*தமிழ் நாட்டின் மணல் அள்ளும் தொழிலின் முக்கிய ஒப்பந்தத் தாரர்களான திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன்,கறம்பக்குடி கரிகாலன் வீடு, அலுவலகம்,மணல் குவாரி ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை … ஒரே நாளில் ஒரே நேரத்தில் சுமார் 40 இடங்களில் நடைபெற்ற சோதனையால் பரபரப்பு.
*சென்னை அண்ணா நகரில் ஆடிட்டர் சண்முகசுந்தரம்,முகப்பேரில் பொதுப்பணி திலகா வீடுகளில் சோதனை …ஓய்வு பெற்ற போக்குவரத்து மோலாளர் நாகராஜின் நுங்கம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பிலு் அமலாக்கத் துறை விசாரணை.
*திருச்சி அருகே கொள்ளிடம், கரூரில் காவரி ஆறு, வேலூர் அருகே பாலாறு மற்றும் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் மணல் குவாரிகளில் நேரடி விசாரணை .. அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவு மணல் எடுத்து பணம் சம்பாதிப்பதாக கூறப்பட்ட புகார்களின் பேரில் நடவடிக்கை.
*சென்னையில் சேப்பாக்கத்தில் உள்ள கனிமவளத்துறை அலுவலகத்திலும் அமலாக்கத்துறை விசாரணை .. மணல் குவாரி எடுத்து நடத்துகிறவர்களிடம் அதிகாரிகளுக்கு உள்ள தொடர்புகளுக்கான ஆதராங்களை திரட்ட நடவடிக்கை.
*டெல்லியில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவு ..அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் தருமாறு ஆணை.
*தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லியில் நான்கு நாள் தங்குவதற்காக பயணம் .. உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்திக்க உள்ளதாக தகவல்.
*நடிகை விஜயலட்சுமியை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றியதாக தொடரப்பட்டு உள்ள வழக்கில் சம்மனை ஏற்று சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் சீமான் ஆஜராகவில்லை .. வழக்கறிஞர் ஆஜராகி விளக்கம்.
*கடந்த 2011- ஆம் ஆண்டில் நடிகை விஜயலட்சுமி நடவடிக்கை எடுக்க வேண்டாம், வழக்கை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்று எழுதி கொடுத்து இருந்தார் .. முடிந்து போன வழக்கில் இப்போது விசாரணை ஏன் என்று சீமான் வழக்கறிஞர் கேள்வி.
*சீமான் வழக்கில் நடிகை விஜயலட்சுமி பகடைக் காய் போன்று பயன்படுத்தப்படுவதாக முன்னார் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து .. திமுக அரசுக்கு ஆதரவாக சீமான் பேசியிருந்தால் நடிகை புகாரை போலீஸ் கண்டு கொள்ளாமல் இருந்திருக்கும் என்றும் பேட்டி.
*சென்னையில் ஏ.ஆர். ரகுமான் இசை நிகழச்சியில் நடந்த குளறுபடிகளை அடுத்து நடவடிக்கை .. பள்ளிக்கரனை காவல் துணை ஆணையர் தீபக் சத்யன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.
*சென்னையில் நுங்கம்பாக்கத்தில் பாஜக நடத்திய போராட்டத்தின் போது போக்குவரத்தை ஒழுங்கப்படு்த்தும் நடவடிக்களை முறையாக கையாளவில்லை என்று விமர்சனம்.. சென்னை கிழக்கு மண்டல காவல் இணை ஆணையரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி டிஜிபி நடவடிக்கை.
*பள்ளிக்கூட மாணவர்கள் போதைப் பொருள் பயன்படுத்துகிறார்களா என்பததை கண்காணிக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு .. தேவையானால் மாணவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தவும் அறிவுறுத்தல்.
*அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 25- ஆம் தேதி ஆஜராக விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவு … சாட்சிகள் பிறழ் சாட்சியாவதை தடுக்க தம்மையும் வழக்கில் சேர்க்குமாறு மனு செய்திருந்தார் ஜெயக்குமார்.
*மத்திய பாஜக அரசு விலை வாசி உயர்வைக் கட்டுப்படுத்த தவறிவிட்டதைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ் கட்சியினர் பல இடங்களில் ரயில் நிலையங்கள் முன் முற்றுகைப் போராட்டம் … ஏரளாமானவர்கள் பங்கேற்று மோடி அரசுக்கு எதிராக முழக்கம்.
*பொங்கள் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல ரயில் டிக்கெட் முன் பதிவு நாளை ஆரம்பம் .. ஜனவரி 11- ஆம் தேதி முதல் 17- ஆம் தேதிக்குள் பயணம் செய்வதற்கு நாளை முதல் செப்டம்பர் 19 -ஆம் தேதி வரை டிக்கெட் பதிவு செய்யலாம் என்று ரயில்வே அறிவிப்பு.
*திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவம் 18- ஆம் தேதி தொடங்குகிறது ..மூலவர் மீது பட்டுத் துணி போர்த்தி கருவறையை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.
*இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரர் குகேஷ் சென்னையில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து.. தமிழக அரசு சார்பில் ரூ 30 லட்சம் பரிசுத்தொகை வழங்கினார் முதல்வர்.
*கேரளாவில் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் மூலம் இரண்டு பேர் இறந்ததை உறுதி செய்தது புனேவில் உள்ள வைரஸ் ஆராய்ச்சி நிறுவனம்.. வவ்வால் மற்றும் பன்றி மூலம் நிபா வைரஸ் பரவுவதால் எச்சரிக்கை ஆக இருக்கும்படி அறிவுறுத்தல்.
*அமைச்சர் உதயநிதி சனாதனம் பற்றி பேசுவதற்கு சோனியா மற்றும் ராகுல் காந்திதான் காரணம் என்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டா புகார் …சனாதன எதிர்ப்புக் கருத்துகளுக்கு இந்தியா கூட்டணி உரிய பதிலை தருமாறும் வலியுறுத்தல்.
*டீசல் வாகனங்களுக்கு பத்து சதவிகிதம் கூடுதலாக ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளதாக பரவிய தகவலுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மறுப்பு .. கூடுதல் வரி விதிக்கும் உத்தேசம் இல்லை என்றும் விளக்கம்.
*ஜி 20 மாநாட்டுக்கு டெல்லி வந்திருந்த கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ பயணம் .. விமான கோளாறு காரணமாக இரண்டு நாள் கூடுதலாக தங்கி இருந்தார் ட்ருடோ.
*சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஷால் நேரில் ஆஜரானதை அடுத்து மார்க் ஆண்டனி படத்தை வெளியிடுவதற்கான தடை நீக்கம்… விஷால் மற்றும் பெற்றேர்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவு.
*ஆப்பிள் நிறுவனம் தமது ஐபோன் 15 சீரிஸ் வகை செல்போன்களை இன்று இரவு அறிமுகம் செய்கிறது.. புது ரக போன்களைப் பற்றி அறிய வாடிக்கையாளர்கள் ஆர்வம்.