*அமலாக்கத் துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ராவின் பதவியை 3- வது முறையாக நீட்டித்ததை ரத்து செய்து உச்ச நீதின்றம் பரபரப்புத் தீர்ப்பு.. ஜுலை இறுதி வரை மட்டும் பணியில் தொடர அனுமதி வழங்கி உத்தரவு.
*அமலாக்கத்துறை இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு தந்த பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மன்னிப்பு கேட்கவேண்டும் … காங்கிரஸ் வலியுறுத்தல்.
*மேற்கு வங்கத்தில் உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை.. மூன்றில் இரண்டுப் பங்குக்கும் அதிமான இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை.
* குற்றம் செய்ததற்கான அனைத்து ஆவணங்களும் இருந்தால் மட்டுமே அமலாக்கப் பிரிவுக்கு கைது செய்யும் அதிகாரம் உள்ளது என்று மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் உயர்நீதிமன்றத்தில் வாதம் .. விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமே கைது செய்ய முடியாது என்று செந்தில் பாலாஜி வழக்கில் விளக்கம்.
* விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஒத்துழைக்கவில்லை என்று அமலாக்கத் துறை சொல்வது தவறு என மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ பதில்.. செந்தில் பாலாஜி தரப்பு வாதம் முடிவடையாததால் விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு.
*தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லியில் மத்திய அரசு வழக்கறிஞர் வெங்கட ரமணியுடன் சந்திப்பு..அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க தமக்கு அதிகாரம் உள்ளதா என்று கருத்துக் கேட்டதாக தகவல்.
*காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்புத் தகுதிகளை ரத்து செய்ததற்கு எதிரான வழக்கு.. ஆகஸ்டு 2 ஆம் தேதி முதல் தினமும் விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு.
*நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது.சட்டம் ஒழுங்கை சிறப்பாக வைத்திருக்க வேண்டும்..காவல் துறை அதிகாரிகளுடன் சென்னையில் ஆலோனை நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.
*தேர்தல் ஆணைய இணையதளத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகாரம்.. இனி அதிமுக என்ற பெயரை பன்னீர்செல்வம் பயன்படுத்தினால் நடவடிகை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை.
*கோட நாடு கொலை வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி மாவட்டத் தலைநகரங்களில் ஆகஸ்டில் ஆர்ப்பாட்டம்..ஓ.பன்னீர் செல்வம் பதிலடி.
*நடிகர் விஜய், தமது மக்கள் இயக்கத்தின் 234 தொகுதி நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து ஆலோசனை.. அரசியல் கட்சித் தொடங்குவது பற்றி கருத்துக் கேட்டதாக தகவல்.
*டெட்ரா பேக்கில் மது விற்கும் முடிவுக்கு பாமக தலைவர் அன்புமணி எதிர்ப்பு.. முத்துசாமி மது விலக்கு அமைச்சரா அல்லது மது விற்கும் துறை அமைச்சரா என்று கேள்வி.
*காட்பாடியில் ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் என்று அறிவித்த ஓட்டலை மூடச் சொனன விவகாரம்.. சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்த எடுத்த நடவடிக்கைப் பற்றி வதந்திகளை பரப்பவேண்டம் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.
*பெரம்பலூரில் டாஸ்மாக் மதுக் கூடத்தில் ஒருவர் இறந்து கிடந்ததால் பரபரப்பு… மதுக் கூடத்தில் ஆள் ஒருவர் இருப்பதைக் கவனிக்காமல் பூட்டிச் சென்றுவிட்டு காலையில் திறந்தபோது சடலம் கிடப்பது தெரிந்தது.
*அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வருமானத்திற்கு அதிகமாக ரூ 172 கோடிக்கு சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு..810 பக்க குற்றப்பத்திரிகையை திருவாரூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது லஞ்ச ஒழிப்புத் துறை.
* அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி அசோக் குமார் தொடர்புடைய மூன்ற இடங்களில் கரூரில் வருமான வரித்துறை சோதனை.. ஏற்கனவே மே 26 மற்றும் ஜுன் 23 ஆம் தேதி சோதனை நடந்த இடங்களில் மீண்டும் நடந்த சோதனையால் பரபரப்பு.
* கூடுவாஞ்சேரி காவல் நிலைய ஆய்வாளர் மகிதா, அரசு மருத்துவரை மிரட்டி ரூ 12 லட்சம் லஞ்சம் பெற்றதாக சஸ்பெண்ட்.. 17 வயது சிறுமிக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ததாக மிரட்டி பணம் பெற்றார் என்ற தகவலின் பேரில் தாம்பரம் காவல் ஆணையர் நடவடிக்கை.
* பெண் ஐ.பி.எஸ்.அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் அளிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து முன்னாள் ஏ.டி.ஜி.பி. ராஜேஸ் தாஸ் மேல் முறையீடு..விசாரணையை 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது விழுப்புரம் அமர்வு நீதிமன்றம்.
*விழுப்புரத்தில் வள்ளலார் அருள் மாளிகையை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது இந்து சமய அறநிலையத் துறை. இப்போது நிர்வாகியாக உள்ள அண்ணாமலை என்பவர் மோசடிகளில் ஈடுபடுவதாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தினர் அதிகாரிகள்.
*திரை அரங்குகளின் கட்டணத்தை உயர்த்தினால் படம் பார்க்க வருகிறவர்கள் எண்ணிக்கை குறைந்துவிடும்.. திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு எதிர்ப்பு.
* கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 இடங்களில் பட்டா சிறப்பு முகாம்கள்.. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு கடிதம்.
*நடிகர் அஜித் பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய கடனை திருப்பித் தரவில்லை.. வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட படங்களைத் தயாரித்த மாணிக்கம் நாராயணன் பேட்டி ஒன்றில் புகார்.
* நாடாளுமன்றத் தேர்தல் குறித்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி டெல்லியில் 18-ஆம் தேதி ஆலோசனை..எடப்பாடி பழனிசாமி மற்றும் அன்புமணிக்கு அழைப்பு.
*நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில டெல்லியில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 50- வது கூட்டம்.. ஜி.எஸ்.டி.அமைப்பின் தகவல்களை அமலாக்கத் துறைக்கு வழங்கும் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி ஆளும் மாநில அமைச்ர்கள் எதிர்ப்பு.
* வட இந்திய மாநிலங்களில் மேலும் சில நாட்களுக்கு கன மழை நீடிக்கும். . இந்திய வானிலை மையம் எச்சரிக்கை.
*இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் சுமார் 40 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டு உள்ளனர்.. ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு.
*நேபாளத்தில் எவரெஸ்ட் சிகரம் அருகே தனியார் ஹெலிகாப்ட்டர் விழுந்து நொறுங்கி விபத்து.. மெக்சிக்கோ நாட்டின் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் மற்றும் பைலட் இறப்பு.
*அமர்நாத் யாத்திரைக்கு சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 பேர் நிலச்சரிவில் சிக்கித் தவிப்பு… அனைவரும் தாம்பரத்தைச் சேர்ந்த சங்கர் ஏற்பாட்டின் பேரில் சென்றவர்கள் என தகவல்.
*மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் சுற்றுச் சுவரில் இருந்து 100 மீட்டர் தொலைவில் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை…நேரில் ஆய்வு செய்த கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா தகவல்.
* பெங்களூரில் ஏரோனிக்ஸ் இன்டர்நெட் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஃபனிந்திர சுப்ரமணி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி வினுகுமார் கொலை..அலுவலகத்தில் புகுந்து தாக்குதல் நடத்திவிட்டு முன்னாள் ஊழியர் பிலிப் தப்பி ஓட்டம்.