*அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிதிகளின் படிதான் அமலாக்கத் துறை கைது செய்து உள்ளது..அவருடைய மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு ஏற்படையது அல்ல என்று உயர்நீதிமன்றத்தில் மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பு.

*கைது செய்யப்பட்ட ஒருவரை தங்கள் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது… கைது செய்யப்பட்டவர்கள் தங்களிடம் விசாரனை நடத்துவதற்கு எந்த தடையும் கேட்கமுடியாது என்றும் நீதிபதி கார்த்திகேயன் கருத்து.

*செந்தில் பாலாஜி வழக்கில் இதற்கு முன்பு நீதிபதி பரத சக்கரவர்த்தி அளித்த தீர்ப்பு சரியானதுதான், அமர்வு நீதிமன்றம் அவரை நீதிமன்றக் காவலில் வைத்ததும் சரியான சட்ட நடவடிக்கையே என்று மூன்றாவது நீதிபதி விளக்கம்.

*உச்சநீதிமன்றத்தில் அமலாக்கதுறை தொடந்த வழக்கு வரும் 24- ஆம் தேதி விசாரணைக்கு வரும் போது எங்களுடைய வாதத்தை முன் வைப்போம்.. தங்களுக்கு எந்த பின்னடைவு இல்லை என்றும் திமுக வழக்கறிஞர் சரவணன் விளக்கம்.

*செந்தில்பாலாஜி மருத்துவமனையில் இருந்த நாட்களை நீதிமன்றக் காவலாக கருத முடியாது.. சிகிச்சை முடிந்தபிறகு அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கவும் மூன்றாவது நீதிபதி அனுமதி.

*சென்னை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திராயன் –3 விண்கலத்ததை வெற்றிகரமாக விண்ணில் ஏவி இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை..நீள் வட்டப்பாதையில் சரியாக நிலை நிறுத்தம்.

*சந்திராயன்-3 விண்கலம் ஆகஸ்டு 23 அல்லது 24 ஆம் தேதி நிலவில் இறங்கும். அதன் பின்னர் அதில் உள்ள ரோவர் கருவி நிலவில் உள்ள கனிமங்கள் பற்றி ஆராய்ந்து படங்களை அனுப்பும்.

*தலைநகர் டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீடு உட்பட முக்கியமான இடங்களையும் தண்ணீர் சூழந்தது. புகழ்பெற்ற செங்கோட்டை சுற்று வட்டாரம் வெள்ளக் காடாகா மாறியது.

*பள்ளிக் கல்லூரிகள் மூடல்,மெட்ரோ ரயில்கள் நிறுத்தம்..டெல்லியின் முக்கிய சாலைகள் அனைத்திலும் போக்குவரத்து நெரிசல்.

*யமுனா ஆற்றில் நாளை தண்ணீர் மட்டம் குறையும் என்று எதிர்பார்ப்பு..வெள்ளம் வடிந்தாலும் டெல்லியில் இயல்புநிலை திரும்ப ஒரு வாரம் ஆகும் என்று கணிப்பு.

*தலைமைச் செயலாளரைத் தொடர்ந்து டிஜிபி சங்கர் ஜிவால் தமிழ்நாடு ஆளுநருடன் சந்திப்பு.. புதிய டிஜிபியாக பொறுப்பேற்றதை அடுத்து ஆளுநரை சந்தித்து வாழ்த்து.

*திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார் அண்ணாமலை. மீண்டும் 24 ஆம் தேதி ஆஜராக விளக்கம் தர உத்தரவு.

*சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் சந்திப்பு. G- 20 மாநாடு தொடர்பாக ஆலோசித்ததாக தகவல்.

*சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட புடவைகள், காலனிகள் உள்ளிட்டப் பொருட்களை ஜெயலலிதா சார்பில் பாஸ்கரிடம் ஒப்படைத்து விட்டோம். . தங்களிடம் இல்லை என்று லஞ்ச ஒழிப்புத்துறை பெங்களூரு நீதிமன்றத்தில் அறிக்கை.

*கோவையில் அவினாசி சாலையில் இருந்து கருமத்தம்பட்டி மற்றும் உக்கடத்தில் இருந்து சத்தி சாலை வரையில் மெட்ரோ ரயில் சேவை.. மதுரையில் திருமங்கலத்தில் இருந்து ஒத்தக்கடை வரை மெட்ரோ ரயில் பாதை அமைக்கவும் அரசிடம் அறிக்கை தாக்கல்..

*மன்னார்குடியில் பிரபல அசைவ ஓட்டலில் பக்கெட் பிரியாணி வாங்கினால் 1 கிலோ தக்காளி இலவசம் என்று அறிவிப்பு .. இலவச தக்காளியை வாங்குவதற்கு பக்கெட் பிரியாணி வாங்க மக்கள் ஆர்வம்.

*எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ்.படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு ஜுலை 20 ஆம் தேதி தொடங்கும்.. மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவிப்பு.

*சென்னை வடபழனியில் டாஸ்மாக் பார் மூடியதால் மதுப்பிரியர்கள் சாலையில் அமர்ந்து மது அருந்தி ரகளை… பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

*உலகத்தின் மிகப் பழமையான மொழியான தமிழ் இந்தியாவுக்கு சொந்தம் என்பது பெருமையாக உள்ளது.. பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவருக்கு சிலை அமைவதும் மகிழ்ச்சி தருவதாக பிரதமர் மோடி பேச்சு.

*பிரான்ஸ் தலைநகர் பாரிசில் தேசிய தினத்தை முன்னிட்டு கண்கவர் அணிவகுப்பு.. பிரதமர் மோடி பங்கேற்பு.

*அருணாச்சல் பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு சீனா உரிமை கோருவதற்கு அமெரிக்கா பதிலடி.. இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் அருணாச்சல் என்று செனட் சபையில் தீர்மானம்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *