*5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதிகள் அறிவிப்பு…. மிசோரம் – நவம்பர் 7, மத்திய பிரதேசம் – நவம்பர் 17, ராஜஸ்தான் – நவம்பர் 23, சத்தீஸ்கர் – நவம்பர் 7 மற்றும் 17 (2 கட்டமாக), தெலங்கானா – நவம்பர் 30 ஆம் தேதி தேர்தல்
*5 மாநில தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தகவல்…. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
*தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி வரை நடைபெறும்….சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு.
*காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாடுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம்…. சட்டப்பேரவையில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
*எந்த சூழலிலும் தமிழ்நாட்டுக்கு தேவையான காவிரி நீரை விட்டு தராமல் பெற்று தருவோம்… சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தை கொண்டு வந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
*அத்திக்கடவு-அவினாசி திட்டம் 15 நாளில் தொடங்கப்படும்….சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு.
*நெஞ்சு வலி காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி….புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி.
*முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு….வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரிக்கை….சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வரிடம் கோரிக்கை வைத்ததாக அன்புமணி தகவல்
*காவிரி பிரச்னையில் காங்கிரசை கண்டிக்காமல் கூட்டணிக்காக திமுக நாடகமாடுகிறது….காவிரி நீர் பங்கீடு, அணை கட்டும் பிரச்னை உள்பட பெரும்பாலானவை திமுக ஆட்சியில் உருவானவை என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம்.
*சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை; அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு விசாரணை தள்ளிவைப்பு….விசாரணையை வருகிற 19-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.
*காசா எல்லை முழுவதும் இஸ்ரேல் படைகளின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக இஸ்ரேல் அறிவிப்பு….காசா பகுதிக்குள் உணவு, எரிபொருள் கொண்டு செல்ல தடை.
*2023ம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு… 2023-24 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு கிளாடியா கோல்டினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
*அரியலூர் பட்டாசு விபத்தில் ஆலை உரிமையாளர் ராஜேந்திரன், மருமகன் அருண் ஆகியோர் கைது….திருமானூர் அருகே விராகலூரில் நடைபெற்ற விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியானது குறிப்பிடத்தக்கது.