்டுருந்த மூவர் மீது மின்னல் தாக்கி படுகாயம்.

*மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை.. குற்றாலம்,சுருளி உட்பட பல அருவிகளில் தண்ணீர் கொட்டுவதால் பொதுமக்கள் ஆனந்தக் குளியல்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *