*அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் தவறு என்று அமலாக்கத்துறை விளக்கம்….நான்கு முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகததால் தேடிக்கொண்டிருப்பதாக அறிக்கை.
* செந்தில் பாலாஜிக்கு மூளையாக செயல்பட்டு பணப்பறிமாற்றத்தில் ஈடுப்பட்டது அசோக்குமார், அவரின் மனைவி நிர்மலா மற்றும் மாமியார் லட்சுமி..இவர்கள் மூன்று பேரும் சட்டவிரோத பணப்பறிமாற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆதராம் உள்ளதாகவும் அமலாக்க்துறை தகவல்.
*சென்னை அடுத்த குரோம்பேட்டையில் நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவன் தற்கொலையை தொடர்ந்து தந்தையும் தற்கொலை செய்துகொண்ட பரிதாபம்.. அடுத்தடுத்து நிகழ்ந்த மரணங்களால் அனைவரும் அதிர்ச்சி ..
*மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்ளாமல் தன்னம்பக்கையுடன் செயல்பட வேண்டும்.. நீட் தேர்வில் தோல்வி அடைந்து மாணவன் ஜெகதீஷ்வரன் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.
* நீட் தேர்வு விலக்கு மசோதா ஆளுநரின் கையெழுத்துக்காக காத்திருக்கவில்லை, குடியரசுத் தலைவரின் கையெழுத்துக்காகவே காாத்திருக்கிறது.. நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்துப் போட மாட்டேன் என்று ஆளுநர் ரவி கூறுவது அவரின் அறியாமையை காட்டுவதாக மு.க.ஸ்டாலின் அறிக்கை.
*மாணவனின் தந்தை செல்வசேகரன் உடலுக்கு அமைச்சர் உதயநிதி மற்றும் தொல். திருமாவளவன் உட்பட ஏரளாமானவர்கள் அஞ்சலி .. நீட் தேர்வை விலக்க வேண்டும் என்பதே தமிழர்களின் ஒற்றைக் கோரிக்கையாக இருக்கவேண்டும் என்று திருமாவளவன் வேண்டுகோள்.
* ஆட்சிக்கு வந்த உடன் நீட் தேர்வு ரத்துக்கு முதல் கையெழுத்துப் போடுவேன் என்று கூறி ஆட்சிக்கு வந்த மு.க.ஸ்டாலின் நீட் தேர்வுக்கு விலக்குப் பெறவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை… எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.
* பெண்கள் அதிகாரம் பெறுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்… 77ஆவது சுதந்திர தின உரையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரை கோரிக்கை
* இந்தியா உலக அரங்கில் தனக்கான சரியான இடத்தைப் பெற்றுள்ளது மட்டுமல்லாமல், சர்வதேச ஒழுங்கிலும் தனது நிலையை உயர்த்தியிருக்கிறது… உலகம் முழுவதும் வளர்ச்சி மற்றும் மனிதாபிமான இலக்குகளை ஊக்குவிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக குடியரசு தலைவர் பெருமிதம்.
*சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் தரும் தேநீர் விருந்தில் திமுக பங்கேற்காது.. நீட் தேர்வுக்கு ஆதவராக பேசுவதால் புறக்கணிப்பதாக ஸ்டாலின் அறிவிப்பு.
*காவிரியில் விநாடிக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும்.. உச்ச நீதி மன்றத்தில் தமிழ் நாடு அரசு வழக்குத் தாக்கல்.
*தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டாம். . கர்நாடக முன்னாள் முதலமைச்சரும் பாஜக தலைவருமான பொம்மை, முதலமைச்சர் சித்தராமய்யாவுக்கு கடிதம்.
*ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த இரண்டு ரயில்களில் ஒங்கோல் அருகே நள்ளிரவில் கொள்ளை.. நகை மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓட்டம்.
*ரயிலில் நகை பணம் இழந்த பயணிகள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்ததும் புகார்.. ஆந்திரா போலிசுக்கு தகவல் அனுப்பி விசாரணை நடத்த நடவடிக்கை.
* என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடந்த 20 நாட்களாக நடத்தி வந்த வேலைநிறுத்தப் போராட்டம் நிறுத்தம்.. கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் நடத்திய பேச்சு வாத்தையை அடுத்து வேலைநிறுத்தம் வாபஸ்.
*சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கான குடியரசுத் தலைவர் விருது,சுதந்திர தினத்தை முன்னிட்டு அறிவிப்பு.. தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ், ஐ.ஜி. பவானிஸ்வரி உள்ளிட்ட 19 அதிகாரிகள் விருதுக்கு தேர்வு.
*வழக்குத் தொடப்பான ஆவணங்கள், குற்றப்பத்திரிகை நகல் உள்ளிட்டவற்றை வழங்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிடக் கோரிக்கை .. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மனுத் தாக்கல்.
* மதுரையில் ஆகஸ்டு 20- ஆம் தேதி நடை பெறும் அதிமுக மாநட்டை முன்னிட்டு தொடர் ஜோதி ஓட்டம்..சென்னையில் இருந்து புறப்ட்ட ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி.
* சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழு நெல்லை சென்றது.. நான்கு நேரியில் மற்ற மாணவர்களால் வெட்டப்பட்ட மாணவன் சின்னத்துரைக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை.
*சாலை, குடிநீர், பாதள சாக்கடை போன்ற திட்டங்களை சிறப்பாக மேற்கொண்டதன் பேரில் திருச்சி, சிறந்த மாநகராட்சியாக தேர்வு.. நாளை விருது வழங்கி கவுரவிக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
*திருப்பதி மலைப் பாதையில் இன்று காலை சிறுத்தை ஒன்று கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட நிலையில் மேலும் ஒரு சிறுத்தை நடமாட்டம்.. பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம்.
* நிலவுக்கும் சந்திராயன்-3க்கும் இடையிலான தூரம் மூன்றாவது முறையாக குறைப்பு.. வெற்றிகரமாக 30 நாட்களை கடந்து நிலவை நோக்கி சந்திராயன் பயணித்து வருவதாகவும் இஸ்ரோ தகவல்.
*இமாச்சல பிரதேசத்தில் மாண்டி மாவட்டத்தில் மேகவெடிப்பினால் கன மழை, நிலச்சரிவு .. கடந்த 24 மணி நேரத்தில் 21 பேர் உயிரிழந்துவிட்ட பரிதாபம்.
* விலகிப் போன அஜித் பவாரை தாம் சந்தித்ததால் மாரட்டியத்தில் தேசிய வாத காங்கிரஸ் அங்கம் வகிக்கும் கூட்டணியில் குழப்பம் இலலை என்று சரத்பவார் அறிவிப்பு .. எதிர்க்கட்சிகளின் அமைப்பான இந்தியாவின் கூட்டம் திட்டமிட்டபடி மும்பயைில் நடைபெறும் என்று அறிவிப்பு.
*சென்னை மற்றும் புறநகரில் விடிய,விடிய கொட்டித் தீர்த்த கன மழையால் சாலைகள் வெள்ளக் காடனது.. திருவள்ளூர் மாவட்டம் ஜமீன் கொரட்டூரில் அதிக பட்சமாக 14 சென்டி மீட்டர் மழை பதிவு.
* தமிழ் நாட்டின் வட மாவட்டகளில் அடுத்து 24 மணி நேரம் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.. சென்னை வானிலை மையம் தகவல்.
*கடந்த ஜூன் முதல் தேதி முதல் இதுவரை162 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.. இது இயல்பை விட 6 சதவிகிதம் அதிகம் என்று வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டி.