*ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி வழங்கிய 370-வது சட்டப் பிரிவை நீக்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு … ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி வழங்கிய 370- வது பிரிவு தற்காலிகமானது என்றும் தலைமை நீதிபதி சந்திர சூட் கருத்து.
* லடாக்கை யூனியன் பிரதேசமாக மாற்றியது செல்லும்… அதே வேளையில் ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநிலத் தகுதி வழங்கி, 2024 செப்டம்பருக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் தலைமை நீதிபதி உத்தரவு.
*”இந்தியாவுடன் இணைந்த பிறகு காஷ்மீர் அதற்கான தனித்தன்மையை இழந்து விடுகிவதால் அதன் அரசியலமைப்பு இந்திய அரசியலமைப்போடு இணைந்ததுதான்” … “ஜம்மு காஷ்மீருக்கு என்று தனி இறையாண்மையோ, ஆட்சி உரிமையோ இருக்க முடியாது என்றும் தலைமை நீதிபதி கருத்து.
*ஜம்மு- காஷ்மீர் வழக்கில் 5 நீதிபதிகளில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.ஆர். கவாய், சூர்யா ஆகியோர் ஒத்த தீர்ப்பு… நீதிபதிகள் எஸ்.கே. கௌல், சஞ்சீவ் கன்னா வேறு தீர்ப்பை வழங்கினாலும் அனைத்தையும் ஒரே தீர்ப்பாகதான் கொள்ள வேண்டும் என்றும் தலைமை நீதிபதி உத்தரவு.
*மத்திய பிரதேச மாநில முதலமைச்சராக மோகன் யாதவ், போபாலில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தேர்வு.. சிவராஜ் சிங் சவுகான் அமைச்சரைவியில் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் மோகன்.
*மத்திய பிரதேசத்தில் நான்கு முறை முதலமைச்சராக இருந்த சிவராஜ் சிங் சவுகானுக்கு மீண்டும் முதலமைச்சர் பதவி கிடைக்கவில்லை … மோகன் யாதவ் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் சவுகான் ஆதரவாளர்கள் அதிருப்தி.
*எம்.பி. பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மகுவா மொய்த்ரா உச்சநீதிமன்றத்தில் மனு… அதானி நிறுவனங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்றதாக எழுந்த புகாரில், மகுவா பதவி கடந்த வாரம் பறிப்பு.
*25 ஆண்டுகளாக சிறையில் உள்ள 3 கைதிகளை விடுதலை செய்யக்கோரி, ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகளின் தற்போதைய நிலை என்ன என்று உச்சநீதிமன்றம் கேள்வி…. பிப்ரவரி 2-ம் தேதிக்குள் பதில் தாக்கல் செய்ய ஆளுநர் தரப்புக்கு உத்தரவு.
*செங்கல்பட்டு அருகே நேற்று இரவு சரக்கு ரயில் தடம் புரண்டதால் சென்னை, செங்கற்பட்டு இடையே பாதிக்கப்பட்ட ரயில் போக்குவரத்து மாலையில் சீரானது … சென்னைக்கு சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து மட்டுமே மாலை வரை புறநகர் மின்சார ரயில்கள் இயக்கம்.
*காலையில் செங்கல்பட்டில் இருந்து சென்னைக்கு புறநகர் ரயில்கள் இல்லாததால், பள்ளி, கல்லூரிகள் மற்றும் பணிக்கு செல்வோர் தவிப்பு….திருமால்பூரில் இருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக சென்னை கடற்கரை செல்லும் ரயில் இயக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான பயணிகள் தொங்கியபடி பயணம்.
*நாகப்பட்டிணம் மீனவர்கள் 25 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு உள்ளதை சுட்டிக்காட்டி இந்திய வெளியுறவு அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.. அனைவரையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.
*தேமுதிக தலைவர் விஜயகாந்த் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.. உடல் நலம் மேம்பட்டதால் விடுவிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தகவல்.
*சென்னை மற்றும் புறநகரில் 850 டாஸ்மாக் கடைகளில் பார்களுக்கான உரிமத்தை புதப்பிப்பதற்கான டெண்ர் திறப்பு .. மீதம் உள்ள 350 கடைகளிலும் பார் திறப்பதறக்கு ஒரு வாரத்தில் டெண்டர் விட நடவடிக்கை.
*சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் மதுபான பார் திறப்பு ஏலத்தை ஒத்திவைக்க வேண்டும் .. டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.
*சென்னைக்கு வடக்கே எண்ணுர் கடலில் கலந்த எண்ணெய் கழிவு 20 கிலோ மீட்டர் தூரம் பரவியது .. எண்ணெய் படலத்தை அகற்ற ஹெலிகாப்டர் மூலம் கடலில் ரசாயண பொடி தெளிப்பு.
*திருச்சி பிரணவ் நகைக்கடை உரியமையாளர் மதனை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசுக்கு மதுரை நீதிமன்றம் அனுமதி .. தமிழகம் முழுவதும் பல கோடி ரூபாய் மோசடி செய்த புகாரின் பேரில் ளளகைது செய்யப்பட்டவர் மதன்.
*நடிகை திரிஷா தம்மைப் பற்றி வலைதளத்தில் அவதூறுாக பதிவிட்டத்தை நீக்கக் கோரியும் தம்மை விமர்சனம் செய்த குஷ்பு உள்ளிட்டவர்களிடம் இழப்பீடு கேட்டும் நடிகர் மன்சூர் அலிகான் தொடாந்த வழக்கு விசாரணை …திரிஷாதான் வழக்குத் தொடா்ந்திருக்க வேண்டும் என்று கூறி விசாரணையை 22 ஆம் தேதிக்கு வைத்தது உயா்நீதிமன்றம்.
*காசா முனை மீதான தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்தாவிட்டால் தங்களிடம் பிணைக்கைதிகளாக உள்ள 200 பேரை கொல்ல நேரிடும் ..ஹமாஸ் அமைப்பு கடுமையான எச்சரிக்கை.
*ஹமாஸ் அமைப்பை சேர்ந்த போராளிகள் பலர் சரண் அடைந்து உள்ளனர்.. அந்த அமைப்பை அழிக்கும் நடவடிக்கை விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நம்பிக்கை.