தலைப்புச் செய்திகள்…(18-07-2023)

*காங்கிரஸ், திமுக, திரினாமூல், இடதுசாரிகள் உள்ளிட்ட 24 கட்சிகளின் கூட்டணிக்கு “இந்தியா” என்று பெயர் வைப்பு… பெங்களூரில் நடந்த கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு. அடுத்தக் கூட்டத்தை மும்பையில் நடத்த உள்ளதாக அறிவிப்பு.

*பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் ஆசைப்படவில்லை..ஆட்சி அதிகாரத்திற்க்காக எதிர்க்கட்சிகள் ஒன்று சேரவில்லை என்று மல்லிகார்ஜுன கார்கே விளக்கம்.

*எதிர்க்கட்சிகள் பெங்களூரில் கூடியது ஊழலை ஊக்குவிக்கவே என்று பிரதமா் மோடி விமர்சனம்.. ஊழல் வழக்குகளை சந்திக்கும் திமுகவுக்கு நற்சான்று கொடுப்பதாகவும் கருத்து.

*மக்களால் மக்களுக்காக என்பது ஜனநாயக அடிப்படை.. ஆனால் ஊழல், ஊழலக்காக மற்றும் குடும்பம்,குடும்பத்திற்காக என்பது எதிர்க்கட்சிகளின் நோக்கமாக இருப்பதாகவும் மோடி புகார்.

*தேசிய ஜனநாயக் கூட்டணியில் இடம் பெற்று உள்ள 38 கட்சிகள் பாஜக தலைமையில் டெல்லியில் ஆலோசனை..எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, ரெங்கசாமி உள்ளிட்டவர்களும் பங்கேற்பு.

*அமைச்சர் பொன்முடி, மகன் கெளதம சிகாமணி இருவரும் சென்னை அமலாக்கதுறை அலுவலகத்தில் ஆஜர்.. நேற்று நடைபெற்ற சோதனை மற்றும் விசாரணை விடியற்காலை முடிவடைந்ததை அடுத்து 2- வது நாள் விசாரணை.

*சென்னை புழல் சிறையில் மருத்துவமனையில் செந்தில் பாலாஜி சேர்ப்பு.. பை பாஸ் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர் என்பதால் மருத்துவர்கள் கண்காணிப்பு.

*எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலை ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரும் ஆர்.எஸ்.பாரதி மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதின்றம்..ஆட்சி மாறியதால் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிப்பு.

*ஜல்லிக்கட்டு சட்டம் செல்லும் என்று அளிக்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி பீட்டா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு.. மராட்டியம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் பாரம்பரிய விளையாட்டுகளுக்கு தடை விதிக்கவும் கோரிக்கை.

*சதுரகிரி மலைப் பாதையில் காட்டுத் தீ.. கீழே இறங்க முடியாமல் மலையில் தங்க வைக்கப்பட்டு இருந்த பக்தர்கள் பாதுகாப்பாக தரையிறக்கம்.

*முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தை தவறாக சித்தரித்து முகநூலில் பதிவு செய்ததாக வழக்கு.. சிதம்பரம் அருகே பா.ஜ.க.நிர்வாகியை கைது செய்து விசாரணைக்காக நெல்லை கொண்டு சென்றது போலிஸ்.

*சட்டவிரோதமாக விற்கப்பட்ட கோயில் சொத்துகள் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.. இந்து சமய அற நிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

*புழல் சிறைக்கு அழைத்து வரப்பட்ட கைதியிடம் பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களை போலிசார் மறைத்து வைத்ததாக புகார்..போலிசாருக்கு துணை போனதாக சிறை வார்டனை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை நடவடிக்கை.

*காலையில் மதுவிற்பனை செய்வதற்கு அமைச்சர் முத்துசாமி சொன்ன விளக்கத்திற்கு அண்ணாமலை கண்டனம்.. தூய்மைப் பணியாளர்களுக்கு போதிய உபகரணங்களை வழங்குமாறு வலியுறுத்தல்.

*சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட நினைவு நாள்..தமிழ் நாட்டின் புகழ் நாடு முழுவதும் பரவட்டும் என்று மு.க.ஸ்டாலின் வாழ்த்து.

*கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்காரபுரம் மற்றும் திருக்கோவிலூர் வட்டங்களை சீரமைத்து வாணாபுரம் என்ற புதிய வட்டம்..85 வருவாய் கிராமங்களை உள்ளடக்கியதாக புதிய வட்டம் இருக்கும் என்று அறிவிப்பு.

*அவதூறு வழக்கில் விதிக்கப்ட்ட 2 வருட சிறைத்தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரும் ராகுல் காந்தியின் மேல்முறையீடு.. ஜுலை 21-ஆம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முடிவு.

*கேரளா முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டி பெங்களூர் மருத்துவனையில் காலமானார்..சோனியா, ராகுல், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி.

*உம்மன் சாண்டி கேரளாவில் இரண்டு முறை முதலமைச்சராக இருந்தவர்.. மறைவை ஓட்டி மாநில அரசு சார்பில் துக்கதினம் அனுசரிப்பு.

*பாலியல் வன்கொடுமை வழக்கு.. இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷனுக்கு இரண்டு நாள் மட்டும் முன் ஜாமீன் வழங்கியது டெல்லி நீதிமன்றம்.

*யமுனை ஆற்று வெள்ளம் ஆக்ராவில் தாஜ்மகால் சுவரை தொட்டுக் கொண்டு ஓட்டம்.. சுற்றுலாப் பயணிகள் புதிய காட்சியைக் கண்டு வியப்பு.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *