*குற்றவாளி என்ற தீர்ப்பு நிறுத்திவைக்கப்பட்டதால் மீண்டும் எம்.எல்.ஏ. ஆகிறார் பொன்முடி…. திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி காலி என்ற அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்…
*நாடு முழுவதும் 2019 முதல் 2024 வரை 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை, அவற்றில் 22,030 தேர்தல் பத்திரங்கள் பணம் ஆக்கப்பட்டு உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் ஸ்டேட் வங்கித் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தகவல்.. மேலும் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 13,109 பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
*ஹரியானா சட்டப் பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நயாப் சிங் சைனி அரசு வெற்றி பெற்றது… புதிய முதல்வராக பாஜகவை சேர்ந்த நயாப் சைனி நேற்று பதவி ஏற்ற நிலையில் பெரும்பான்மையை நிரூபித்தார்.
*பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கில், சபீர் என்பவரை பெல்லாரியில் வைத்து கைது செய்தது என்.ஐ.ஏ…. கைதான சபீர் முக்கிய குற்றவாளி இல்லை என்றும், வெடிகுண்டு வைத்தவருக்கு உதவியவர் எனவும் தகவல்.
*திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகளின் பட்டியல் தலைமைக்கு அனுப்பிவைப்பு… பட்டியலில் மயிலாடுதுறை, கடலூர், தென்காசி ஆகியவற்றை மாற்றுத் தொகுதிகளாக கொடுக்க திமுக சம்மதம் என தகவல்.
*முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத் துறை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு …மாநில போலீசாரின் வழக்குகளின் விசாரணை முடியும் வரை அமலாக்கத் துறை வழக்கின் விசாரணையை நிறுத்தி வைக்குமமாறு செந்தில் பாலாஜி விடுத்த கோரிக்கை நிராகரிப்பு.
*மோசடி வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும் முன் அமலாக்க துறை வழக்கு விசாரணையை துவங்க முடியாது என்பது செந்தில் பாலாஜி தரப்பு வாதம். செந்தில் பாலாஜி மனுவுக்கு ஏப்ரல் 25-க்குள் பதிலளிக்கும்படி அமலாக்க துறைக்கு நீதிபதிகள் உத்தரவு.
*சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை நிறுத்திவைக்கப்பட்டதால் முன்னாள் அமைச்சர் பொன் முடி மீண்டும் எம்.எல்.ஏ.ஆகிறார் … திருக்கோயிலூர் தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய கடிதத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள சட்டமன்றச் செயலகம் முடிவு செய்திருப்பதாக தகவல்.
*போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கின் கூட்டாளி சதா என்பவர் கைது…. சென்னையில் வைத்து கைது செய்து டெல்லி அழைத்துச் சென்றனர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார்.
*பொள்ளாச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்,1,273 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகள் துவக்கம் …. கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டங்களை யும் தொடங்கி வைத்தார் முதல்வர்.
*கடைக்கோடி மக்களிடம் கூட பேசும் முதலமைச்சர் நான்தான்” என்று பொள்ளாச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு …மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செவிமடுப்பவன் தான் தான் என்றும் கருத்து.
*தோல்வி அடைந்து விட்டதாக பலரும் பலவிதமாக பேசினாலும் கவலையில்லை .. பாஜகவுடன் சமத்துவ மக்கள் கட்சியை இணைத்தது பற்றி சரத் குமார் நீண்ட விளக்கம்.
*நடப்பு நிதியாண்டில் இருந்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை …. இதன்மூலம் 1.20 லட்சம் முன்னாள் ராணுவ வீரர்கள் பயன் பெறுவார்கள். என்று அறிவிப்பு.
*தேர்தல் ஆணையரைத் தேர்வுச் செய்வதற்கான குழுவி்ல் முன்பு போன்று தலைமை நீதிபதியையும் சேர்க்கக் கோரும் மனுவை அவசரச வழக்காக எடுத்துதுக் கொண்டு மார்ச் 15 ஆம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு … குழுவில் இருந்து தலைமை நீதிபதியை நீக்கிவிட்டு பிரதமர் நியமிக்கும் அமைச்சர் ஒருவரை குழுவில் சேர்ப்பதற்கு அண்மையில் மத்திய அரசு திருத்தம் செய்தது.
*மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூ பாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று மராட்டிய மாநிலம் துலேவில் நடந்த மகளிர் மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி அறிவிப்பு .. வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 50 விழுக்காடு இடங்கள் ஒதுக்கப்படும் என்றும் உறுதி.
*கிரிக்கெட் டெஸ்ட் பேட்ஸ்மென் தரவரிசையில் நியூசிலாந்து வீரர் வில்லியம்சனுக்கு முதலிடம். இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 2- வது இடம் … இந்திய வீரர்களில் ரோகித் சர்மாவுக்கு ஆறாவது இடமும் ஜெய்ஸ்வாலுக்கு எட்டாவது இடமும் கிடைத்தது.
*ஐசிசி வெளியிட்ட டெஸ்ட் போட்டி பந்து வீச்சாளர்களுக்கான வரிசையில் இந்திய வீரர் அஸ்வின் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தல் … முதலிடத்தில் இருந்த பும்ரா மூன்றாவது இடத்திற்கு சரிவு.
*சர்வதேச ஹாக்கி தர வரிசையில் நான்காவது இடத்திற்கு சரிந்தது இந்தியா … நெதர்லாந்து முதலிடம்,பெல்ஜியம் இரண்டாவது இடம்…. இதற்கு முன்பு நான்காவது இடத்தில் இருந்த ஜெர்மனி ,இந்தியாவை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்திற்கு முன்னேற்றம்.
*பிரபல இயக்குநர் ப.ரஞ்சித் இந்தியில் படம் இயக்குகிறார் … ஜார்கண்ட் மாநிலத்தில் ஆங்கிலேயர் காலத்தில் பழங்குடி மக்களின் நலனுக்காக பேராடிய பிர்சா முன்டாவின் வாழ்க்கை வரலாற்றை பிர்சா என்ற பெயரில் இயக்க முடிவு.
தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447