*யமுனா ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் டெல்லியில் தாழ்வான இடங்களை தண்ணீர் சூழ்ந்தது..பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை. மேட்ரோ ரயில் போக்குவரத்து பாதிப்பு.
*டெல்லியின் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களையும் வெள்ளம் சூழ்ந்தது.. தலை நகரில் குடி தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல்.
*இமாச்சல் பிரதேசத்தில் கன மழையால் பல இடங்களில் நிலச்சரிவு.. முக்கிய சுற்றுலா மையங்களான குலு மற்றும் மணாலி நகரங்கள் முடக்கம்.
*ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து நாளை மதியம் சந்திராயன் – 3 விண்கலத்தை விண்ணில் செலத்துவதற்கு நடவடிக்கை.. 25 மணி நேர கவுண்டவுன் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு ஆரம்பமானது.
*தென்காசி சட்டமன்ற தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் எம்எல்ஏ பழனி நாடார் வெற்றி பெற்றது உறதியானது… தபால் வாக்கு எண்ணிக்கையில் பழனி நாடாருக்கு 1606 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் மோகன் தாசுக்கு 673 வாக்குகளும் கிடைத்திருந்தன.
*நாடளுமன்றத் தேர்தலில் ஒருங்கிணைந்து செயல்படுவதுக் குறித்து பெங்களூரில் எதிர்க்கட்சிகள் 2- வது கட்ட ஆலோசனை.. திமுக சார்பில் பங்கேற்க முக ஸ்டாலின் செல்ல முடிவு
*விலைவாசி உயர்வைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் அதிமுக சார்பில் ஆா்ப்பாட்டம்..எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.
*சென்னையில் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் ஓட்டல்களில் 15 சதவிகிதம் விற்பனை சரிவு.. விலை குறையாவிட்டால் உணவுப் பண்டங்களின் விலையை உயர்த்த நேரிடும் ஓட்டல்கள் சங்கம் அறிவிப்பு.
*விஜய் மக்கள் இயக்கம் தொடங்கும் இரவு நேர பாடசாலை திட்டத்திற்கு தளபதி விஜய் பயிலகம் என பெயர் சூட்டல்… காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 ஆம் தேதி பயிலகங்கள் ஆரம்பமாகிறது.
*வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு.. அலுவலகம் செல்வோர் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்காக சிறப்பு நடவடிக்கை.
*கலைஞர் மகளிர் உரிமத் தொகை திட்டத்தை செயல்படுத்துவதில் முழுக் கவனமும் உள்ளதாக முதல்வர் முக ஸ்டாலின் கருத்து..யாருக்கு எல்லாம் உரிமைத் தொகை அவசியமோ அவர்களுக்கு கிடைக்கும் என்று நம்பிக்கை.
*குடிமகன்களின் வசதிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தும் அரசு மது விலக்கு குறித்து கணக்கெடுப்பு நடத்த தயாரா? பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி.
*நடப்புக் கல்வியாண்டு பொறியியல் கலந்தாய்வு அட்டவணை வெளியீடு.. ஜுலை 28 ஆம் தேதியில் இருந்து மூன்று கட்டங்களாக கலந்தாய்வு நடைபெற உள்ளது.
*அரசு பள்ளிக்கூட மாணவர்கள் 11,804 பேருக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் இடம்..கடந்த ஆண்டை விட 236 மாணவர்களுக்கு கூடுதலாக வாய்ப்பு.
*இந்திய சட்ட ஆணையத்துக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம்.. இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு பொது சிவில் சட்டத்தால் பாதிப்பு ஏற்படும் என்று கருத்து.
*தென்காசி தொகுதியில் நீதிமன்ற உத்தரவபடி தொடங்கிய தபால் வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தம்.. தபால் வாக்குகளில் பதிவு செய்யப்பட்ட 13-சி விண்ணபத்தை சரிப்பார்க்க அதிகாரிகள் மறுத்ததால் குழப்பம்.
*பிரான்ஸ் நாட்டின் தேசிய தினத்தில் பங்கேற்க பாரிஸ் நகரத்துக்குச் சென்றார் பிரதமர் மோடி.. இந்தியா திரும்புகையில் அபுதாபி செல்லவும் திட்டம்.
*26 ரபேல் போர் விமானங்களை பிரான்சிடம் வாங்குவதற்கு இந்திய பாதுகாப்பத் துறை ஒப்புதல்.. கடற்படைக்கு மேலும் 3 நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கவும் அனுமதி,
*மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மன நலம், தோல் மருத்துவம் போன்ற துறைகளுக்கான பேராசிரியர் இடங்களை நிரப்ப நடவடிக்கை..நேர் காணலுக்கான தேதி வெளியானது.
*எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட வெள்ளாண்டி வலசின் தமிழ் நாடு வக்பு வாரியத்துக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலம் மீட்பு.. நீதிமன்ற உத்தரவை அடுத்து பலத்த போலிஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் நடவடிக்கை.
*நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் சென்னையில் ஆலோசனை.. கே.எஸ்.அழகிரி தலைமையில் நடந்த கூட்டத்தில் 64 மாவட்டக் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்பு.
*ஓய்வு பெற்ற காவல் துறை டி.ஜி.பி. ரவி பெயரில் முக நூலில் போலியாக கணக்குத் தொடங்கி மோசடி..சென்னை போலிசில் புகார்.
*கவிஞர் வைரமுத்துக்கு 70- வது பிறந்தநாள்..சென்னை பெசன்ட் நகர் வீட்டுக்குச் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.
*சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த சதுர் வேதி சாமியார் தலைமறைவுக் குற்றவாளியாக அறிவிப்பு.. சதுர்வேதி மீது கொலை,கொள்ளை வழக்குகள் இருப்பதால் காவல்துறை நடவடிக்கை.
*சேலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி பெரியசாமி மர்மக் கும்பலால் தாக்குதல்.. ஒரு நம்பர் லாட்டரி விற்பனைக்கு எதிராக போராடியதால் தாக்கப்பட்டதாக புகார்.
*பள்ளிக் கல்வித் துறை முன்னாள் செயலாளர் பிரதீப் யாதவ், ஆசரியர் தேர்வு வாரியத் தலைவர் லதா இருவரும் நாளை ஆஜராக வேண்டும்.. முதுகலை பட்டதாரி ஆசிரியல் நியமன வழக்கில் உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு.
*உதக மண்டலத்தில் ஆர்.எஸ்.எஸ்.நிகழ்ச்சியில் பங்கேற்க அதன் தலைவர் மோகன் பகவத் வந்து உள்ளதற்கு எதிர்ப்பு.. மதுரையில் இருந்து எதிர்ப்பு தெரிவிப்பதற்காக பேருந்தில் ரகசியமாக வந்த நந்தினி, தீக்சனா ஆகிய இரு பெண்களும் சூலூரில் கைது.
*எலன் மாஸ்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் மின்சாரக் கார் ஆலையை தொடங்க திட்டம்..ரூ 20 லட்சம் ஆரம்ப விலைக் கொண்ட கார்களை ஆண்டுக்கு 5 லட்சம் தயாரிக்க முடிவு.
*லித்துவேனியா நாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் உக்கரைன் அதிபர் ஜெலான்ஸ்கி சந்திப்பு..உக்ரைனுக்கு தேவையான உதவிகளை செய்து தருவாதாக பைடன் உறுதி.
*சென்னையில் நள்ளிரவில் இடி மின்னலுடன் கன மழை.. விமானங்கள் தரை இறங்குவது மற்றும் புறப்படுவது தாமதம் ஆனது.
*விழுப்புரம் மாவட்டம் மணம்பூண்டியில் ஒரே நாளில் 27 சென்டி மீட்டர் மழை கொட்டியது.. முகையூர்,கெடார் போன்ற இடங்களிலும் கன மழை.
*தேனி மாவட்டத்தில சுருளி அருவி வனப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம்..ஐந்தாவது நாளாக அருவியில் குளிப்பதற்கு தடை.
*கேரளாவில் 12 ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்திய கல்லூரி பேராசிரியரின் கை வெட்டப்பட்ட வழக்கில் தீர்ப்பு… 11 பிரதிகளில் ஐந்து பேரை விடுவித்து தீர்ப்பளித்த நிலையில், ஆறு பிரதிகளுக்கு சிறை தண்டனை விதித்து என் ஐ ஏ நீதிமன்றம்.
*மாநகராட்சி மேயர், துணை மேயர்,மன்ற உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் வழங்க உள்ளதாக தமிழக அரசு முடிவு..நகராட்சி தலைவர், துணைத் தலைவர், நகர் மன்ற உறுப்பினர்களுக்கும் மதிப்பூதியம் வழங்க உள்ளதாக அறிவிப்பு.
*மணிப்பூரில் வன்முறையை நிறுத்துமாறு பிரெஞ்சு நகரமான ஸ்ட்ராஸ்பேர்க்கில் கூடிய ஐரோப்பிய பாராளுமன்றம் தீர்மானம்… பிரதமர் மோடி பாரிஸ் சென்று சேருவதற்கு முன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் பரபரப்பு….