*மக்களவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நாளை அறிவிக்கிறது…. மக்களவை தேர்தல் தேதியை நாளை பிற்பகல் 3 மணிக்கு வெளியிடுகிறது தேர்தல் ஆணையம்.
*தேர்தல் பத்திர எண்கள் உட்பட அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் வழங்க எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….. தேர்தல் பத்திரத்தின் எண்கள் இல்லாததால் யார் யார் எந்த கட்சிக்கு நன்கொடை வழங்கினர் என்பது தெரியவில்லை என்பது புகார்.
*தேர்தல் பத்திரங்கள் மூலம் ₹6,060 கோடியை நன்கொடையாக பெற்று பாஜக முதலிடம்….திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ₹1,609 கோடி நன்கொடை பெற்று 2வது இடத்திலும், காங்கிரஸ் ₹1,421 கோடி பெற்று 3வது இடத்திலும் உள்ளன.
*தமிழ்நாட்டைச் சேர்ந்த மார்ட்டின் என்பவரின் ஃபியூச்சர் கேமிங், ஓட்டல் சர்வீசஸ் நிறுவனம் அதிபட்சமாக ரூ 1,368 கோடி வழங்கி நாட்டிலேயே முதலிடம். .. ஐதராபாத்தைச் சேர்ந்த மேகா இன்ஜினியரிங் மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் நிறுவனம் ₹966 கோடியும், க்விக் சப்ளை செயின் நிறுவனம் ₹410 கோடியும் வழங்கி உள்ளன.
* கடந்த 2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி வரை மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன, அதில் 22,030 பத்திரங்கள் ரொக்கமாக மாற்றப்பட்டு அரசியல் கட்சிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளன….எஞ்சிய 187 பத்திரங்களின் தொகை பிரதமரின் தேசிய நிவாரண நிதி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
*தமிழ்நாட்டில் புதுக்கோட்டை,நாமக்கல், திருவண்ணாமலை,காரைக்குடி ஆகிய 4 நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்வு…..ஒவ்வொரு நகராட்சியும் அருகே உள்ள பேரூராட்சிகள், ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக்குவதற்கான நடைமுறைகளை தொடங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.
*மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு….மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவைத் தொகுதி வேட்பாளராக சு.வெங்கடேசன் மீண்டும் போட்டி. திண்டுக்கல்லில் சச்சிதானந்தம் போட்டி என மார்க்சிஸ்ட் கம்யூ. அறிவிப்பு.
*எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது…. காரைநகர் பகுதியில் மீன் பிடித்தபோது தமிழக மீனவர்களை கைது செய்து படகையும் பறிமுதல் செய்து விசாரணை.
*பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகர் எஸ் வி சேகருக்கு விதிக்கப்பட்டு உள்ள ஒரு மாத சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு… மேல் முறையீட்டு மனுவை ஏற்று உயர் நீதிமன்றம் நடவடிக்கை.
*மக்களவை தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி வழக்கு …. தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிபதிகள் நோட்டீஸ்.
*கோவையில் வருகிற 18ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பாஜகவின் ‘ரோடு ஷோவுக்கு’ அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு….பாதுகாப்புக் காரணங்களுக்காக பாஜகவின் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுத்திருந்தது காவல்துறை.
*இந்தியா கூட்டணியின் கர்வத்தை தமிழ்நாடு அடக்கும் என்று கன்னியாகுமரி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு… காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாஜக அலை வீசுவதாகவும் கருத்து.
*கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு….. 17 வயது சிறுமியின் தாயார் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரின் பேரில் பெங்களூரு போலீசார் நடவடிக்கை. ஒரு வழக்கு தொடர்பாக எடியூரப்பாவிடம் உதவி கேட்க சென்றபோது பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்த்தாக புகார்.
*புதிய தேர்தல் ஆணையர்களாக நேற்று நியமிக்கப்பட்ட ஞானேஷ்குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து பதவியேற்பு…. உத்தரகாண்ட் மாநில தலைமை செயலாளராக பணியாற்றிவர், சுக்பீர் சிங் சாந்து.
*பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2 குறைத்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு அமலுக்கு வந்தது ….சென்னையில் ஒரு லிட்டர்பெட்ரோல் 1.88 ரூபாய் குறைந்து 100.75க்கு விற்பனை… டீசல் ஒரு லிட்டர் 1.90 ரூபாய் குறைத்து ரூ.92.34 என்ற விலைக்கு வந்தது.
*தெலங்கானா மாநில முன்னாள் முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் மகள் கவிதாவை அதிரடியாக கைது செய்தது அமலாக்கத்துறை….டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள், கவிதாவின் இல்லத்தில் நடந்த சோதனையை தொடர்ந்து கைது நடவடிக்கை.
*ரஷ்யாவில் அதிபர் பதவிக்கான தேர்தலில் வாக்குப்பதிவு… அதிபர் புட்டினுக்கு கடுமையான எதிர்ப்பு இல்லாத்தால் மீண்டும் அதிபர் ஆகிறார்.
தினக்குழல் வாட்ஸ்ஆப் சேனலில் வெளியாகும் செய்திகளை உடனுக்குடன் அறிய… இணைக! Follow the Dinakuzhal channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFEpnkHltY6fWh1D447