*வட மாநிலங்களில் கன மழை தொடருகிறது..இமச்சால், அரியானா, உத்தராகாண்ட் மாநிலங்களில் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு, இயல்பு வாழ்க்கை முடக்கம்.

*யமுனா ஆறு கரை புரண்டு ஓடுவதால் டெல்லியில் தாழ்வான இடங்களை தண்ணீர் சூழ்ந்தது. பாதிக்கபட்ட இடங்களில் படகு மூலம் அமைச்சர் ஆய்வு.

*மலை மாநிலமான இமாச்சலில் நிலச்சரிவு.. மண்டி- குலு இடையேயான சாலை, பியாஸ் ஆற்று வெள்ளத்தில் மூழ்கியது.

*பல மாநில வெள்ளப் பாதிப்பு குறித்து பிரதமர் மோடி டெல்லியில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை.. மீ்ட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைளை துரிதமாக மேற்கொள்ள உத்தரவு.

*சென்னையில் மெரினா கடலில் கலைஞர் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிரான வழக்குத் தள்ளுபடி. மனு, பொது நலன் சார்ந்ததாக இல்லை என தலைமை நீதிபதி கருத்து.

*குற்றாலத்தில் அருவிகளில் குளித்து மகிழ பல ஆயிரம் பேர் படையெடுப்பு.. சுற்றுலாப் பயணிகளைக் கவர படகுப் போக்குவரத்து தொடக்ம்.

*சென்னை பழவாந்தாங்கல் ரயில் நிலையத்தில் மாணவியை ரயில் முன் தள்ளிவிட்டுக் கொன்ற வழக்கு.. கைது செய்யப்பட்ட சதீஷ் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்.

*திருப்பத்தூர் , வேலூர் , திருவண்ணாமலை உட்பட பல மாவட்டங்களில் மழை… திருவாரூர் , மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி.

*காவரி டெல்டாவில் பருத்தியை விற்க முயலும் விவசாயிகளுக்கு தினம் ஒரு பிரச்சினை… சீர்காழி அடுத்த எருக்கூரில் ஒழங்கு முறை விற்பனைக் கூடத்திற்கு கொண்டு வரப்பட்ட பருத்தி மழையில் நனைந்ததால் விற்பதில் சிக்கல்.

*கிறிஸ்தவ மத போதகர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக புகார் …திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன், நாகர்கோவிலில் சைபர் கிரைம் போலீசாரின் 8 மணி நேர விசாரணைக்கு பிறகு கைது .

*அத்தியாவசியப் பொருட்களில் விலையைக் கட்டுப்டபடுத்துவதுக் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் அமைச்சர்கள் உடன் ஆலோசனை.. நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனையை தொடங்குமாறு அறிவுறுத்தல்.

*தக்காளியைத் தொடர்ந்து சின்ன வெங்காயம் விலையும் உச்சத்தை தொட்டது.. ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ 200 க்கு விற்பனை.

*மதுவை கண்ணாடிப் பாட்டில்களில் விற்பதால் ஏற்படும் பிரச்சினைகளை களைய நடவடிக்கை.. காகிதத்தால் ஆன டெட்ரா பேக்குகளில் விற்பதை விரைவில் தொடங்க உள்ளதாக அமைச்சா் முத்துசாமி தகவல்.

*இந்து மதத்தை தவிர இந்தியாவில் எந்த மதமும் இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் செயல்படுகிறது மத்தியில் உள்ள பாஜக அரசு.. அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்.

*திமுக அரசு, தன் மீதான தவறுகளை மறைப்பதற்காக ஆளுநரை வில்லனைப் போல சித்தரிக்கிறது..பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்.

*அரசியல் நுழைவுக்கான அடுத்தக் கட்ட நடவடிக்கையை தொடங்குகிறார் நடிகர் விஜய். 234 தொகுதிப் பொறுப்பாளர்கள் உடன் நாளை சென்னையில் ஆலோசனை.

*வேலையில்லாப் பட்டதாரி படத்தில் நடிகர் தனுஷ் புகைப்பிடிக்கும் காடசியில் எச்சரிக்கை வாசகம் இல்லாத விவகாரம்.. வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை சைதாப் பேட்டை நீதிமன்றம் தீர்ப்பு.

*சிதம்பரம் தீட்சிதர்கள் குடுப்பத்து சிறுமிகளுக்கு நடைபெற்ற திருமணம் தொடர்பான வழக்கு முடித்து வைப்பு..காவல் துறை விளக்கத்தை ஏற்று உயர்நீதிமன்றம் நடவடிக்கை.

*பாஜக தலைவர் அண்ணாமலையுடன் தகராறு இருப்பதாக வெளியான தகவலுக்கு வானதி சீனுவாசன் மறுப்பு..எந்த மோதலும் இல்லை என்று விளக்கம்.

*சென்னையில் சீருடை அணிந்து வேலைக்கு புறப்பட இருந்த போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை.. திடீரென எடுத்த முடிவுக்கான காணம் குறித்து போலிஸ் விசாரணை.

*கடலூரில் திமுக எம்.எல்.ஏ. ஐய்யப்பன் பங்கேற்ற நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல்.. தனிப்படைகள் அமைத்து போலிஸ் விசாரணை.

*செங்கற்பட்டில் வெட்டிக் கொல்லப்பட்ட பாமக நிர்வாகி நாகராஜன் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்.. குற்றவாளிகை விரைவில் பிடித்து விடுவோம் என்று போலிஸ் உறுதி அளித்ததால் சமரசம்.

*வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கர் குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டி..முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் முன்னிலையில் வேட்புமனு தாக்கல்.

*மேற்கு வங்கத்தில் இருந்து மாநிலங்களவைக்கு ஆறு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கத் தேர்தல்.. ஆறு இடங்களுக்கும் வேட்பாளர்களை அறிவித்து மம்தா பானர்ஜி அதிரடி.

*சிரியாவில் அமெரிக்க படைகள் டிரோன்கள் மூலம் வான் வழித்தாக்குதல்.. ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் முக்கியத் தலைவரான உஸ்மா அல் முஹாகிர் கொலை.

*உக்ரைன் நாட்டை உடனே நேட்டோ அமைப்பில் சேர்க்குமாறு அதிபர் ஜெலான்ஸ்கி விடுத்த கோரிக்கையை நிராகரித்தார் அமெரிக்கா அதிபர்.. போர் நடைபெறும் சேர்த்தால் நேட்டோ நாடுகளும் ரஷியாவுக்கு எதிரான போர் செய்ய நேரிடும் என்று விளக்கம்.

*ரஷ்யாவுக்கு எதிராக கடந்த வாரம் கிளர்ச்சியில் ஈடுபட்ட வாக்னர் என்ற கூலிப்படைத் தலைவர் பிரிஜிகின் மன நிலையில் மாற்றம்.. மாஸ்கோவில் அதிபர் புடின் உடன் சந்திப்பு

*கைத்தறி ரகங்களை விசைத்தறியில் ஓட்டுவதற்கு எதிர்ப்பு.. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் திருப்பூர் மாவட்டம் சூலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் பல ஆயிரம் பேர் பங்கேற்பு.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *