தலைப்புச் செய்திகள்..(19-07-2023)

*ஆளுநர் பதவியில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்குவதுப் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி திமுக நோட்டீஸ்.. விலைவாசி உயர்வுக்கும் எதிர்ப்பு தெரிவிக்க திமுக திட்டம்.

*பெங்களூரில் குண்டு வெடிப்புகளை நடத்தி சேதங்களை ஏற்படுத்தும் சதித் திட்டம் முறியடிப்பு.. தீவிரவாதிகள் 5 பேரை கைது செய்து வெடிப்பொருட்கள் பறிமுதல்.

*நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி.. எடப்பாடி பழனிசாமி பதிலால் பாஜக வட்டாரங்கள் அதிர்ச்சி.

*40 தொகுதிகளையும் நாடாளுமன்றத் தேர்தலில் வெல்ல வேண்டும்..தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.

*தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் குவார்ட்டர் பாட்டில் மது விலை பத்து ரூபாய் அதிகரிப்பு.. முழு பாட்டிலுக்கு ரூ 320 வரை விலையை உயர்த்தி நடவடிக்கை.

*முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் பொன்முடி சந்திப்பு.. அமலாக்கத்துறை சோதனை மற்றம் விசாரணை குறித்து விளக்கியதாக தகவல்.

*செம்மண் எடுத்து விற்ற பணத்தை இந்தோனேசியாவில் முதலீடு செய்த வழக்கு.. பொன்முடி மகனும் கள்ளக்குறிச்சி எம்.பி.யுமான கௌதம் சிகாமணி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்.

*அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை புழல் சிறையில் கட்டில்,மெத்தை, பேன் வசதி..தினமும் பழங்கள், வாரத்தில் மூன்று நாட்கள் கோழிக்கறி வழங்கவும் நடவடிக்கை.

*ரம்மி போன்ற ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்து சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரமில்லை..சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்.

*தமிழ்படங்களின் படப்பிடிப்பை தேவையின்றி வெளி மாநிலங்களில் நடத்தக் கூடாது..தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சங்கத் தலைவர் ஆர்.கே.செல்வமணி வலியுறுத்தல்.

*பருத்தி நூல் விலை உயர்வால் தமிழ்நாட்டில் ஜவுளித் தொழில் கடுமையாக பாதிப்பு.. நூல் மீதான இறக்குமதி வரி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம்.

*கடலூர் அண்ணா கிராம ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலிஸ் சோதனை.. கணக்கில் வராத ரூ 3 லட்சம் பறிமுதல்.

*ஆசிரியர்கள் பணி மாறுதல் கலந்தாய்வு தள்ளிவைப்பு.. பணி மாறுதல் கோரி விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கி பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.

*குண்டர் சட்டம் பிறப்பிக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியர்களிடமே தொடர வேண்டும்.. அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அளித்த பதில் உயர்நீதிமன்றத்தில் ஏற்பு.

*அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தங்களையும் சேர்த்துக் கொள்ளக் கோரி அமலாக்கத் துறை தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனு.. தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை எதிர்ப்பு.

*நிறுவனங்களிடம் இருந்து மது வாங்கும் விவரத்தை தெரிவிக்க டாஸ்மாக் நிறுவனத்திற்கு விலக்குத் தர முடியாது.. அடுத்து 15 நாட்களுக்குள் பதில் தருமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு.

*பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்றம் நாளை கூடுகிறது.. இரு அவைகளையும் சுமூகமாக நடத்துவதுக் குறித்து மத்திய அரசு அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை.

*குஜராத் மாநில 2002- ஆம் ஆண்டு கலவர வழக்கில் சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா செட்வால்ட்- க்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்.. உடனே சரணடையுமாறு குஜராத் உயர்நீதிமன்றம் பிறப்பித்து இருந்த உத்தரவுக்கு தடை.

*கர்நாடக சட்டசபையில் துணை சபாநாயகர் மீது காகிதங்களை வீசி ரகளை .. பாஜக எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் சஸ்பெண்ட்.

*யமுனை ஆற்றில் வெள்ள அபாயம் நீங்கியது..தாஜ்மகால் சுவரை தொட்டு ஓடிய தண்ணீர் குறைந்தது.

*உத்தர்கண்ட் மாநிலத்தில் உயர் அழுத்த மின்சார டிரான்ஸ்பார்மர் வெடித்து விபத்து..17 பேர் உயிரிழந்த பரிதாபம்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *