*டாஸ்மாக் கடைகளை மதியம் 12 மணிக்கு திறந்து இரவு 10 மணிக்கு மூடும் நடைமுறையில் மாற்றம் கிடையாது என்று அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு..90 மில்லி மதுவை டெட்ரா பேக்கில் விற்பது பற்றியும் முடிவெடுக்கவில்லை என்று பேட்டி
*மதுவிற்பனை குறைந்து டாஸ்மாக்கிற்கு வருவாய் குறைந்தால் மகழ்ச்சி அடையாளம்.. ஆனால் தவறான இடத்தில் மது விற்பதால் வருவாய் குறைகிறதா என்பதை கண்டறிவது அவசியம் என்றும் அமைச்சர் முத்துசாமி விளக்கம்.
*தேர்தல் குற்றச்சாட்டுக் குறித்த வழக்கில் தடையை மீறி விசாரணை நடத்தியதால் எடப்பாடி பழனிசாமி அவதூறு வழக்கு.. காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் உயர்நீதிமன்றத்தில் நிபந்தனை அற்ற மன்னிப்பு கேட்டதால் வழக்கு முடித்து வைப்பு.
*ஊழல் செய்த அரசு அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்வதை அனைத்து வழக்குகளிலும் பின்பற்ற வேண்டும்..தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
*காங்கேயம் மரவாப்பாளையத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் ஆறு பேர் சென்னை வந்து டி.ஜி.பி. அலுவலகம் முன் தீக்குளிக்க முயற்சி..நில அபகரிப்பு புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை.
*செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு வழக்கில் நீதிபதி கார்த்திகேயன் முன்பு அமலாக்கதுறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதம் நிறைவு.. அடுத்த கட்ட விசாணை வெள்ளிக் கிழமை.
*சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜியின் நீதி மன்றக் காவல் ஜுலை 26 ஆம் தேதி வரை நீட்டிப்பு.. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு.
*அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம்.
*பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைபயணம் ஜுலை 28- ஆம் தேதி ராமேஸ்வரத்தில் ஆரம்பமாக உள்ளதாக அறிவிப்பு..அனைத்துத் தொகுதிகளுக்கும் சென்றுவிட்டு சென்னையில் ஜனவரி 11 ஆம் தேதி பயணத்தை நிறைவு செய்ய முடிவு.
*முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருடைய குடும்பத்தினர் மீதும் அமைச்சர்கள் மீதும் உள்ள புகார்களை திசை திருப்ப ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுகிறார்..எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.
*பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவருவது இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு எதிரானது..திமுக தரப்பில் மத்திய சட்ட ஆணையத்துக்கு கடிதம்.
*விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச இரவு பாட சாலை திட்டம்.. ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது நான்கு பாட சாலைகளை அமைக்குமாறும் சென்னையில் நடந்த இரண்டாவது நாள் ஆலோசனையில் விஜய் வலியுறுத்தல்,
*சென்னையில் போக்குவரத்து சிக்னலில் நேற்று காரை நிறுத்தாமல் சென்றதால் நடிகர் விஜயக்கு ரூ 500 அபராதம்..இன்று ஆலோனைக் கூட்டத்துக்கு செல்லும் போது சிக்னலில் கரை நிறுத்தி, சாலையை அனைவரும் கடந்த பின் பயணம்.
*மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனடைய விண்ணப்பம் செய்கிறவர்களின் கை ரேகை பதிவு கட்டாயம்..நியாயவிலைக் கடைகளில் கை ரேகை பதிவுக்கான கருவி இருப்பதை உறுதி செய்யுமாறும் தமிழக அரசு உத்தரவு.
*சென்னை மாநகர தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதாக புகார்.. மாநகராட்சி அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது.
*சென்னை அடுத்த நெம்மேலியில் உள்ள ஆளவந்தார் அறக்கட்டளை சொத்துகளை தனியாருக்கு தாரைவார்க்கக் கூடாது.. முதலமைச்ருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்.
*தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் கார் முற்றுகை..குடி தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து தருமாறு வலியுறுத்தி கிராமப் பெண்கள் போராட்டம்.
*சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துளுக்கு உரிமை கோரி தீபா மற்றும் தீபக் தாக்கல் செய்த மனு தள்ளுபடி ..பெங்களூர் நீதிமன்றம் நடவடிக்கை.
*கொப்பரை தேங்காய் விலையை உயர்த்தித் தரக் கோரி தேனியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன் விவசாயிகள் போராட்டம்.. சேலம் மாவட்டம் சங்ககிரி மற்றும் மதுரை மாவட்டம் சோழவந்தானில் தேங்காய் வியாபாரிகள் அரசுக்கு எதிராக முழக்கம்.
*சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்தில் இந்திய ஜனநாயக கட்சியின் கொடி பயன்படுத்தப்படுவதாக புகார்.. கொடியின் நிறத்தில் மாற்றம் செய்த பிறகே ஓ.டி.டி. மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியிட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் நிபந்தனை.
*தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வதற்கான ரயில் டிக்கெட் முன் பதிவு ஆரம்பம்..அடுத்த மூன்று நாட்களுக்கு முன் பதிவு செய்யலாம் என்று ரயில்வே அறிவிப்பு.
*பிரான்ஸ் நாட்டின் தேசிய தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை பயணம்..பாரிஸ் நகரப் பயணத்தை முடித்துக் கொண்டு அபுதாபி செல்ல திட்டம்.
*அவதூறு வழக்குத் தொடர்ந்து ராகுல் காந்திக்கு இரண்டு வருட சிறைத் தண்டனை பெற்று தந்த புர்ணேஷ் மோடி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு ..ராகுல் மேல்முறையீட்டு மனு மீது தமது கருத்தையும் கேட்க வலியுறுத்தல்.
*ராஜஸ்தானில் அரசு மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்ட 18 பேருக்கு பார்வைப் பாதிப்பு.. விசாரணை நடத்துமாறு காங்கிரஸ் அரசு உத்தரவு.
*டெல்லியில் யமுனா ஆற்றில் வெள்ள அளவு அதிகரிக்கிறது.. கரையோரம் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துமாறு முதலமைச்சர் கெஜ்ரிவால் உத்தரவு.