*திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 சொத்துக்களை முடக்கி அமலாக்கத் துறை அதிரடி .. மத்திய அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் நடவடிக்கை.
*மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தம் .. அணையின் நீர் மட்டம் குறைந்ததை அடுத்து நடவடிக்கை.
*120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையில் நீர் மட்டம் 30 அடியாக சரிந்தது.. வட கிழக்குப் பருவமழை ஆரம்பமானல் அணைக்கு நீர் வரத்து ஏற்பட வாய்ப்பு,
*தென் மேற்கு பருவ மழை வழக்கமான அளவு பெய்து போதிய தண்ணீர் வரத்து இருந்திருந்தால் காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடி செய்து அக்டோபரில் அறுவடை செய்திருக்காலம் … குறுவையும் கை விட்டதால் ஒரு போக சம்பா சாகுடியாவது செய்யமுடியுமா என்று விவசாயிகள் கவலை.
*காவிரி ஒழுங்காற்றுக் குழு டெல்லியில் நாளை கூடுகிறது .. தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கை மற்றும் தண்ணீர் தர இயலாது என்ற கர்நாடகத்தின் பதில் குறித்து கருத்துக் கேட்க முடிவு.
*கடந்த ஐந்து மாதங்களாக சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு உயர் நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் … நாளை விசாரணை நடத்துவதாக நீதிபதி ஜெயச்சந்திரன் அறிவிப்பு.
*நீண்ட காலமாக சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்வது குறித்து நீதிபதி என். ஆதி நாதன் தலைமையில் குழு அமைப்பு.. ஆளுநர் ஒப்புதல் தந்த உடன் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யப்படுவார்கள் என்று சட்ட சபையில் சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு முதலைமைச்சர் ஸ்டாலின் பதில்.
*நீண்ட நாடகளாக சிறையில் உள்ள இஸ்லாமியக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக உண்மைக்குப் புறம்பான தகவல்களை முதலமைச்சர் கூறுவதாகக் குற்றச்சாட்டு .. சட்டப் பேரவையில் நீண்ட நேரம் நடைபெற்ற விவாதத்திற்குப் பிறகு அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு.
*பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக முஸ்லிம் கைதிகளை விடுவிக்க எடுத்த நடவடிக்கை என்ன என்று மு.க. ஸ்டாலின் கேள்வி.. குடியுரிமைத் திருத்தச் சட்டம் உள்ளிட்டவற்றை ஆதரித்து விட்டு இப்போது திடீர் பாசம் காட்டுவதாகவும் விமர்சனம்.
*சட்டசபையில் அதிமுக மீது முதலமைச்சர் சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு பதி்ல் கூறுவதற்கு சபாநாயகர் அனுமதி தரவில்லை .. வெளிநடப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி பேட்டி.
*பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் தம்மைச் சந்தித்து சிறையில் உள்ள 36 கைதிகளை விடுவிக்க வலியுறுத்தமாறு கேட்டுக் கொண்டதால் பேரையில் தீர்மானம் கொண்டு வந்ததாக எடப்பாடி பழனிசாமி விளக்கம் .. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த ஏழு பேரை விடுவித்தது அதிமுகதான் என்றும் பேட்டி.
*திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், மனைவி, கல்லூரி நிர்வாகிகள் விசாரணைக்கு வருமறு வருமான வரித்துறை சம்மன் .. சென்னையில் உள்ள அலுவலகத்தில் சனிக்கிழமை ஆஜராகி விளக்கம் தர உத்தரவு.
*ஜெகத்ரட்சனின் வீடு உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற ஐந்து நாள் வருமான வரி சோதனை நிறைவு .. மொத்தம் ஐம்பது இடங்களில் கடந்த வெள்ளிக் கிழமை சோதனை ஆரம்பமானது.
*கரூர் அருகே காவரி ஆற்றில் மணல் அள்ளிய பிறகு மூடப்பட்ட மணல் குவாரிகளில் அமலாக்கத் துறை சோதனை .. கடந்த மாதங்களில் எவ்வளவு மணல் அள்ளப்பட்டது என்றும் அள்ளப்பட்ட மணல் முறையாக பதிவு செய்யப்பட்டு உள்ளதா என்றும் கணக்கிட முடிவு.
*கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புப் படுத்தி பேசக்கூடாது .. விபத்தில் பலியான கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு நிரந்தர தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு
*புதுச்சேரி மாநிலத்தில் ஒரே பெண் அமைச்சரான சந்திர பிரியங்கா திடீர் ராஜினாமா .. தலித் மற்றும் பெண் என்ற இரு பெருமைகளோடு இருந்த தமக்கு அதுவே மற்றவர்களின் உறுத்தலுக்கு காரணமாகி சதி வலையில் சிக்க வைக்கப்பட்டதாக முதல்வர் ரங்கசாமிக்கு கடிதம்
*மக்கள் செல்வாக்கு இல்லாவிட்டாலும் பணத் திமிரும் அதிகாரச் செல்வாக்கும் உள்ளவர்களுக்கு தாம் வகித்த அமைச்சர் பதவியை தந்து விடவேண்டாம் என்று சந்திர பிரியங்கா வேண்டுகோள் .. அமைச்சர் பதவியை துறந்துவிட்டாலும் நெடுங்காடு சட்டமன்ற உறுப்பினர் பதவியில் தொடர இருப்பதாக அறிவிப்பு.
*பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அணிவிக்க வேண்டிய தங்கக் கவசத்தை தேவர் நினைவிட பொறுப்பாளர்கள் மற்றும் அதிமுக பொருளாளர் நத்தம் விசுவநாதனிடம் ஒப்படைக்க வேண்டும் … தேவர் குரு பூஜையை முன்னிட்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.
*நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன் துறைக்கான கப்பல் போக்குவரத்து 12- ஆம் தேதி முதல் நடைபெறும் … இன்று ஆரம்பமாவதாக இருந்த கப்பல் போக்குவரத்து நிர்வாகக் காரணங்களுக்காக மாற்றம்.
*நோயாளிகளின் உறவினர் அல்லாதோர் உறுப்புத் தானம் வழங்குவதை மருத்துவ மனைகள் ஏற்க மறுப்பது சட்ட விரோதம் .. காஜா மொய்தீன் என்பவருக்கு ராமாயி என்பவர் சிறு நீரகம் வழங்குவதை தனியார் மருத்துவமனை ஏற்க மறுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து.
*செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி சென்னையில் டி.எம்.எஸ். வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.. அனைவரையும் குண்டுகட்டாக வேனில் ஏற்றி அப்புறப்படு்த்தியது காவல் துறை.
*சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து குறைந்ததால் காய்கறி விலை அதிகரிப்பு .. கடந்த வாரம் ரூ 50 க்கு விற்ற ஒரு கிலோ பீன்ஸ் ரூ 70 ஆகவும் ரூ 30-க்கு விற்க்கப்பட்ட அவரைக் காய் ரூ 60 ஆகவும் விற்பனை.
*டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. அனுல்லா கான் வீட்டில் பண பறிமாற்ற மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை .. கைது செய்யப்படலாம் என்ற தகவலால் பரபரப்பு.
*இ்ஸ்ரேலுக்குள் ஊடுறுவி தாக்குதல் நடத்திய ஹமாஸ் பேராளிக் குழுவைச் சேர்ந்த 1500 பேர் கொன்று குவிப்பு.. நாட்டின் எல்லையை தங்களின் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு.
*பாலஸ்தீனத்தின் முக்கிய நகரமான காளசா மீது இஸ்ரேல் படைகள் இரவு முழுவதும் சாமாரியாக குண்டுகளை வீசித் தாக்குதல் .. தாக்குதல் தொடருமானால் தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள இஸ்ரேலியர்களை கொல்வொம் என்று ஹமாஸ் எச்சரிக்கை.
*தமிழ்நாட்டில் இருந்து உயர்கல்வி மற்றும் வேலைகளுக்காக இஸ்ரேல் சென்றவர்கள் சிக்கித் தவிப்பு .. உதவி தேவைப்படுவோர் தொடர்பு கொள்வதற்கான தொலை பேசி எண்களை வெளியிட்டது தமிழக அரசு.
*இ்ஸ்ரேல் பிரதமர் பெஞ்கமின் நெதான்யாகுவுடன் பிரதமர் மோடி பேச்சு .. இ்ஸ்ரேல் மக்களுக்காக இந்திய மக்கள் துணை நிற்பார்கள் என்று உறுதியளிப்பு
*கர்நாடகத்தில் ஸ்ரீரங்கப்பட்டினம் அருகே ஐந்து ஏக்கர் பரப்பளவில் நாடக மையத்தை உருவாக்கி உள்ளதாக நடிகர் பிரகாஷ் ராஜ் அறிவிப்பு .. நடிப்புக் கலையை பழகுவதற்கு ஏராளமானவர்கள் ஆர்வம் காட்டுவதாக பேட்டி.