தலைப்புச் செய்திகள் (11-08-2023)

* அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை முடிவடைந்ததை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது அமலாக்கத்துறை… நீதிமன்ற உத்தரவின் பேரில் 24 ஆம் தேதி வரை சிறையில் அடைப்பு.

* விசாரணை முடிவடைந்ததை அடுத்து செந்தில் பாலாஜி வழக்கில் அமலாகக்த்துறை தரப்பில் குற்றப்பத்திரிகை… 4,000 பக்க ஆவணங்கள் இரண்டு இரும்பு பெட்டிகளில் வைத்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பு.

* அரசு பேருந்துக் கழகங்களில் வேலை தருவதாகக் கூறி பணம் வாங்கிய வழக்கில் செந்தில் பாலாஜி மட்டுமே குற்றப்பத்திரிகையில் சேர்ப்பு… வேறு யாரையும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கவில்லை என்று அமலாக்கத் துறை தரப்பில் தகவல்.

* நாங்குநேரியில் ஏழாம் வகுப்பு மாணவனையும் அவனது தங்கையையும் வீடு புகுந்து வெட்டிய வழக்கு மேலும் ஒரு மாணவன் கைது… ஏழு பேர் மீதும் கொலை முயற்சி உட்பட ஒன்பது பிரிவுகளின் கீழ் வழக்கு.

* நாங்குநேரியில் மற்ற மாணவர்களால் வெட்டப்பட்ட மாணவன் சின்னதுரையின் தாயாரிடம் தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார் முதலமமைச்சர் மு.க.ஸ்டாலின்.. அரசு துணையாக இருக்கும் என்று உறுதி.

* மாணவர்களிடையே சாதி, இன உணர்வால் ஏற்படும் வன்முறைகளை தடுக்க ஒருநபர் குழு அமைப்பு…ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் ஒருநபர் குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

* நாங்குநேரியில் ஏழாம் வகுப்பு மாணவனையும் அவனது தங்கையையும் வீடு புகுந்து வெட்டிய வழக்கும் மேலும் ஒரு மாணவன் கைது… ஏழு பேர் மீதும் கொலை முயற்சி உட்பட ஒன்பது பிரிவுகளின் கீழ் வழக்கு.

* மாணவர்களின் பிஞ்சு நெஞ்சில் நஞ்சை விதைப்பது திமுக ஆட்சியில் தொடர்கதையாக உள்ளது என எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.. மாணவர்களுக்கு நன்னெறி வகுப்புகளை நடத்துமாறு அறிவுறத்தல்.

* வருங்காலத்தில் சிறந்த மாணவராக வர வாய்ப்புள்ளவர்கள் சாதிய வன்முறையால் முடக்கப்படுவதை ஏற்க முடியாது… நாங்குநேரி சம்பவத்தில் ஈடுபட்டோர் பின்னணில் உள்ளோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அண்ணாமலை வலியுறுத்தல்.

* “நீட் விலக்கு மசோதாவில் எந்த காலத்திலும் கையெழுத்து போடமாட்டேன் என்று மாணவர்கள் மத்தியில் ஆளுநர் ரவி பேச்சு… மருத்து ஊழலை நீட் தேர்வு தடுத்துள்ளதாகவும், தேசத்திற்கு நீட் தேர்வு கண்டிப்பாக தேவை என்றும் கருத்து

* பணம் இருந்தால் மட்டுமே நீட் தேர்வில் வெற்றி பெற முடியும் என்று ஆளுநரிடம் பெற்றோர் வாக்குவாதம்… ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ படிப்பு கனவாகவே உள்ளதாக வேதனை.

* காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என்று முதலமைச்சர் சித்தராமையா கை விரிப்பு… கேரளா, குடகு மாவட்டத்தில் மிக குறைந்த அளவே மழை பெய்து உள்ளதால் கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லை என்று விளக்கம்.

* உடல்நலக்குறைவால் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதி… ஆஞ்சியோகிராம் மேற்கொள்ளப்பட இருக்கும் நிலையில், 24 மணி நேரம் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
.
* திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் சிறுத்தை தாக்கியதில் 6 வயது சிறுமி உயிரிழப்பு… திருப்பதி கோயிலுக்கு குடும்பத்தினருடன் சென்றபோது சோகம்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *