*ஆளுநர் பதவி வகிக்கும் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் எதிரானவர்..குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள 15 பக்க கடிதத்தில் சரமாரி குற்றச்சாட்டு.

*ஊழல் புகாருக்கு ஆளான முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்கு தொடர ரவி அனுமதி மறுக்கிறார் என்று முதலமைச்சர் புகார். குழந்தை திருமணத்தை ஆதரித்துப் பேசும் ஆளுநர் மீது வழக்குப் போடலாம் என்று கடிதத்தில் கருத்து.

*ஆளுநர் மீது முதலமைச்சர் புகார் தெரிவிப்பது பிரச்சினையை திசை திருப்பும் செயல்..முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்.

*இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர் மற்றும் ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களிலும் கனமழை.. நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக பல இடங்களில் சாலைகள் துண்டிப்பு.

*டெல்லியி்ல் ஒரே நாளில் 15 சென்டி மீட்டர் மழை கொட்டியதால் சாலைகளில் வெள்ளம்.. இயல்பு வாழ்க்கை முடக்கம்.பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

*நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் கைது…இரண்டு படகுகளையும் சிறைபிடித்த இலங்கை கடற்படை அத்துமீறல்.

*தக்காளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்து கிலோ ரூ 120 க்கு மீண்டும் விற்பனை.சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ 200 தாண்டியது.

*தமிழ்நாடு முதன்மை மாநிலம் என்று பேசி அத்தியாவசியப் பொருட்களின் விலையை ஏற்றவிட்டனர்..திமுகவுக்கு ஆட்சி நடத்த தகுதியில்லை என்று சீமான் காரைக்குடியில் விமர்சனம்.

*தேனி மாவட்டம் சுருளி வனப்பகுதியில் காட்டு யானைகள் நடமாடுவதால் அருவியில் குளிப்பதற்கு தடை.. ஆர்வமாக வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்.

*காவிரி டெல்டாவில் விளைந்த பருத்தியை விற்க முடியாமல் விவசாயிகள் தவிப்பு.. திருவாரூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் இரண்டு நாட்களாக காத்துக்கிடக்கும் பரிதாபம்.

*தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்து நாளை மறுதினம் ஆலோசனை நடத்த முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு.. மாவட்ட எஸ்.பி.க்கள் மற்றும் ஐ.ஜி.உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு அழைப்பு.

*மதுரையில் ஆகஸ்டு 20 ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக மாநாட்டுக்கு கால் கோள் விழா.. முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு.

*நாமக்கல் ஜோடர் பாளையத்தில் சில வாரங்கள் முன்பு இளம் பெண் கொல்லப்பட்டதை அடுத்து அசம்பாவிதங்கள் அதிகரிப்பு.. சட்ட விரோத செயல்களை தடுக்க கண்காணிப்புக் குழுக்களை அமைத்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை.

*நாட்டை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் திமுக ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் பரவாயில்லை.. சென்னையில் திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு.

*58 கிராம கால்வாய் திட்டத்திற்கு நிரந்தர அரசாணை மற்றும் கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்.. உசிலம்பட்டி அருகே விவசாயிகள் 5- வது நாளாக போராட்டம்.

*முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மனைவி தயாளு அம்மாள் 90- வது பிறந்த நாள் .. கோபாலபுரம் இல்லத்திற்கு வாழ்த்துச் சொல்ல வந்திருந்த மு. க. ஸ்டாலின் மற்றும் முக அழகிரி சந்திப்பு.

*கடந்த வாரம் டெல்லியில் மோட்டார் சைக்கிள் மெக்கானிக்குகள் உடன் உரையாடிய வீடியோவை வெளியிட்டார் ராகுல் காந்தி.. தன்னிடம் உள்ள கே.டி.எம். 390 மோட்டார் சைக்கிளை ஓட்ட பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதிப்பதில்லை என்றும் பேச்சு.

*விலை பல மடங்கு உயர்ந்து உள்ளதால் வாரனாசியில் பாதுகாவலர்களை கடை முன்பு நிறுத்தி தக்காளி விற்கும் வியாபாரி.. வீடீயோ வைரல்.

*ரஷ்யாவை தாக்குவதற்கு உக்ரைனுக்கு கொத்துக் குண்டுகளை வழங்குகிறது அமெரிக்கா.. அதிபர் ஜோ பைடன் முடிவால் நட்பு நாடுகள் அதிருப்தி.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *